Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

ரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகும்போது, வீம்பாக சில சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீஸாகுமே... அப்படித்தான் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார் டி.ஆர்! பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் கட்சிப்பெயரில் ‘இ’ சேர்த்தும், கட்சிப் பேனரில் ஜெயலலிதாவைச் சேர்த்தும் கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார். சரி, அவருக்குத்தான் சீரியஸ்னெஸ் இல்ல, நாமாவது மற்ற கட்சிகளை ஓரங்கட்ட அவருக்கு சீரியஸா சில யோசனைகள் சொல்வோம்.

கம்பேரிஸன் கோவாலு!

• டி.ஆரின் சமீபத்திய பேட்டியில், ‘‘என் மகன் சிலம்பரசன் கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடியவர்’’ என்று சிரிக்காமல் சொல்லியுள்ளார். ‘‘இறைவன் அருளால் போடப்போகிறேன் பிள்ளையார் சுழி, என் வழி தனி வழி’’ என்று பிள்ளையாரையும் துணைக்கு அழைத்திருக்கிறார். அப்படியே மிச்சம் இருக்கும் பாளையத்தம்மன், பொட்டு அம்மன் போன்ற தெய்வங்களையும் துணைக்கு அழைத்தால் ரஜினியின் ஆன்மிக அரசியலை ஓரங்கட்டிவிடலாம்.

• களத்தைக்காட்டிலும் ட்விட்டரில்தான் அதிகம் வெளுத்துவாங்குகிறார் கமல். எனவே, அவரை டி.ஆர் ட்விட்டரில் சந்திப்பதுதான் சரி. ‘டி.ஆரை வரவேற்கிறது ட்விட்டர், எதிரிங்க வாய்க்கு இனி ஷட்டர், என்கிட்ட போடமுடியாது மீட்டர், கோவம் வந்தா நான் ஒரு ஹீட்டர்’ என முதல் ட்வீட்டிலேயே அடித்து ஆடலாம். ஆண்டவரின் அத்தனை ஃபாலோயர்களும் அணிமாறிவிடுவார்கள்.

• கட்சி அமைப்பைப் பொறுத்தவரை, பி.ஜே.பி-க்கும் இ.தி.மு.க-வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே, டி.ஆரை வித்தியாசப்படுத்திக் காட்டப்போவது அவரின் பேச்சுதான். பி.ஜே.பி தலைவர்கள் பங்கேற்கும் அத்தனை டி.வி விவாதங்களிலும் டி.ஆர் ஆஜரானால் போதும்... அவர்களே டெல்லிப் பக்கம் ஜாகை மாற்றிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

• ‘வைகோவின் கட்சி அலுவலகம் தாயகம்.. அவரோட கட்சிப்பெயரோ மறுமலர்ச்சி தி.மு.கழகம்... ஆனா, அவர் எனக்குத்தான் காப்பிரைட் தரணும். காரணம், நான் முதல்ல ஆரம்பிச்ச கட்சிப்பேரு தாயக மறுமலர்ச்சி கழகம். இதனால அவருக்கு ஆகப்போகுது கலக்கம்’ என கேஸ் போட்டு வைகோவை நடையோ நடை என நடக்கவைக்கலாம்.

• ‘என் மகன் சிம்பு பிக்பாஸுக்கெல்லாம் முன்னாலேயே ரியாலிட்டி ஷோ சர்ச்சைகளால் பிரபலமானவர். எனவே, ஓவியாவைவிட சிம்புவுக்கு ஓட்டுகள் அதிகம் விழும்’ என ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் விட்டால் போதும். அன்புமணியை வம்புக்கு இழுத்துவிடலாம். ஏற்கெனவே ரஜினி, கமல் என்ட்ரியால் பரபரப்பாகியிருக்கும் பா.ம.க., இதற்குப்பின் இன்னும் பரபரப்பாகிவிடும்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி