Published:Updated:

பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்

பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்
பிரீமியம் ஸ்டோரி
பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்

பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்

பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்

பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்

Published:Updated:
பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்
பிரீமியம் ஸ்டோரி
பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பாண்டியன், பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று சஸ்பெண்டு செய்யப்பட்டது காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ‘உயர் வருவாய்ப்பிரிவு மனை’ நேரடியாகவே ஒதுக்கப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடுகளும் விதிமீறல்களுமே இந்த சஸ்பெண்டுக்குக் காரணம்.

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில், வீட்டுவசதி வாரியத்தின்மூலம் வீடு - நிலம் ஒதுக்கீடு செய்வதில் பல முறைகேடுகள் நடந்தன. அன்றைய முதல்வர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகளான பாண்டியன், வினோதன், கணேசன் ஆகியோருக்கும் முறைகேடாக வீட்டுமனைகள் தரப்பட்டன. ‘சமூக சேவகர்’ பிரிவைப் பயன்படுத்தித் தன் மனைவி மீனா பெயரில் பாண்டியன் நிலம் வாங்கினார். மீனா, வினோதன், கணேசன் ஆகிய மூவருக்கும் தலா 4,750 சதுர அடி மனைகள், முகப்பேரில் உயர் வருவாய்ப் பிரிவின் கீழ் (மனை எண்கள் 1023, 1024, 1025) 18.3.2008 தேதியில் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மனையின் அரசாங்க மதிப்பும் ரூ.75 லட்சம். இந்தத் தொகையை, 10 நாள்களுக்குள் (31.3.2008) மூவரும் கட்டினர். 2008-ம் ஆண்டுச் சந்தை மதிப்பின்படி, அந்தப் பகுதியில் ஒரு கிரவுண்டு நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி.

பலே பாண்டியா! - கண்ணாமூச்சி ஆடும் போலீஸ்

‘மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வாங்கும் பாண்டியன், வினோதன், கணேசன் ஆகியோர் ஒரே நாளில் எப்படி 75 லட்சம் ரூபாயை எப்படிக் கட்ட முடிந்தது? அவர்கள், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கலாம்’ என்று ‘ஃபேக்ட் இண்டியா’ என்ற அமைப்பைச் சேர்ந்த செல்வராஜ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் கொடுத்தார். அதன்மீது ஒரு வருடம் வரை நடவடிக்கை இல்லை. எனவே, அவர் நீதிமன்றத்தை நாடினார். ‘இதுகுறித்து டி.ஜி.பி விசாரணை நடத்துவார்’ என அரசுத் தரப்பு சொன்னதால், வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. டி.ஜி.பி விசாரணையின் முடிவில், ‘மூன்று பேரும் தங்களால் பணம் கட்ட முடியாத நிலையில், அந்த நிலத்தை இன்னொருவர் வாங்குவதற்குக் கூட்டு ஒப்பந்தம் (Joint Venture) செய்துகொண்டார்கள். அதன்படி, நிலத்தை வாங்குபவர் இந்த மூன்று பேருக்காகவும் பணத்தை வீட்டு வசதி வாரியத்தில் செலுத்தினார். இதனால், இவர்கள்மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த குற்றச்சாட்டு எழவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், இவர்கள் மூவர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் வழக்கு பதிந்து, அவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தியது. எல்லோரும் இதைக் கிட்டத்தட்ட மறந்திருந்த நிலையில், பிப்ரவரி 28-ம் தேதி பணியில் இருந்து பாண்டியன் ஓய்வுபெறவிருந்த நிலையில், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

‘‘கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரின் நிழலாகவே பாண்டியன் வலம் வந்தார். அப்போது பாண்டியனால் பலன்பெற்ற அதிகாரிகள் இப்போதும் அதிகார மையங்களில் இருக்கிறார்கள். அந்தச் செல்வாக்கை வைத்து சஸ்பெண்டு விவகாரத்தை உடைத்துவிட்டு வெளியே வருவார் பாண்டியன்’’ என்றனர் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர். இன்னொரு தரப்பினரோ, ‘‘கருணாநிதி ஆட்சியின்போது, மூன்று போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகப் பாண்டியன் இருந்தார். அவர்கள்தான் இப்போது பாண்டியனைப் பழிவாங்கியுள்ளனர்’’ என்கிறார்கள்.

பாண்டியனிடம் பேசினோம். ‘‘என் மனைவிதான் அந்த இடத்தை வாங்கினார். நிலம் வாங்கும் நடைமுறையில், ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் அனுமதியைப் பெற்றோம். ரூ.75 லட்சம் கொடுத்து அந்த இடத்தை வாங்க முடியாத நிலையில், கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. பெரிய இடத்தில் பணியாற்று வதால் தப்பு நடந்துவிடக் கூடாது என்பதற்காகக் கூட்டு ஒப்பந்தம் போடும் நேரத்திலும் துறையில் அனுமதி வாங்கினோம். அதன்படி விநோதன், கணேசன் ஆகியோருக்கான இடங்கள் உள்பட மூன்று இடங்களுக்குமான மொத்தப் பணத்தையும் அவர்களே கட்டி விடுவார்கள். இடத்தை புரோமோட் செய்யும் போது, 1,500 சதுர அடி கட்டடம் எங்களுக்குத் தரப்படும் என்பதுதான் கூட்டு ஒப்பந்தத்தின் நிபந்தனை. மொத்தப் பணத்தையும் அந்த உரிமையாளரே கட்டி விட்டார். இடையில் அந்த உரிமையாளர் இறந்து விட்டார். அவருடைய மகள்களால் அந்த இடத்தை புரோமோட் பண்ண முடியாத நிலை இருந்தது. கடைசியில் அந்த இடத்துக்கான தொகையை வாங்கிக்கொள்ளலாம் எனச் சொன்னார்கள். அதற்கும் துறையின் அனுமதியை வாங்கினோம். அந்த இடத்துக்காக அப்போது கொடுக்கப்பட்ட 19 லட்ச ரூபாய்க்கு வருமான வரியும் கட்டப்பட்டது. மீதித்தொகை அப்படியே வங்கியில் இருக்கிறது. இப்போதுகூட நாங்கள் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். அந்த இடத்தை வைத்து எங்களுக்கு எந்த லாபமும் ஏற்படவில்லை. தேவை யில்லாத மன உளைச்சல்தான்’’ என்றார்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படம்: கே.கார்த்திகேயன்