Published:Updated:

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

Published:Updated:
கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

மிழகத்தில் ஆண்டுதோறும் அரங்கேறும் ஒரு வைபவம்... கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மாநாடு. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறாத நிலையில், எடப்பாடி ஆட்சியில் முதன்முறையாக இந்த மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. தி.மு.க ஆட்சியில் நடக்கும் மாநாடுகளில் அமைச்சர்களின் குறுக்கீடுகள் இருக்கும். ஜெ. ஆட்சியில் ஒன் வுமன் ஆர்மியாக மொத்த மாநாட்டையும் அவரே நடத்துவார். இப்போது, அப்படியான சுவாரஸ்யங்கள் இல்லை.

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில்தான் இந்த மாநாடு வழக்கமாக நடைபெறும். இந்த ஆண்டும் அதே ஸ்பாட்தான். ஆனால், காட்சிகள் வேறு. ஜெயலலிதா காலத்தில், மாநாட்டு அரங்கத்துக்குள் முதலிலேயே அமைச்சர்கள் நுழைய மாட்டார்கள். நாமக்கல் கவிஞர் மாளிகையின் போர்ட்டிகோவில் அணிவகுப்பு மாதிரி காத்திருப்பார்கள். போர்ட்டிகோ பக்கத்தில் இருக்கிற வி.வி.ஐ.பி லிஃப்டில் ஜெயலலிதா ஏறி, 10-வது மாடிக்கு வருவார். அதில் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி தவிர வேறு யாரும் போக மாட்டார்கள். அதன் பக்கத்திலேயே இருக்கிற வி.ஐ.பி லிஃப்டில் சீனியர் அமைச்சர்கள் மட்டும் அடித்துப் பிடித்து ஏறி, 10-வது மாடிக்குப் போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொள்ள பெரும்பாடுபடுவார்கள். இந்த லிஃப்ட் இறங்கி வந்த பிறகு, கீழே இருக்கிற மற்ற அமைச்சர்கள் அந்த லிஃப்ட்டுக்குள் மூச்சுமுட்ட நின்றபடியே கூட்ட அரங்கில் அடித்துப் பிடித்து நுழைவார்கள். புரோட்டோகால் படி ஒவ்வோர் அமைச்சரும் வரிசைப்படி அமர வேண்டும். ஆனால், இருக்கைகளில் பெயர் எழுதியிருக்காது.முன்கூட்டியே தெரிந்துகொண்டு அங்கே போய் அமர வேண்டும். இந்தப் பதற்றங்களெல்லாம் ஜெயலலிதா இருக்கும்போது அரங்கேறும்.

இப்போது அப்படியான காட்சிகளே இல்லை. ஜெயலலிதா பயன்படுத்திய அதே லிஃப்ட் வழியாக மாநாட்டு அரங்கத்துக்கு எடப்பாடி வந்தபோது, நான்கைந்து அமைச்சர்களும் சேர்ந்து கொண்டார்கள். மற்ற அமைச்சர்கள் ஏற்கெனவே உள்ளே இருந்தார்கள். இன்னும் சிலர் நிதானமாக வந்து சேர்ந்தார்கள்.

ஸ்பெஷல் நாற்காலி!

மேடையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தார்கள். எடப்பாடிக்கும் பன்னீருக்கும் ஸ்பெஷல் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மாநாட்டில் பங்கேற்றவர்களின் டேபிளுக்கு முன்பு சின்ன கிண்ணத்தில் விக்ஸ், போலோ, மென்தால் ஆகியவற்றை வைத்திருந்தார்கள்.

வராத கார்!

எஸ்.பி-க்கள் பலரும், ‘‘2013-ம் ஆண்டு வாங்கப் பட்ட Grandy கார்களைத்தான் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். அது பழைய மாடல் கார். அதில் வசதிகள் போதவில்லை. புதிய மாடல் கார் வழங்க வேண்டும்’’ என்றார்கள். ஒரு சிலர், ‘‘இனோவா கார் அளிக்கலாம்’’ எனக் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், புதிய கார்கள் தருவது பற்றிய எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை.

தமிழ் பேச்சு!

எடப்பாடிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், மாநாட்டில் பேசிய அனைவரையும் ‘‘தமிழில்தான் பேச வேண்டும்’’ என அறிமுக உரையில் சொன்னார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.  தமிழ் தெரியாத அதிகாரிகள் சிலர் மழலைத் தமிழில் பேசினார்கள். கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த்  வடநேரேவுக்கு தமிழ் தெரியாது. மிகவும் சிரமப்பட்டுக் குழந்தை மாதிரி அவர் தமிழ் பேசியதை மொத்தக் கூட்டமும் ரசித்தது. போலீஸ் அதிகாரி ஷகீல் அக்தர், தமிழ் உரையை ஆங்கிலத்தில் எழுதி வைத்து சாமர்த்தியமாகப் படித்து முடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

குறுநில மன்னர்கள்!

ஜெயலலிதா காலத்தில் தொடக்கம் முதல் முடிவு வரை அட்டென்ஷனில் இருப்பார்கள் அமைச்சர்கள். ஆனால், இப்போது ரிலாக்ஸ் மூடில் இருந்தார்கள். தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், எஸ்.பி-க்கள் பேசியபோது மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து கவனித்தார்கள். ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களைப் பற்றி அதிகாரிகள் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், இப்போது கலெக்டர்கள் தங்கள் மாவட்ட அமைச்சர் பெயரைப் பேச்சில் தவறாமல் சேர்த்துக்கொண்டார்கள். மாவட்டங்களில் குறுநில மன்னர்களாக அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பது கலெக்டர்களின் பேச்சில் அப்பட்டமாக வெளிப்பட்டது. தங்களைப் பற்றி கலெக்டர்கள் சொல்லும்போது, பல்கலைக்கழக கோல்டு மெடல் பெற்றவர்கள் போலே அமைச்சர்கள் ஒரு கர்வப் புன்னகையை உதிர்த்தனர். தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் பேசியபோது, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு அரங்கத்தில் இல்லை. அவர் வந்தபோது வெங்கடேஷ் பேசி முடித்திருந்தார். ‘‘கூட்டுறவுத் துறை அமைச்சரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி மாவட்டத்தில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்’’ என மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் சொன்னபோது, செல்லூர் ராஜு முகத்தில் சிரிப்பு. பக்கத்தில் இருந்த சக அமைச்சர்கள் அவரைப் பார்த்து ஏதோ சொல்ல, குபீர் சிரிப்பலை பரவியது. முதல்வர் எடப்பாடி உள்பட பலரும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

மூன்று நாள்களும் கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பேசியபோது, முதல்வர் ஒருசில இடங்களில்தான் குறுக்கிட்டுப் பேசினார். அதிலும், தன் வசம் இருக்கும் துறைகள் பற்றிய கருத்துகள் பேசப்பட்டபோது மட்டுமே குறுக்கிட்டார்.

சபாநாயகர்’ கிரிஜா வைத்தியநாதன்

‘‘கருத்துகளுக்கு எட்டு நிமிடங்கள், திட்டங்க ளுக்கு இரண்டு நிமிடங்கள், கோரிக்கைகளுக்கு இரண்டு நிமிடங்கள் என ஒவ்வொரு கலெக்டருக்கும் சில நிமிடங்கள்தான் தரப்படும். அதற்குள் பேசி முடிக்க வேண்டும். அதற்கு மேல் பேசினால் பெல் அடிக்கப்படும்’’ எனக் கறாராக அறிமுக உரையில் குறிப்பிட்டார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். சட்டசபையில் சபாநாயகர் செய்வதுபோல, மணி அடித்து எச்சரிக்கை செய்தபடியே இருந்தார் அவர். தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே உரையை முடித்துவிட்டு, ‘‘மேடம்... நீங்கள் சொன்ன நேரத்துக்கு முன்பே முடித்துவிட்டேன். எங்கள் கோரிக்கைகளை முடித்துக் கொடுங்கள்’’ என்றபோது, அரங்கத்தில் சிரிப்பலை. நேரம் போதாததால், பலரும் கோரிக்கைகளை எழுதிக் கொடுத்தனர்.

நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் நிறைய பக்கங்களில் எழுதிக்கொண்டு வந்திருந்தார். நேரம் இல்லாததால், அங்கேயே அதை சுருக்கிப் படித்தார். ‘அம்மா மொபைல் ஆப் என்கிற உன்னதத் திட்டத்தைக் கொண்டு வந்த முதல்வர்’ என எடப்பாடிக்கு அவர் ஐஸ் வைத்தார்.

புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் பேசியபோது, ‘‘தினசரி மார்க்கெட் மற்றும் வாரச் சந்தைகளில் எடைக் கற்கள், தராசு இயந்திரங்களைச் சோதனை செய்ய முற்பட்டபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. உடனே எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அங்கேயே ஷாமியானா போட்டு எலக்ட்ரானிக் எடை பார்க்கும் இயந்திரம் அமைத்தோம். வியாபாரிகளிடம் வாங்கிய காய்கறிகளை அங்கே எடை போட்டுச் சரிபார்த்துச் சென்றனர் பொதுமக்கள்’’ என்றார்

கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்!

ஏற்கப்பட்ட ஜாபர் சேட் கோரிக்கை!

தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய ஜாபர் சேட், ஜெயலலிதா ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்தார். அவருக்கு எடப்பாடி ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன்புதான் முதல்வரை அவர் சந்தித்தார். போலீஸ் அகாடமியில் கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் ஜாபர்சேட், ‘‘போலீஸ் அகாடமியில் சூரிய ஒளி மின்சார வசதியை அமல்படுத்த வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தார். அது உடனே ஏற்கப்பட்டது.

விகடன் ஆக்‌ஷன்... அரசு ரியாக்‌ஷன்

அம்மா குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப்பெற்ற தகவல்களை வைத்து, 28.02.18 ஜூ.வி இதழில் ‘அரசே விரும்பாத அம்மா குடிநீர்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. அரசு விழாக்களில் அம்மா குடிநீர் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. கட்டுரை வெளியான நிலையில்தான் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. வழக்கமாக, இந்த மாநாட்டில் தனியார் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இம்முறை அம்மா குடிநீரை மாநாட்டில் வைத்திருந்ததுதான் ஆச்சர்யம். தொடரட்டும் இந்த நல்ல மாற்றம்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படங்கள்: கே.ஜெரோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism