`பிரிட்டன் குடிமக்களே, நீங்கள் அளவுக்கதிகமாகச் சாப்பிடுகிறீர்கள், கொஞ்சம் வாயைக்கட்டுங்கள்’ என்று அறிவித்திருக்கிறது அந்நாட்டின் பொதுநலத்துறை. ‘காலையில் 400, மதியம் 600, இரவில் 600 என்று 1600 கலோரிக்குள் உணவைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்’ என்று புதிய உணவுத்திட்டத்தைப் பரப்பத்தொடங்கியிருக்கிறார்கள்.

என்ன காரணம்?

முன்பு ஒருசிலரைமட்டும் பாதித்துக்கொண்டிருந்த உடல்பருமன் பிரச்னை இப்போது சராசரியாகிவிட்டது; அநேகமாக எல்லாருமே அளவுக்குமீறிதான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப உடலுழைப்பும் இல்லை. இப்போது விழித்துக்கொள்ளாவிட்டால் இது பல நோய்களில் சென்றுதான் நிற்கும்.

பிரிட்டன் பொதுநலத்துறை சொல்லும் விஷயங்கள் எல்லா உலகநாடுகளுக்கும் பொருந்தக்கூடியவைதான். ‘ஆனால், அதற்காகத் தினமும் வெறும் 1600 கலோரியை மட்டும் சாப்பிட்டால், அது கிட்டத்தட்ட பட்டினி கிடப்பதற்குச் சமம்’ என்கிறார்கள் பல நிபுணர்கள். ‘எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதைவிட, அந்த உணவில் தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கின்றனவா அல்லது, உடலைக்கெடுக்கும் பொருள்கள் இருக்கின்றனவா என்பதைக் கவனிப்பதுதான் நல்லது’ என்கிறது இவர்களுடைய கட்சி!

குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டுமென்றால், அவர்களுக்கு நல்ல உணவைத் தரவேண்டும், அவர்கள் நன்கு ஓடியாடி விளையாடவேண்டும் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்போது இதைத் தொழில்துறையினரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

தொழில்துறைக்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?

அவர்களுடைய அக்கறை, ஆரோக்கியத்தில் அல்ல, அறிவில்தான். குழந்தைகள் நல்ல அறிவாளிகளாக வேண்டுமென்றால் அவர்கள் பலருடன் சேர்ந்து பலவிதமான விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்கிறார்கள் இவர்கள். அப்போதுதான் அவர்களுக்குப் படைப்புத்திறன், இரக்க உணர்வு, சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொண்டு சமாளிக்கும் திறமை போன்றவை வளருமாம்.
இந்தத் திறமைகள் ஏன் முக்கியம்?

செயற்கை அறிவு, இயந்திரக் கற்றல் என்றெல்லாம் அழைக்கப்படும் தொழில்நுட்பங்களால் வருங்காலத்தில் எல்லாப்பணிகளையும் இயந்திரங்களே செய்யத்தொடங்கிவிடும், மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் போதாது என்று ஓர் அச்சம் உள்ளது. அது கிட்டத்தட்ட உண்மைதான். ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், இயந்திரங்களால் செய்ய இயலாத பணிகளை மனிதர்கள்தான் செய்ய வேண்டும்; அதற்கு இந்தத் திறமைகள் தேவை. ஆகவே, குழந்தைகளை நன்கு விளையாடவிடுங்கள், அவர்கள் ஆரோக்கியத்துடனும் தனித்துவமான அறிவோடும் வளரட்டும்!

செல்ஃபி எடுக்கும் பழக்கமுண்டா உங்களுக்கு?

ஒரு செல்ஃபி, ரெண்டு செல்ஃபி இல்லை, பல இளைஞர்கள் தினமும் ஐம்பது, நூறு செல்ஃபிக்களை எடுத்துத்தள்ளுகிறார்கள். இப்படி மாதம்முழுக்க செல்ஃபிகளைக் கணக்குப்பார்த்தால் அவர்கள் தங்களுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதைவிட செல்ஃபியில் பார்ப்பதுதான் அதிகமாக இருக்குமில்லையா?

செல்ஃபி என்பது கண்ணாடியிலிருந்து மிகவும் மாறுபட்டது. அது ஒருவருடைய முகத்தைச் சற்றே விகாரப்படுத்திக்காட்டுகிறது. அந்தப் புகைப்படங்களைப் பார்த்துப்பார்த்து அதுதான் தன்னுடைய முகம் என்று ஒருவர் நினைக்கத்தொடங்கிவிட்டால்? தன் முகம் விகாரமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு தன்னம்பிக்கை இழந்துவிட்டால்?

`இதெல்லாம் டூ மச்’ என்கிறீர்களா? இது கற்பனையில்லை. நிஜமாகவே செல்ஃபியைப் பார்த்துப்பார்த்துத் தன்னுடைய முகம் நன்றாக இல்லை என்று நினைத்துக்கொள்கிறவர்கள் அதிகமாகிவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

எடுத்துக்காட்டாக, ‘செல்ஃபியில என் மூக்கு ரொம்பப் பெரிசா இருக்கு, அதை அறுவைசிகிச்சை செஞ்சு சின்னதாக்கிடுங்க’ என்று கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். ‘செல்ஃபியில எல்லார் மூக்கும் பெரிசாதான் தெரியும், உங்க மூக்கு நல்லாதான் இருக்கு’ என்று சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்களாம்.

மருத்துவர் சொல்வதைவிட, செல்ஃபி சொல்வதை நம்பும் உலகம்!

மருத்துவமனைக்கு வருகிற பலரிடம் சொந்த வாகனங்கள் இருப்பதில்லை. யாராவது அவர்களுக்கு ஓர் ஆட்டோவோ டாக்ஸியோ பிடித்துக்கொடுக்க வேண்டியிருக்கிறது. மொபைல்போனில் டாக்ஸி அப்ளிகேஷன்கள் இருந்தாலும், எல்லாருக்கும் அந்த வசதிகள் இல்லை, அந்தத் தொழில்நுட்பங்கள் தெரிந்திருப்பதில்லை.

இதை மனத்தில்கொண்டு, ஒரு பிரபல டாக்ஸி நிறுவனம் புதிய ஆப் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம், மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் வரும் நோயாளிகளின் சார்பாக டாக்ஸிகளைப் பதிவுசெய்யலாம். வழக்கமாக இதுபோன்ற அப்ளிகேஷனில் டாக்ஸி பதிவுசெய்ய என்ன செலவாகுமோ அதே செலவுதான் இதற்கும். ஆனால், நோயாளியிடம் ஸ்மார்ட்போனோ அந்த அப்ளிகேஷனோ இருக்கவேண்டியதில்லை. மருத்துவமனையே இதனை ஒரு கூடுதல் சேவையாக அவர்களுக்கு வழங்கிவிட்டுப் பின்னர் தனியே பணம் வசூலித்துக்கொள்ளலாம்.

அந்தக் கட்டணம் நியாயமானதாக இருந்தால், மகிழ்ச்சி!

தாகமாக இருந்தால் சட்டென்று காசு கொடுத்துத் தண்ணீர் பாட்டில் வாங்கிக் குடிக்கிறோம். குழாயில் வரும் தண்ணீரைக் குடிப்பதைவிட, பாட்டில் தண்ணீர் தூய்மையானது, சுகாதாரமானது என்று நம்புகிறோம்.

ஆனால் உண்மையில், பாட்டிலில் உள்ள தண்ணீரெல்லாம் தூய்மையானதுதானா? உடலுக்கு நல்லதுதானா?

சமீபத்தில் கொல்கத்தாவில் ஆங்காங்கே பல பாட்டில் தண்ணீரை வாங்கிப் பரிசோதித்தது அந்த ஊர் மாநகராட்சி. அப்படி அவர்கள் வாங்கிய 15 பாட்டில்களில் 12 பாட்டில்களில் இருந்த தண்ணீர் மனிதர்கள் குடிக்க ஏற்றதல்ல என்று அறிவித்திருக்கிறார்கள். அதாவது, 80% பாட்டில்களில் தூய்மையற்ற, நோயைப்பரப்பும் கிருமிகளைக்கொண்ட தண்ணீர் அடைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பாட்டில்களில் பலவும் புகழ்பெற்ற பிராண்ட்களைச் சேர்ந்தவை. அவர்களே தரக்குறைவான தண்ணீரை விற்கிறார்களா, அல்லது அவர்கள் பெயரில் யாராவது ஏமாற்றுகிறார்களா?

எதற்கும் வீட்டிலிருந்தே தண்ணீர் பாட்டிலைக் கொண்டுசென்றுவிடுவதுதான் நல்லதோ?

ஒருவர் சிரித்தால், பதிலுக்கு நாமும் சிரிக்க வேண்டும், அதுதான் எதிர்பார்ப்பு, உலக வழக்கம். ஆனால், எல்லாச்சிரிப்பும் ஒரேமாதிரி இல்லை என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள இந்த ஆய்வின்படி, உளவியல்ரீதியில் சிரிப்பை மூன்றுவிதமாகப் பிரிக்கலாமாம்; இவை ஒவ்வொன்றும் நம்மிடம் வெவ்வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றனவாம்:

1. கர்வச்சிரிப்பு: உன்னைவிட நான் பெரியவன் என்பதை உணர்த்துவது

2. அன்புச்சிரிப்பு: நீயும் நானும் நண்பர்கள் என்று கைகுலுக்குவது

3. பரிசுச்சிரிப்பு: ‘அட, பிரமாதம்’ என்று பாராட்டுவது

இந்த மூன்றில் நம்மெதிரே இருப்பவர் எந்தவிதமாகச் சிரிக்கிறார் என்பதை நம் மனம் புரிந்துகொள்கிறது, அதற்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது, கர்வச்சிரிப்பு நம்மை எரிச்சலாக்குகிறதாம், பரிசுச்சிரிப்பு நமக்கு ஊக்கம் தந்து பரபரப்பைக் குறைக்கிறதாம், அன்புச்சிரிப்பு இந்த இரண்டுக்கும் நடுவே இருக்கிறதாம். இதைப் படித்தவுடன் உங்கள் உதட்டில் தோன்றும் சிரிப்பு எந்த வகை?

- என்.ராஜேஷ்வர்