‘‘தியானம் பண்ணுவது மனநிலையை ஒருநிலைப்படுத்துவதற்கான முதல்படி. அதோடு சேர்ந்து யோகாவும் செய்தால் உடல்-மனம் இரண்டுமே சீராக வேலை செய்யும். தினம் காலை ஒருமணி நேரமும், மாலை இரண்டு மணிநேரமும் ஆசனங்களைச் செய்வேன். ஒவ்வொரு முறையும் நான்கு ஆசனங்கள் என்ற விகிதத்தில் ஒரு நாளைக்கு எட்டு ஆசனங்கள் செய்வதை வழக்கமா வெச்சுருக்கேன். ஜிம் வொர்க் அவுட் மற்றும் சைஸ் ஸீரோவில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தமாதிரி இருந்தாதான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு சொல்றதே ஃபிட்னெஸ் மீது இருக்கும் தவறான பிம்பம்தான்.

ஷூட்டிங் இருக்கும்போதும் பாரம்பர்யமான உணவுகளைத்தான் சாப்பிடுவேன். நம்ம அம்மா அப்பா அவங்க காலத்துல எந்தமாதிரியான உணவு முறைகளைப் பின்பற்றி வந்தாங்களோ, அந்த மாதிரியான உணவுகளையே நானும் சாப்பிடறதை வழக்கமா வெச்சிருக்கேன். அதாவது சிறுதானியங்கள் மற்றும் நவதானியங்கள்ல செய்த உணவு வகைகள்தான் என் சாய்ஸ். அசைவ உணவு வகைகளுக்கு குட் பை. பாக்கெட் உணவுகளைத் தொடவே மாட்டேன். இனிப்பு வகைகளில்கூட இந்திய இனிப்பு வகைகளை மட்டும்தான் சாப்பிடுவேன். இன்னும் தெளிவா சொல்லணும்னா, சுவையைக் கூட்டுற ஒரே பொருளா நெய்யை மட்டும்தான் உபயோகிக்கிறேன்.

யோகா செய்து முடிச்சதும் தேங்காய் எண்ணெய்க் குளியல் உடம்புக்கு ரொம்ப நல்லது. மீன், பால், நட்ஸ், பழங்கள், கீரை போன்ற உணவு வகைகளை தினமும் சாப்பிடுறது மிக அவசியம். டீ, காபியையும் நிறுத்திட்டேன். எப்போதாவது குடிக்கணும்னு தோணினா பிளாக் டீ அல்லது பிளாக் காபி குடிப்பேன். நாம சரிவிகித உணவு முறையைப் பின்பற்றும்போது டீ-காபி குடிச்சா அதற்கான பலன் நமக்கு முழுவதுமாகக் கிடைக்காமப் போயிடும். இதெல்லாம் உடம்புக்கு... மனசுக்கும் இதுமாதிரி சில விஷயங்கள் முக்கியம்.

இப்போ இருக்குற இந்த நியூ-ஜென் சமுதாயத்துல போட்டிகள் ரொம்ப அதிகமா இருக்கு. அதை நாம சீரியஸா எடுத்துக்கிட்டா கட்டாயம் மன அழுத்தத்துக்கு உள்ளாவோம். கூடுமானவரை நாம எப்படி வெற்றி அடையணும் என்பதை மட்டும் மனசுல வெச்சுக்கணும். மத்தவங்க வெற்றிநிலையோடு, நம்ம வெற்றியை ஒப்பிட்டுப் பார்த்தோம்னா பாதிப்பு நமக்குத்தான்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கைனு இருக்கக்கூடாது. எத்தனை மணிநேரம் நாம வேலையிடத்துல செலவிடுறோம், எத்தனை மணிநேரம் நாம வீட்டுல செலவிடுறோம் என்பதைப் பிரித்துப் பார்க்கணும். அலுவலகத்துல செலவழிக்குற நேரத்துல, மூன்றில் ஒருபங்கை கட்டாயம் வீட்டிலும் செலவிடணும். மனம்-வேலை சமன்பாடு (Work-Life Balance) நம்மளோட தினசரி வாழ்க்கையில சரியான முறையில இருக்கணும். அப்பதான் வாழ்க்கையும் சரியா இருக்கும்.’’

அசத்தலாகச் சொல்கிறார் அழகி.

- சுஜிதா சென்