Published:Updated:

"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

Published:Updated:
"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

னோகர் - அதிகம் அறியப்படாதவர். ஆனால், தனுஷ் நடித்த 'தேவதையைக் கண்டேன்’ படத்தில் 'அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்...’ பாடலை எழுதியவர்,

##~##
'ஆர்யா’  முதல் 'கந்தசாமி’ வரை வடிவேலுவுக்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதியவர் என்று, இவருடைய அடை யாளங்கள் அறியப்பட்டவைதான். இப்போது கருணாஸ்கதா நாயகனாக நடிக்க 'ரகளபுரம்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். வேலூர் மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரைச் சந்தித்தேன்.

''இன்ஜினீயர் ஆகி அரசு வேலையில் அமரவேண்டும் என்பதுதான், அம்மாவின் கனவு. அம்மாவின் ஆசைப்படி இன்ஜினீயரிங் படித்து முடித்தேன். ஆனால், வந்த அரசு வேலைவாய்ப்பைப் புறக்கணித்துவிட்டு சினிமா ஆசையில் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டேன். வாய்ப்புத் தேடி அலைந்தபோது, இருப்புக்கும் உணவுக்கும் பல வேலைகள் பார்த்துக்கொண்டே பட வாய்ப்புகளைத் தேடலானேன். தேடலின் பல‌னாக, 'ஏழாவது மனிதன்’ இயக்குநர் ஹரிஹரன் சாரிடம் உதவி இயக்குநர் வாய்ப்புக் கிடைத்தது.

எங்கள் கிராமத்தில் நடைபெறும் ஊர்த் திருவிழாக்களில் கதை, வசனம் எழுதி இயக்கி பல நாடகங்கள் நடித்து இருக்கிறேன். ஆடிக் கிருத்திகையின்போது, திருத்தணிகை முருகனுக்குக் காவடி தூக்கிச்

"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

செல்லும் பக்தர்களுக்காக, சினிமா மெட்டுகளுக்கு முருகன் பாடல் எழுதிக்கொடுத்து என் பாடல் பயிற்சியையும் வளர்த்துக்கொண்டேன். நடிப்பு, பாடல், இயக்கம் என என்னுள் இப்படித்தான் சினிமா ஆர்வம் முளைவிட்டது.

'தேவதையைக் கண்டேன்’ படத்தில் இயக்குநர் பூபதி பாண்டியன் சாரிடம் முதன்மை உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். படத்துக்காக இசை அமைப்பாளர் தேவா சார் இசையில் இரண்டு பாடல்களுக்கு கம்போஸிங் செய்துகொண்டு இருந்தபோது, ஒரு பாடலின் பல்லவிக்கு என்னை டம்மி வார்த்தைகளைப் போட்டு எழுதச் சொன்னார்கள். பல்லவிக்காக நான் எழுதிய டம்மி வார்த்தைகள் உயிர்ப்பாக இருந்ததால், பூபதி பாண்டியன் சாருக்கும் தேவா சாருக்கும் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் சாருக்கும் ரொம்பவும் பிடித்துப்போனது. எனவே, மேற்கொண்டு சரணங்களையும் என்னையே எழுதச் சொல்லிவிட்டார்கள். அப்படி வாய்ப்பு அமைந்து நான் எழுதிய பாடல்தான், 'அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்...’ என்ற பாடல். தொடர்ந்து இன்னொரு பாடலான, 'ஒரே ஒரு தோப்புலே...’ என்ற பாடலையும் எழுத எனக்கு வாய்ப்புஅளித்தனர்.

"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

அதன்பிறகு தொடர்ந்து பாடல் எழுத பல வாய்ப்புகள் வந்தாலும் இயக்குநர் ஆவதே என்னுடைய குறிக்கோள் என்பதால், பாடல் வாய்ப்புகளைத் தற்காலிகமாக ‌மறுத்துவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுந்தர்.சி,  சுராஜ், ஷக்தி சிதம்பரம், தம்பி ராமையா  ஆகியோரிடம் உதவி இயக்குநர், இணை இயக்குநர், வசனகர்த்தா என்று என் திரைப் பணிகள் தொடர்ந்தன. அடிப்படையிலேயே எனக்கு நகைச்சுவையில் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் வடிவேலு அண்ணனுக்கு 34 படங்களுக்கு நகைச்சுவைக் காட்சிகள் எழுதியதோடு, படப்பிடிப்பின்போதும் உடன் பணியாற்றி இருக்கிறேன். என் காமெடி விதைக்கு குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றிய பெருமை வடிவேலு அண்ணனையே சேரும்

சினிமாவில் பல பணிகளைப் பார்த்திருந்தாலும் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து வடிவேலு அண்ணனோடு நகைச்சுவைக் காட்சிகளுக்காகப் பணியாற்றிய உந்துதல்தான் முதல் படத்திலும் நகைச்சுவைக் கலைஞர்களுடன் கைகோத்து களம் இறங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கருணாஸ் சார் ஹீரோவாக நடிக்கும், இந்தப் படத்துக்கு, 'ஆனைமலைக் கந்தன்’ என்று முதலில் பெயர்வைத்தோம். இப்போது 'ரகளபுரம்’ என்று பெயர் மாறி உள்ளது.

முழுக்க முழுக்க 100 சதவிகிதம் நகைச்சுவைப் படம் இது. கருணாஸ், கோவை சரளா, மனோ பாலா, தம்பி ராமையா, மயில்சாமி  ஆகிய கலகலப்புக் கூட்டணியோடு பவன், சண்முகராஜ், பரத்ஷெட்டி மற்றும் புதுமுக நாயகியின் நடிப் பில் தயாராகிறது.  50 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வர்ற ரசிகனை, 500 ரூபாய்க்குச் சிரிக்கவைப்பதுதான் லட்சியம். அதனால் கவலையே படவேண்டாம், கருத்துச் சொல்லி வறுத்து எடுக்க மாட்டோம்.'

உற்சாகம் கொப்பளிக்கிறது இளம் இயக்குநர் மனோகரின் வார்த்தைகளில்!

"50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்க்குச் சிரிக்கலாம்!"

- ரியாஸ்
படம்: ச.வெங்கடேசன்