உலகின் மிக மகிழ்ச்சியான நபர்களைப் பட்டியலிட்டால் ஹேமா சுபாஷின் பெயர் நிச்சயம் இடம்பெறும்.

‘`சந்தோஷத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா விவரிப்பாங்க. அடுத்தவங்க சந்தோஷத்துக்கு ஏதோ ஒருவகையில நான் காரணமாகிற ஒவ்வொரு முறையும் நான் மகிழ்ச்சியின் உச்சம் தொடறேன்...’’ - ஹேப்பினெஸ் அன்லிமிடெடாக ஆரம்பிக்கிறது ஹேமாவின் பேச்சு. தற்சமயம் அமெரிக்காவில் இருக்கும் ஹேமா சுபாஷ், கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவர். விபத்தொன்றில் ஒரு காலை இழந்தவர். ஒற்றைக்காலுடன் எஞ்சிய காலத்தைக் கழிப்பது என்பது துயரத்தின் உச்சம். இன்னொரு கால் இருப்பதில் சமாதானம் கொண்டு, யதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட வியத்தகு மனுஷி ஹேமா.

பெங்களூரில் ‘ஒன் ஸ்டெப் அட் எ டைம்’ என்கிற பெயரில் இவர் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், எல்லாத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புக்காக இயங்குகிறது.

‘`குழந்தைப் பருவத்தை அசைபோடும் போது திகட்டத் திகட்டக் கிடைச்ச அன்பும் சந்தோஷமும் தவிர வேறொன்றும் அறியாத நாள்கள்தான் மனசை நிறைக்குது. திருவனந்தபுரத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்கில் பி.டெக் முடிச்சுட்டு பெங்களூருல ஓர் ஐ.டி கம்பெனியில சாஃப்ட்வேர் இன்ஜினீயரா வேலை பார்த்திட்டிருந்தேன். அமெரிக்காவில் வேலை பார்த்திட்டிருந்த என் பாய் ஃப்ரெண்ட்கூட எனக்கு நிச்சயமாகியிருந்த டைம் அது... மனசு முழுக்கக் கல்யாணக் கனவு.

2010-ம் வருஷம், பிப்ரவரி மாசத்துல ஒருநாள் சாயந்திரம் வேலை முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பிக்கிட்டிருந்தேன். பெங்களூரு, ஒயிட்ஃபீல்டுல குண்டலஹள்ளி பஸ் ஸ்டாப்ல நான் வந்த அந்த வால்வோ பஸ் நின்னபோது பஸ்லேருந்து இறங்கக் கால் வெச்சேன். டிரைவர் என்னைக் கவனிக்காம பஸ்ஸை நகர்த்திட்டார். கண்மூடிக் கண் திறக்கறதுக்குள்ள நான் பஸ்லேருந்து தூக்கிவீசப்பட்டு வெளியில வந்து விழுந்தேன். பஸ்ஸின் வீல் என் இடது கால் மேல ஏறி இறங்கினதையும் எலும்புகள் நொறுங்கினதையும் என்னால உணர முடிஞ்சது. அதுவரை வாழ்க்கையில அனுபவிக்காத வலி அது. ரத்த வெள்ளத்துல அங்கே விழுந்து கிடந்த என்னைச் சுற்றிலும் மக்கள் கூட்டம். என் கால் மேல ஏறி இறங்கி, கொஞ்ச தூரம் போய் அந்த பஸ் நின்னது. உள்ளேயிருந்து லிண்டானு ஒரு பெண் எட்டிப் பார்த்தாங்க. பஸ்லேருந்து இறங்கி வாட்டர் பாட்டிலோடு என் பக்கத்துல வந்தாங்க. அப்பதான் மிக மோசமான நிலைமையில நான் அடிபட்டுக் கிடக்கிறது தெரியும். நொறுங்கிப்போன என் கால்லேருந்து ரத்தம் எப்படிப் பீறிட்டுக் கிளம்புதுன்னு எல்லாரும் வேடிக்கை பார்த்தாங்களே தவிர, எனக்கென்ன செய்யணும்னு யோசிக்கலை. ‘மயக்கமாயிடாதே... உயிரை விட்டுடாதே...’னு எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டு, நினைவை இழக்காமலிருக்கப் போராடிக்கிட்டிருந்தேன்.

லிண்டாதான் உதவிக்கு ஆள்களைக் கூப்பிட்டு என்னைத் தூக்கி அங்கே நின்னுக்கிட்டிருந்த புத்தம்புது ஐ10 காருக்குள்ளே ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டுப் போனாங்க. கார் ஸீட்டுல அகற்றப்படாம இருந்த பிளாஸ்டிக் கவர் மேல என் ரத்தக் கறை படிஞ்சுடக்கூடாதேனு அந்த நிலையிலும் மனசுக்குள்ள நினைச்சது இப்பவும் ஞாபகமிருக்கு. அப்போ லிண்டா தன் மடிமேல என் தலையை வெச்சு காரோட பின் ஸீட்டுல என்னைப் படுக்க வெச்சிருந்தாங்க. என் இடது காலைத் தவிர உடம்புல வேற எந்தப் பகுதியிலும் அடிபடலை. காலுக்கு என்னாச்சுனு எட்டிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. நொறுங்கின எலும்புகளும், கிழிஞ்ச சதையுமா ரத்தவிளாறா தெரிஞ்சது. என் மூட்டுப் பகுதி எப்போ வேணாலும் அறுந்து விழலாம் என்ற நிலையில நூலிழையில தொங்கிட்டிருந்தது. என்னால அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாம கதறினேன். ‘எல்லாம் சரியாயிடும்’னு எனக்குச் சமாதானம் சொல்லி, என்னைச் சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல்ல கொண்டு சேர்த்த தேவதை லிண்டா இல்லைன்னா நான் பிழைச்சிருப்பேனாங்கிறதே சந்தேகம்...’’ - வார்த்தைகளில் வலிகளைக் கடந்தபடியே நட்புக்கு நன்றி சொல்கிறார் ஹேமா.

‘`அன்னிக்கு ராத்திரி என்னை மணிப்பால் ஹாஸ்பிடலுக்கு மாத்தினாங்க. அறுந்து தொங்கிட்டிருந்த என் காலை மறுபடி பொருத்திவிட முடியுமானு அங்கே ஒரு டாக்டர் குழுவே போராடியது. முடியலை. அடுத்த நாள் காலையில அம்மா அப்பா சம்மதத்தோடு என் காலை அகற்றுவதைத் தவிர வேற வழியில்லைனு டாக்டர்ஸ் முடிவு பண்ணினாங்க. ஒருநாள் முழுக்க கோமாவுல இருந்தேன். மயக்கம் தெளிஞ்சு என் காலைப் பார்த்தேன். அடிபட்ட கால் அகற்றப்பட்டு, பெரிய பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. கால் போனாலும், நான் உயிரோடு இருக்கிறதுதான் எனக்குப் பெரிசா பட்டது. வாழ்க்கை விலைமதிக்க முடியாதது. இன்னிக்கு வரைக்கும் நான் உயிரோடு இருக்கிறது பெரிய விஷயமில்லையா?!’’ - மீண்டெழுந்த கதை, மாபெரும் போராட்டமாக இருக்கும் என எதிர்பார்த்தால், அதைப் போகிற போக்கில் கடந்திருக்கிறார் ஹேமா.

‘`இப்படியொரு திடீர் அதிர்ச்சியிலேருந்து மீள என் மன உறுதி மட்டுமே காரணம்னு சொன்னா தற்பெருமையா இருக்கும். என் குடும்பத்தாரும், நண்பர்களும் பக்கத்துல இருந்தாங்க. அந்த நிலையிலேருந்து மீண்டு வாழணும்ங் கிறதையே எனக்கான சவாலா வெச்சுக்கிட்டேன். மனசளவுல முன்னைவிட அதிக பலசாலியா உணர ஆரம்பிச்சேன். என் நிலைமை யைக் கேள்விப்பட்டு, என் காதலர், அமெரிக்க வேலையை விட்டுட்டு பெங்களூரு வந்து என்கூடவே இருந்தார். இந்த உறவைத் தொடரணுமாங்கிற கேள்விகள் வராமலில்லை. ஆனாலும் அவர் உறுதியா இருந்தார். 2011, ஜனவரி மாசம் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையிலயும் பெரிசா மாற்றங்கள் இல்லை. கர்ப்பமாகிற வரைக்கும் வாழ்க்கை பிரச்னைகள் இல்லாம போச்சு. கால் இல்லாத நிலையில கர்ப்பத்தைச் சுமக்கிறது ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்தது. செயற்கைக் காலை ரொம்ப நேரம் போட்டுக்கிட்டிருக்க முடியாது. எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாத நிலை, கன்னாபின்னா சாப்பாடுனு கர்ப்பத்தின்போது 25 கிலோ வெயிட் போட்டேன். ஒருவழியா என் மகன் பிறந்தான். அவனைப் பார்த்துக்கிறதுல நான் துளிகூட விட்டுக்கொடுக்கலை. அவனோட வளர்ச்சியை அணு அணுவா ரசிச்சேன். இந்த உலகத்து லயே ஆகச் சிறந்த சந்தோஷம் அது’’ - தாய்மைப்பூரிப்பில் மலர்கிறவர், யோகா செய்து எடையைக் குறைத்திருக்கிறார்.

‘`என் குழந்தைக்கு ஒரு வயசு முடியற வரைக்கும் எல்லாக் கடமைகளையும் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டேன். அதைத் தாண்டி வேற ஏதாவது செய்யணும்னு தோணினது. முதல்கட்டமா எங்க வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம் அமைச்சேன். என்னால இன்னும் நிறைய செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை வந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்களுக்கும் உரிமைகளுக்கும் குறைவில்லை. ஆனா, அவற்றில் எத்தனை நடைமுறையில் இருக்குங்கிறது கேள்விக்குரியது. மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகளில் ஓரளவு மாற்றங்கள் வந்தாலும், எல்லாத் துறைகளிலும் அவங்களோட பங்களிப்பு இல்லைங்கிறது உறுத்தலா இருந்தது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகளைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததுதான் இதற்குக் காரணம். இதுக்காக ஆரம்பிச்சதுதான் ‘ஒன் ஸ்டெப் அட் எ டைம்’ என்கிற என்.ஜி.ஓ.

எனக்கு விபத்து நடந்து, வாழ்க்கை மாறின பிறகு என்னைப் போல நிறைய பேரின் கதைகளைக் கேட்க முடிஞ்சது. கையோ, காலோ இல்லாத பெண்களின் பரிதாபக் கதைகளைக் கேட்டிருக்கேன். ‘நீ இப்படி வாழறதுக்கு செத்துத் தொலை’னு அவங்க பெற்றோரே கடுமையா நடந்துக்கிற சம்பவங்களைக் கேள்விப்பட்டேன். இன்னொருபக்கம் இந்தச் சவால்களைத் தாண்டி, அதிகபட்ச சுதந்திரத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட்டிருக்கிற மாற்றுத்திறனாளிகளையும் பார்த்திருக்கேன். ‘ஒன் ஸ்டெப் அட் எ டைம்’ மூலமா, இந்த இரண்டு தரப்பினரையும் இணைப்பதுடன், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தற முயற்சிகளைச் செய்யறோம். அவங்களை தியேட்டர், சினிமா உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் ஈடுபடுத்தறதுதான் எங்க அமைப்பின் பிரதான நோக்கம். கை, கால்களை இழந்த எத்தனையோ பேர், இந்தியாவின் பல பகுதிகளிலேருந்தும் இந்த அமைப்பில் இணைஞ்சுட்டிருக்காங்க...’’ என்று உற்சாகமாகக் கூறும் இந்த எனர்ஜி ஏஞ்சல், செயற்கைக் காலின் உதவியுடன் மாரத்தானில் பங்கேற்கும் ‘பிளேட் ரன்னர்’ என்கிற பெருமைக்கும் உரியவர்.

அடுத்து..?

‘`எனக்கு ஸ்விம்மிங் ரொம்பப் பிடிக்கும். போட்டி விளையாட்டா அதுல தீவிரமா ஈடுபடற ஆசை இருக்கு. வாழ்க்கை ரொம்பச் சின்னது. எந்த நேரமும் அது நம்மைவிட்டுப் போகலாம். ஒவ்வொரு நாளும் அந்த வாழ்க்கையிலேருந்து நான் ஏதோ கத்துக்கறேன். அப்படி நான் கத்துக்கிட்டதுலயே மிகச் சிறந்த பாடம் அன்பின் ஆற்றல். அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழப் பழகினா, வாழ்க்கையின் எந்தச் சவாலையும் ஜெயிக்கலாம்... என்னை மாதிரி.’’

மகிழ்ச்சி!