Published:Updated:

அரக்கோணத்தில் சல்மான் ருஷ்டி!

அரக்கோணத்தில் சல்மான் ருஷ்டி!

''ஆயுதங்கள்  இன்றி கூடப் புரட்சிகள் நடக்கலாம். ஆனால், புத்தகம் இன்றி புரட்சிகள் நடக்காது' - கீதாஞ்சலி வாடகை நூலகத்தின் வாசலில் எழுதப்பட்டு இருக்கும் அர்த்தம் பொதிந்த வாசகங்கள் இவை.

அரக்கோணத்தில் சல்மான் ருஷ்டி!
##~##
அரக்கோணம் தலைமைத் தபால் நிலையத் துக்கு எதிரில் அமைந்து உள்ளது 'கீதாஞ்சலி வாடகை நூலகம்’. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு முருகன், அரிதாஸ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த வாடகை நூலகம், இன்று 4 ஆயிரம் வாசகர்களுடன் அசுர வளர்ச்சிப் பெற்று இயங்கிவருகிறது. சாந்தகுமார் என்பவர் இதனை தற்போது நடத்தி வருகிறார்.

'மக்களுக்குப் புத்தகங்களின் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால்தான் இதுபோன்ற வாடகை நூலகத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் சிறுவயதில் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் படிப்படியாக நூலக வேலைகளைக் கற்றுக்கொண்டேன். இதே அரக்கோணத்தில் உள்ள மாவட்டக் கிளை அரசு நூலகத்தைவிட, இந்நூலகத்தின் மீதுதான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், மக்களின் பார்வைக்கு எளிதாகக் கிடைக்கும்படி புத்தகங்களை அடுக்கிவைப்பது, அவர்களுக்கு ஏற்ற புத்தகங்கள் குறித்து ஆலோசனை வழங்குவது, புத்தகம் கிடைக்காமல் தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதைக் கண்டுபிடித்துத் தருவது போன்ற அணுகுமுறைகள், அரசு நூலகங்களில் பெரும்பாலும் இருப்பது இல்லை. இத்தனைக்கும் மேல் அரசு நூலகங்களில் அடிப்படை உறுப்பினராகச் சேர்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு. வெளியூர்க்காரராக இருந்தால் கண்டிப்பாகச் சேர்க்க மாட்டார்கள். இது மாதிரியான கறார்தன்மை இல்லாத அன்பான நடைமுறைகள்தான் கீதாஞ்சலியின் வெற்றிக்குக் காரணம்'' என்கிறார் சாந்த குமார்.

பாவ்லோ கொய்லா, மரியோ ஃபூசோ, ழான் மார்டெல், சல்மான் ருஷ்டி, ஓரான் பாமுக், கிரண் தேசாய், ஆர்.கே.நாராயணன் போன்ற இந்திய மற்றும் உலக அளவிலான ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்கள், இந்த அரக்கோணம் என்னும் சிறிய ஊரின் வாடகை நூலகத்தில் கிடைப்பது பெருமைக்குரிய விஷயம்தானே!

அரக்கோணத்தில் சல்மான் ருஷ்டி!

''நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள் எனக் கிட்டத்தட்ட 25 ஆயிரம் புத்தகங்கள் இந்நூலகத்தில் வாசகர்களின் தொடர் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதிக விலை உள்ள புத்தகமானாலும் வாசகர்கள் மீதான நம்பிக்கையின் காரணமாகக் கொடுக்கப்படுகிறது. புத்தகங்களும் அவ்வாறே பத்திரமாகத் திரும்பி வந்து சேருகின்றன. அரசு நூலகங்களில் 75 ரூபாயைத் தாண்டும் புத்தகத்தைக்கூட, வெளியில் கொண்டு செல்ல இயலாது' என்கிறார் சாந்தகுமார்.

சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியோர்கள் என எல்லாத்தரப்பினரும் இங்கு புத்தகங்களை எடுத்துச் செல்கின்றனர். பள்ளி மாணவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண் டும் விதத்தில் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் உடன் அழைத்து வருகின்றனர்.

வெறும்

அரக்கோணத்தில் சல்மான் ருஷ்டி!

200 மட்டுமே உறுப்பினர் கட்டணமாக வசூலிக்கும் கீதாஞ்சலி வாடகை நூலகத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பு உள்ள புத்தகங்களையும் எடுத்துச் சென்று வாசிக்கின்றனர் வாசகர்கள். அறிவின் மதிப்புக்கு 1000... 100 என்று விலை வித்தியாசம் இருக்கிறதா என்ன?

  • இந்த நூலகத்தின் சார்பில் 'தோப்பு’ என்ற பெயரில் வாசகர் வட்டக் கூட்டங்கள் நடக்கின்றன. சாருநிவேதிதா, அழகியபெரியவன், நாஞ்சில்நாடன் போன்ற பல எழுத்தாளர்கள் பங்கெடுத்து உள்ளனர்.
     
  • சாந்தகுமார் 'அடையாளம்’ என்ற கையெழுத்துப் பிரதியையும் நடத்திவந்தார்!

பா.பற்குணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு