சமூகம்
Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

25 ஆண்டுகளுக்குப் பின் ராமராஜ்யம், தமிழகத்தில் அதிகம் பேசப்படும் பொருளாகியிருக்கிறது. தகதகவென மின்னும் தங்கநிற வண்டியைக் கிளப்பிக்கொண்டு மாநிலம் மாநிலமாக ராமராஜ்ய ரத யாத்திரை மேற்கொண்டவர்கள் தமிழகத்திலும் நுழைய... கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் அதை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்துள்ளன. 6,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியோ, ரத யாத்திரையை வெற்றிபெற வைக்க முழுமூச்சுடன் முனைப்பு காட்டுகிறது. அவர்களுக்கு நம்முடைய சில யோசனைகள்...

கம்பேரிஸன் கோவாலு!

• 144 தடை உத்தரவை, ஊர்வலம் நடத்தக்கூடாது என்பதற்காகத்தான் பொதுவாகப் போடுவார்கள். ஆனால், முதன்முறையாக ஊர்வலம் டிஸ்டர்ப் ஆகக்கூடாது என்பதற்காகப் போட்டிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக, யாத்திரை போகும் வழியில் இருக்கும் மக்களை எல்லாம் தற்காலிகமாக வெளியேறச் சொல்லிவிட்டால் ஆளே இல்லாமல் யாத்திரை சென்றுவிடலாம்.


• ரத யாத்திரை என்பதால்தான் நேரம் பிடிக்கிறது. சட்டம் ஒழுங்கு போன்ற சிக்கல்கள் வருகின்றன. எனவே, மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்க ஜெட் யாத்திரை, ஹெலிகாப்டர் யாத்திரை ஆகிய மார்க்கங்களைக் கடைப்பிடிக்கலாம். சாலைகளில் ஏற்படும் டிராஃபிக் பிரச்னைகளிலிருந்தும் தப்பித்துவிடலாம்.

• பார்க்க தங்கக் கலரில் நகைக்கடை போல ரதம் ஜொலிப்பதால், கம்பேக் கொடுத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புரொமோஷனல் வண்டி என அறிமுகம் கொடுத்துவிடலாம். சி.எஸ்.கே-யின் ஆஸ்தான நிறம் மஞ்சள் என்பதால், யாருக்கும் டவுட்டும் வராது; வரவேற்பும் அதிகரித்துவிடும்.

• அப்பாவி ஹெச்.ராஜாவைச் சிக்கலில் மாட்டிவிட்ட அட்மினைத் தேடிக் கண்டுபிடித்து, திரும்பவும் ஏதாவது எகிடுதகிடு ஸ்டேட்டஸ் போடவைக்கலாம். மொத்தக் கூட்டமும் அந்தப் பக்கம் திரும்பிக் கும்மிக்கொண்டிருக்க... சத்தமில்லாமல் யாத்திரையை ஜம்மென முடித்துவிடலாம்.

• ரத யாத்திரையை வரவேற்று ஆரத்தி எடுப்பவர்களின் தட்டில் தலா ரூ. 15 லட்சம் வைக்கப்படும் என்ற பழைய வாக்குறுதியைக் கையிலெடுக்கலாம். காசுக்கு எங்கே போறதா? அதான் கறுப்புப் பணத்தையெல்லாம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வழியா வெளியே கொண்டு வந்தாச்சே? அதுல இருந்து எடுத்துக் கொடுப்போம்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி