Published:Updated:

பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!

பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!

விருதுதுரை.நாகராஜன் - படங்கள்: விகடன் குழு

பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!

விருதுதுரை.நாகராஜன் - படங்கள்: விகடன் குழு

Published:Updated:
பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!

விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘அவள் விகடன்’ இதழ் சார்பாகக் கடந்த மார்ச் 14-ம் தேதி, சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் விவசாயத் துறையில் சிறந்து விளங்கும் ‘பசுமைப் பெண்’ விருது, திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த வாசுகி மருதமுத்து என்பவருக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்த வாசுகியின் கணவர் மருதமுத்து, ‘விவசாயம் செய்யப்போகிறேன்’ என்று சொன்னவுடன் மறுப்பு சொல்லாமல் பச்சைக்கொடி காட்டியதோடு, தானும் விவசாயத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்.

விருது வழங்கும் விழா அரங்கில் ‘விவசாயத்தில் சாதிக்கும் பெண்ணுக்கான விருது’ என்று அறிவித்த உடனேயே கைதட்டல்கள் பறந்தன. கணவரோடு வந்திருந்தாலும் தனியாகவே மேடையேறி... நடிகை ரோகிணி, தினமலர் நாளிதழ் இயக்குநர் கோபால்ஜி, நீர்நிலைகள் ஆராய்ச்சியாளர் ஜெயஸ்ரீ  ஆகியோர் கைகளில் விருதை வாங்கினார் வாசுகி மருதமுத்து.

பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!

விருது வாங்கியவுடன் பேசிய வாசுகி, “அவர் வேலையை விட்டுட்டு விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்த உடனேயே பல பண்ணைகளுக்குப் போய் விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். அதுக்குப் ‘பசுமை விகடன்’தான் முக்கியமான காரணம். அது மாதிரியான விவசாயப் புத்தகங்களை படிச்சுத்தான் ஓரளவுக்கு விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். பத்து வருஷத்துக்கு முன்னால விவசாயிகள் தற்கொலை அதிக அளவுல நடந்துக்கிட்டு இருந்துச்சு. விவசாயிகள் தற்கொலையை நிறுத்த நம்மால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சு 4 விவசாயிகளையாவது காப்பாத்தணும்னு தோணுச்சு. அப்படி நினைச்சுத்தான் விவசாயத்தை ஆரம்பிச்சோம். ஆனா, இன்னைக்கு எங்களால ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன் அடைஞ்சிருக்காங்க. அதுக்குக் காரணமா இருந்த பசுமை விகடனுக்கு முதல்ல நன்றி சொல்லணும்.

ஒரு பெரிய விவசாயி எங்ககிட்ட, ‘விவசாயத்துல மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் பார்க்குறது கனவுலதான் நடக்கும். உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை’னு சொன்னார். ஆனால், நானும் என் கணவரும் விருப்பத்துடனும், மன உறுதியுடனும் உழைச்சு சம்பங்கி மூலம் 60 சென்ட் நிலத்துல மாசம் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்த்தோம். நாங்கள் வருமானம் எடுத்தது மட்டுமல்லாம, பல விவசாயிகளையும் வருமானம் எடுக்க வெச்சோம். எங்ககிட்ட சம்பங்கிச் சாகுபடி கத்துக்கிட்டு அதைச் செய்ற விவசாயிகள் தினமும் எங்களுக்குப் போன் பண்ணி ‘எங்க கடனையெல்லாம் அடைச்சாச்சு’னு சொல்வாங்க. சிலர், ‘வீடு கட்டியிருக்கோம்’னு சொல்வாங்க. ஒவ்வொரு நாளும் இப்படி அவங்க சந்தோஷமா சொல்லும்போதே எங்களுக்குப் பல விருதுகள் வாங்கின மாதிரி இருக்கும்.

நாம சாப்பிடுற சாப்பாடு எல்லாமே மண்ணுல இருந்துதான் வருது. நம்ம ஆரோக்கியம்ங்குறது மண்ணுல இருந்துதான் ஆரம்பிக்குது. அந்த மண் மலடாகக் கூடாது. அதனால, முக்கியமா மண்ணை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அப்போதான் மனித சமுதாயம் ஆரோக்கியமா இருக்கும். வருங்காலச் சந்ததிக்குப் பணத்தைக் கொண்டுபோயி கொடுக்க வேண்டாம். அவங்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தாலே போதும். இயற்கையான பொருள்கள், ரசாயன பொருள்கள் ரெண்டையுமே பூமிக்குக் கொடுக்கிறோம். இந்த இரண்டையும் பூமி ஏத்துக்கும். ஆனா, மனுஷனுக்கு ரசாயனத்தை ஏத்துக்குற தன்மை இல்லை. மண்ணையும், இயற்கையையும் காப்பாத்துறதுக்கு நாம எல்லாருமே முன்வரணும்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய தினமலர் நாளிதழின் இயக்குநர் கோபால்ஜி, “விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் என் அன்புச் சகோதரர். அவர் பொறுப்பேற்ற பிறகு, விகடன் குழுமத்தில் அவள் விகடன், பசுமை விகடன், டாக்டர் விகடன் எனப் பல இதழ்களைக் கொண்டு வந்திருக்கிறார். இதுதவிரப் பத்திரிகை உலகில் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அவருடைய அப்பாவுக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். அதே ஈடுபாடு இவரிடமும் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!

விகடன் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இன்றைக்கு ஐ.டி இளைஞர்கள் அதிகமானோர் இயற்கை விவசாயத்துக்கு மாறிக்கொண்டு வருகிறார்கள். இயற்கை விவசாயம் இன்றளவில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது.

இதில் நம்மாழ்வார் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்துப் போராடி இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்து இருக்கிறார். இன்றைக்கு இயற்கை விவசாயம் இல்லையென்றால் வீட்டுக்கு ஒரு சிறுநீரக நோயாளி இருப்பார். நம் முன்னோர், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ எனச் சொல்வார்கள். இன்று ‘ரசாயனமே உணவு, ரசாயனமே மருந்து’ என மாறியிருக்கிறது. இந்தத் தலைமுறை இயற்கை விவசாயத்தைச் செய்தால்தான் அடுத்த தலைமுறை நோயில்லாமல் வாழ முடியும். இயற்கை விவசாயத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் பசுமை விகடனுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

விருது வழங்கிப் பேசிய நடிகை ரோகிணி, “இந்த விருதை வழங்கியதில் ரொம்பவே பெருமைப்படுகிறேன். பெண்கள் கையில் இருந்த விவசாயத்தைப் பறித்த அன்றே விவசாயம் வியாபாரம் ஆகிப் போனது. அதன் பிறகு நம்முடைய வாழ்க்கைமுறை எல்லாமே மாறிப் போய்விட்டது.

ஆனால், அதை மாற்றி அமைப்பதற்காகத் தற்போது பெண்கள் எல்லாம் விவசாயத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் பிரச்னைகளில் மரபணு மாற்று விதை பிரச்னை மிக முக்கியமானது. இப்போதாவது நாம் அதைத் தூக்கி எறிய வேண்டும். இதைச் சொல்ல வாய்ப்பளித்த விகடனுக்கு என் நன்றி” என்றார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism