Published:Updated:

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!

இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்டின் 50-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!

இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்டின் 50-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

Published:Updated:
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!

தொழில் துறை நிறுவனங்களைப் பற்றிய செய்திகளைத் தாங்கி சென்னையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் மிகச் சில மட்டுமே. ஆனால், ‘இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்ட்’ பத்திரிகை, கடந்த 50 ஆண்டுகளாகத் தொழில் துறை பற்றி வெற்றிகரமாக எழுதி வருகிறது.

இந்தப் பத்திரிகையின் 50-வது  ஆண்டு விழா, கடந்த வாரம் சென்னையில் சிறப்பாக நடந்தது. ஏழு அமர்வுகளாக நாள் முழுவதும் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியை நடத்தினார் இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்ட் பத்திரிகையின் எடிட்டரும் ஸ்தாபகருமான எஸ்.விஸ்வநாதன்.

இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில்   பேசிய சி.ஐ.ஐ அமைப்பின் தலைவர் சோபனா காமினேனி, ‘‘இந்தியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் 10 ட்ரில்லியனை எட்டும் என்று கணிக்கிறார்கள். அதில், தொழில் செய்ய ஏற்றச் சூழல், போட்டியைச்  சமாளிக்கும் திறன் முக்கியமானதாக இருக்கும். எனவே, தொழில் துறைகள் உலக அளவில் போட்டியை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!

அடுத்துப் பேசிய திட்டக்குழுவின் முன்னாள் துணை இயக்குநர் மான்டேக்சிங் அலுவாலியா, “வேளாண் துறையில் பசுமைப் புரட்சியைக் கொண்டுவர நினைத்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பலரிடமும் கருத்து கேட்டார். திட்டக்குழுவும், நிதித் துறையும் இதனை அமல்படுத்த தயங்கியபோது, தைரியமாக அதைச் செயல்படுத்தினார். அதனால்தான் இன்று வேளாண் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி நிற்கிறது.

இன்றைய தேதியில், அரசுத் திட்டங்களில் பெயர் வைப்பதில் அதிக கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் அரசு திறம்பட செயல்பட்டால் மட்டுமே 2030-ல் நாம் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியைக் காணமுடியும்’’ என்றார்.

  ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் ஆர்.தியாகராஜன், “சில சீர்திருத்தங்களைச் செய்ய நாம் அரசாங்கமாக இருக்க வேண்டியதில்லை. அரசுடன் இருந்தாலே போதும். பசுமைப் புரட்சியைச் செய்த எம்.எஸ் சுவாமிநாதன், அரசின் எந்த அங்கத்திலும் இல்லை. ஆனால், தனது செயல்பாட்டால் அரசை செய்யவைத்தார். இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்ட் பத்திரிகை ஆசிரியர் விஸ்வநாதன், தனி ஒருவராக, இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டிருக்கிறார். இவரின் பலம் என்னவென்றால், 99 சதவிகிதப் பணியை இவரே செய்துவிட்டு, அதற்கான 100 சதவிகிதப் பாராட்டை மற்றவர்களுக்குத் தந்துவிடுவார்’’ என்றார்.

துவக்க விழா நிகழ்ச்சிக்குப்பின் தொழில் துறை மற்றும் வணிகம், நிதித்துறை, தொழில்நுட்பம், விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் உரையோடு அமர்வுகள் நடைபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிதித்துறை அமர்வில் பேசிய திட்டக்குழுவின் முன்னாள் துணை இயக்குநர் மான்டேக்சிங் அலுவாலியா, “2030 என்ற இலக்கை நிர்ணயித்து, நம் வளர்ச்சியை முன்னெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை இன்றிலிருந்தே தொடங்க வேண்டும்.உண்மையான வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும்’’ என்றார்.

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர்

எ.வெள்ளையன் பேசும்போது, ‘‘சர்க்கரை, சிமென்ட், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோ மொபைல் போன்ற தொழில்களில் தமிழ்நாடு அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறைந்துகொண்டு வருகிறது. மின் உற்பத்தியில் அதிக முதலீடுகள் செய்யப்படாதது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் கவனம் செலுத்தாதது போன்றவை தமிழக தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன’’ என்றார்.

நிதிச் சேவைக்கான அமர்வில் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரியான டாக்டர் டி.வி.சோமநாதன், ‘‘தனியார் வங்கிகள், வளர்ச்சிக்கான துறைகளில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால், பொதுத் துறை வங்கிகள் இது போன்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. பொதுத் துறை வங்கிகளில் முடிவெடுப்பது சவாலாக இருக்கிறது.  எல்லாவற்றும் அரசாங்கத்தையே எதிர்பார்த்து நிற்கிற நிலைதான் இருக்கிறது. துறை சார்ந்த நிபுணர்கள் மக்களிடம் நல்ல மாற்றங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களுடைய பிரதிநிதி இதை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசென்று, வங்கித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதே அமர்வில் பேசிய அலுவாலியா, ‘’பொதுத் துறை வங்கிகளில் தற்போதுள்ள நிர்வாகச் செயல்பாடு, வளர்ச்சிக்கு வழிவகுக்காது. ஆனால், இதைக் காரணமாக வைத்து பொதுத் துறை வங்கிகளைத் தனியார்   மயமாக்க வேண்டும் என்பதும் தவறு. அதேபோல, பொதுத்துறை பங்குமூலம் 30% - 50% மட்டுமே இருக்க வேண்டும். வங்கியின் தலைவர், இயக்குநர் குழுவினால் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். பொதுத் துறை வங்கிகளில் செயல்படாத மற்றும் ஊழல் குற்றாச்சாட்டுக்கு உள்ள தலைவர்களை நீக்கும் அதிகாரம் ஆர்.பி.ஐ-க்கு வேண்டும்’’ என்றார்.

இண்டஸ்இண்ட் வங்கியின் தலைவர் ஆர்.சேஷசாயி பேசும்போது, ‘‘புதிய தொழில்நுட்பங்களில் உள்ள வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது. பணப் பரிமாற்றம் செய்ய உதவும் யூ.பி.ஐ பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்!

இந்த அமர்வில் சேஷசாயி, ‘‘நம் பொருளாதாரம் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி அடைவதற்கு தற்போது வங்கியின் நிதிவளம் போதுமானதாக இருக்கிறதா?’’என ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். 

இதற்குப் பதிலளித்த அலுவாலியா, ‘‘தற்போதைய நிலையில், நம் நாடு இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடைய சாத்தியமில்லை. நம் நாட்டின் ஜி.டி.பி-யில் சேமிப்பின் பங்களிப்பு 30 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்து கொண்டு வருகிறது. ஆனால், சீனாவில் அதன் ஜி.டி.பி-யில் சேமிப்பின் பங்கு 50 சதவிகித அளவில் இருக்கிறது’’ என்றார்.

ஐசிடி அகாடமியின் தலைவரும், காக்னிசன்ட் நிறுவனத்தின் கெளரவத் தலை வருமான லட்சுமி நாராயணன், வரும் காலத்தில் வளர்ச்சிக்கான பட்டியலைப் பட்டியலிட்டார். ‘‘1)விமானப் போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு. 2) சுகாதார மேம்பாடு, மருந்துத் தயாரிப்பு, பயோ டெக்னாலஜி. 3)எலெக்ட்ரானிக்ஸ் - சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர், கம்ப்யூட்டிங் குவான்டம் டெக்னாலஜி.4) மாற்று எரிசக்தி ஆகிய துறைகள் சிறப்பாகச் செயல்படும்’’ என்றார்.

இறுதியாக நடைபெற்ற அமர்வில் பேசிய சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின்  தலைவரும் மேலாண்மை இயக்குநருமான  சுரேஷ் கிருஷ்ணா,  “நிறுவனத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தால், எந்த நிறுவனத்தி னாலும் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்’’ என்றார்.

இறுதியாகப் பேசிய இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்ட்  ஆசிரியர்  விஸ்வநாதன்,  கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பத்திரிகையை நடத்துவதில் உறுதுணையாக இருந்த அனைவரையும் நினைவுகூர்ந்தார். பொருளாதாரம் குறித்தும், தொழில் துறை குறித்தும் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தருவதில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த  இந்தப் பத்திரிகை, நூறு ஆண்டு களைக் கடந்தும் பயணிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- ச.ஸ்ரீராம்
படங்கள்: ப.பிரியங்கா