நிருபர் : சார் வணக்கம். ‘ராமர் கோயில் ரத யாத்திரைக்கு அனுமதி தர்றது யாருக்கோ சாதகமானது’ன்னு சொல்லியிருக்கீங்களே, அந்த ‘யாருக்கோ’ங்கிறது யாரு?

கமல் : யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக இருக்கலாம். யாருக்கு வேண்டுமானாலும் பாதகமாகவும் இருக்கலாம். ஏன் நமக்கும்கூட சாதகமாக இருக்கலாம்.

நிருபர் : எதைக் கேட்டாலும் ‘நம்மகிட்டயே பிரச்னை இருக்கு’ன்னு மையமா சொல்றீங்களே?

கமல் : அது மையம் அல்ல, மய்யம்!

நிருபர் : அதான் சார், ‘நம்மகிட்ட தப்பு இருக்கு’ன்னே குற்றம் சாட்டுறீங்களே, ஏன்?

கமல் : நம்மவர் என்று எனக்கு நாமகரணம் சூட்டினீர்கள். நம்மவர்களை நான் குற்றம் சாட்டக்கூடாதா?

நிருபர் : சார், வந்து...

கமல் : இருங்கள் நான் இன்னும் முடிக்கவில்லை. நம்மவர் என்று எனக்கு நாமகரணம் சூட்டினீர்கள். நம்மவர்களை நான் குற்றம் சாட்டக்கூடாதா? சொல்வது எனது கடமை.

நிருபர் : சார், வந்து...

கமல் : இருங்கள், இருங்கள், இன்னும் நான் முடிக்கவில்லை. நம்மவர் என்று எனக்கு நாமகரணம் சூட்டினீர்கள். நம்மவர்களை நான் குற்றம் சாட்டக்கூடாதா? சொல்வது எனது கடமை. கேட்பது உங்கள் கடமை. கேட்காமல் இருப்பது உங்கள் உரிமையும்கூட.

நிருபர் : முடிஞ்சுச்சா சார்?

கமல் : முடிந்தது என்றும் சொல்லலாம். ஆனால் விடிந்தது என்று சொல்ல முடியாது. விடியவைப்பது நமது கடமை.

நிருபர் : தலை சுத்துது சார்!

கமல் : ஒற்றைத் தலை உள்ள உங்களுக்கே சுற்றுகிறது என்றால் பத்துத் தலை கொண்ட ராவணனுக்குச் சுற்றியிருப்பது எவ்விதம்? உணர்வாய், மிரள்வாய்!

நிருபர் : கவிதை வேறயா? இப்படிப் புரியாம எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சீங்க?

கமல் : புரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். பிரியவில்லை என்று நான் சொல்கிறேன். அதாவது, சொல்லும் அர்த்தமும் பிரியவில்லை.

நிருபர் : போதும் சார். ரஜினி காவிரிப் பிரச்னை பத்திப் பேசாம நழுவுறார்னு சொல்றீங்களே?

கமல் : நழுவுவது அவர் பணி. தழுவுவது மய்யத்தின் பணி. கட்டிப்பிடி வைத்தியம். ‘வசூல்ராஜா’ பார்த்திருக்கீங்களா?

நிருபர் : பார்த்திருக்கேன் சார். சினேகாவும் ரகசியாவும் நடிச்ச படம்தானே, ஸாரி ஸாரி, அவங்க ரெண்டு பேரும் உங்களோட சேர்ந்து நடிச்ச படம்.

கமல் : அப்புறம் என்ன, நீங்களும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்தான்.

நிருபர் : ரொம்ப ஓவர் சார். இப்படித்தான் தமிழிசையையும் ஹெச்.ராஜாவையும் கட்சியில் சேர்த்தீங்களா?

கமல் : நரேந்திர தாமோதர் மோடி, உங்களுக்கும் பிரதமர், எனக்கும் பிரதமர். அதேபோல்தான் மக்கள்மீதும் நீதிமீதும் நம்பிக்கை உள்ள எல்லோரும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்.

நிருபர் : புதுசால்ல இருக்கு? இணையத்தில் தப்பா சேர்த்துட்டீங்கன்னுல்ல தகவல் வந்துச்சு?

கமல் : இணையம் என்பதே இணைப்பதற்குத்தானே, தயவாய் வெருள்வாய்!

நிருபர் : ஆமா உங்க கட்சியோட கொள்கை எப்போ சொல்வீங்க?

கமல் : அதற்கான ஆய்வில் ஆன்றோர்களும் சான்றோர்களும் என் போன்றோர்களும் ஈடுபட்டு வருகிறோம்.

நிருபர் : முதல்ல ‘மருதநாயகம்’ வருமா, உங்க கொள்கைத் திட்டம் வருமா?

கமல் : விஸ்வரூபம் - 2, சபாஷ் நாயுடுகூட வரலாம்.

நிருபர் : ஆன்மிக அரசியல் பற்றி..?

கமல் : தண்ணீரில் எண்ணெய் மிதக்கலாம். எண்ணெயில் தண்ணீர் மிதக்க முடியாது.

நிருபர் : நீங்க கடவுள் இல்லைனு சொல்றவர். அதனால்தான் இப்படி...

கமல் : கடவுள் இல்லைனு சொல்லலை, இருந்தா நல்லாருக்கும்னுதான் சொன்னேன்.

நிருபர் : இருந்தா நல்லாருக்கும்னு சொன்னா இல்லைனு சொல்றதா நினைக்கலாம்ல சார்?

கமல் : இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறாங்கனுகூட நினைக்கலாம்.

நிருபர் (தலையைச் சொறிந்தபடி) : இல்லை சார், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் பலபேர் உங்களை ‘ஆண்டவரே’னு கூப்பிடறதை நீங்க மறுக்கவே இல்லையே?

கமல் : நான் இறை மறுப்பாளன். ஆனால் ஆண்டவன் மறுப்பாளன் அல்லன்.

நிருபர் : புரியலை சார், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா ஆண்டவர்னு எல்லோரும் உங்களை...

கமல் : என்னை அப்படிக் கூப்பிடறவங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல? அவங்க என்மேல நம்பிக்கை வெச்சிருக்காங்க. அதனால ‘ஆண்டவரே’னு கூப்பிடறாங்க.

நிருபர் : அப்போ நீங்க ஆண்டவரா சார்?

கமல் : நான் ஆண்டவன் இல்லை, ஆளப்போறவன், ஆளவந்தான், கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்துசெய்த கலவை நான். உள்ளே மிருகம், வெளியே இருமும், (இருமிக் காட்டுகிறார்) மக்களுக்கு டெங்குக்காய்ச்சல், ஆள்பவர்களுக்கோ பங்குக்காய்ச்சல், கடவுள்பாதி மிருகம் பாதி கலந்துசெய்த கலவை நான், கறுப்பு பாதி, காவி பாதி, பிரிக்க முடியா கலவை நான்.

கறுப்புக்குள்ள காவி இருக்கு, இருட்டுக்குள்ள வெளிச்சம் இருக்கு. புரிஞ்சுச்சா?

நிருபர் (தலையைப் பிய்த்தபடி) : புரியலைனு சொல்லலை, புரிஞ்சா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!