Published:Updated:

‘யூத் ஒலிம்பிக்ஸ்’ - ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

ராம் பிரசாத்
‘யூத் ஒலிம்பிக்ஸ்’ - ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்
‘யூத் ஒலிம்பிக்ஸ்’ - ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

அர்ஜென்டினாவின் பியோனஸ் ஏர்ஸ் நகரில் யூத் ஒலிம்பிக்ஸ் எனும் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 206 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில் பெண்களுக்காக  மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சிம்ரன் பங்கேற்றார். 43 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சிம்ரன் தனது பிரிவில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்குப் பதக்கம் உறுதியானது. அமெரிக்காவின் எமிலி ஷில்சனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டில் சிம்ரன் 6-11 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தார். இதன்மூலம் சிம்ரனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.  

இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது.இந்தப்போட்டியில் 2-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி தழுவியது. இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பியது. மகளிர் அணி அர்ஜென்டினாவுடன் மோதியது. 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி பெண்கள் அணியும் வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பியது.