அலசல்
Published:Updated:

செய்தியை முடக்கும் துறையா? - அச்சத்தில் சேனல்கள்

செய்தியை முடக்கும் துறையா? - அச்சத்தில் சேனல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
செய்தியை முடக்கும் துறையா? - அச்சத்தில் சேனல்கள்

செய்தியை முடக்கும் துறையா? - அச்சத்தில் சேனல்கள்

‘அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை, அரசு கேபிள் நிறுத்திவிடும்’ என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து தங்களுக்கு பிரஷர் வருவதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் குமுறுகின்றன.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருந்தார் டி.டி.வி.தினகரன். அதை, ஜெயா ப்ளஸ்  சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. அதனால் அரசுத் தரப்பு கடுப்பானது. உடனடியாக, ஜெயா ப்ளஸ்  ஒளிபரப்பை அரசு கேபிள் நிறுத்தியது.

செய்தியை முடக்கும் துறையா? - அச்சத்தில் சேனல்கள்

‘‘தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டி.வி ஒளிபரப்பு மையங்களுக்கு (எம்.எஸ்.ஓ), சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து மார்ச் 24-ம் தேதி வாய்மொழியாக ஓர் உத்தரவு சென்றுள்ளது. அதில், ஜெயா ப்ளஸ்  சேனலின் ஒளிப்பரப்பை உடனடியாக நிறுத்தும்படி சொல்லியுள்ளனர். அதையடுத்து, தமிழகம் முழுவதும்  ஜெயா ப்ளஸ் சேனல் ஒளிபரப்பை கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்  நிறுத்தினர். அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில், 136-வது அலைவரிசையில் ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஜெயா ப்ளஸ் சேனல் ஒளிபரப்பு அரசு கேபிளில் நிறுத்தப்பட்ட பிறகு, அந்த அலைவரிசையில் பாலிமர் சேனல் ஒளிபரப்பப்படுகிறது. ‘அனலாக்’ என்று சொல்லப்படும் டிஜிட்டல் அல்லாத கேபிள் அலைவரிசையில் ‘எஸ் பேண்ட்’ அலைவரிசையில், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதுவும் நிறுத்தப்பட்டது. இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஜெயா ப்ளஸ் சேனலை மீண்டும் ஒளிபரபரப்பு செய்யும் படியும், கடைசி அலைவரிசையாக அதை ஒளிபரப்பு செய்யுமாறும் சென்னையிலிருந்து உத்தரவு போயிருக்கிறது. இதனால், செட்டாப் பாக்ஸில் 831-வது அலைவரிசையிலும், அனலாக் ஒளிப்பரப்பில் ‘எஸ் பேண்ட்’ அலைவரிசையிலிருந்து கடைசி சேனலாக ‘யூபேன்ட்’ அலைவரிசையிலும் ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பாகி வருகிறது” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பேட்டிகளை வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. புதிய சேனல் ஒன்று, ஆர்.கே.நகர் தொகுதி குறித்த கருத்துக்கணிப்பில் ஆளும்கட்சிக்கு எதிரான கணிப்பை வெளியிட்டதால், அமைச்சர் ஒருவரின் அலுவலகத்திலிருந்து அந்த சேனலுக்கு மறைமுக மிரட்டல் போயுள்ளது. அரசு கேபிளிலிருந்து  அந்த சேனல் நீக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து அரசு கேபிள் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரனிடம் கேட்டபோது, “தினகரன் உண்ணாவிரம் இருந்த தினத்தில், தஞ்சாவூரில் ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது டெக்னிக்கல் பிரச்னையாக இருக்கலாம். நான் ஒருவாரம் விடுமுறையில் இருந்தேன். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. அப்படி ஓர் உத்தரவு எனக்கு எங்கிருந்தும் வரவில்லை” என்று சுருக்கமாக முடித்து கொண்டார்.

செய்திகளைத் தர வேண்டிய துறை, செய்தியை முடக்கும் துறையாக மாறிக்கொண்டிருக்கிறதோ?

- அ.சையது அபுதாஹிர்