Published:Updated:

`தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக பார்க்க முடியாது!'- `அம்மா' அறிவிப்பு

சிந்து ஆர்
`தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக பார்க்க முடியாது!'- `அம்மா' அறிவிப்பு
`தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக பார்க்க முடியாது!'- `அம்மா' அறிவிப்பு

``கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக நாங்கள் பார்க்க முடியாது.  அதே நேரம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அம்மா உறுதியாக உள்ளது'' என மலையாள நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

மலையாள நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி. சார்பில் நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்மியா நம்பீசன் உள்ளிட்டோர் கடந்த சனிக்கிழமை கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ``மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து திலீப் வெளியேற்றப்படவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நடிகை வெளியே உள்ளார். `அம்மா' செயற்குழுவில் திலீப்பை நீக்காமல் பொதுக்குழுவில் அதுபற்றி பேசுவதாக சொல்கிறார்கள். நடிகைகளுக்கு தொழில் பாதுகாப்பு வேண்டும்" என பல குற்றச்சாட்டுக்களை அம்மா அமைப்பு மீது வைத்தனர்.

நடிகைகள் கூட்டமைப்புக்குப் பதில் அளிக்கும் விதமாக மலையாள நடிகர் சங்கமான `அம்மா' இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக நாங்கள் பார்க்க முடியாது. அதேநேரம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் `அம்மா' உறுதியாக உள்ளது. ஆனால் மழை பாதிப்பு, நிவாரண நிதி சேகரித்து அனுப்புதல் என தொடர்ந்து ஏற்பட்ட தடங்கலால் நடிகையின் பிரச்னை குறித்து கவனம் செலுத்தமுடியவில்லை. எல்லா பிரச்னைகளையும் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் தலையில் மட்டுமே வைத்துக் கட்டுவது சரியல்ல" எனக் கூறப்பட்டுள்ளது.