Published:Updated:

``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்!''- சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்

எம்.குமரேசன்
``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்!''-  சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்
``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்!''- சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்

பரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் மத்தியில், மலை ஏறலாமா அல்லது  வேண்டாமா என்கிற குழப்பம் நிலவுகிறது.  இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் என்ற 32 வயது ஆசிரியை சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். அக்டோபர் 8-ம் தேதி சபரிமலைக்குச் செல்வதற்காக விரதத்தையும் தொடங்கியுள்ளார் ரேஷ்மா. 

picture: facebook

இந்நிலையில், ஃபேஸ்புக் வழியாக ரேஷ்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேஷ்மா கூறுகையில், ''சமூக வலைதளங்களில் என்னை அசிங்கமாகத் திட்டுகிறார்கள். 'சபரிமலை ஏறினால் உயிருடன் திரும்பமாட்டாய்' என்று மிரட்டல் விடுக்கிறார்கள். என்னை மிரட்டுவது ஆண்களா அல்லது பெண்களா என்று தெரியவில்லை. கண்ணபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்'' என்று கூறியுள்ளார். 

முன்னதாக  ரேஷ்மா, ''மாத விலக்கு ரத்தம் மற்ற ரத்தம் போல ஒரு ரத்தமே.  சிறுநீர் போலத்தான் அதுவும். உடலில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு கழிவு அவ்வளவே. இதைக் காரணம் காட்டி, பெண்களை சபரிமலை செல்ல விடாமல் தடுப்பது நியாயம் இல்லை. 41 நாள் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று  புனிதப் பயணத்தை நிறைவேற்றுவேன்'' என்று கூறியிருந்தார். 

ரேஷ்மாவின் கணவர் நிஷாந்த், வங்கியில்  பணிபுரிகிறார். ரேஷ்மாவின் முடிவுக்கு அவரின் கணவரும் ஆதரவளித்துள்ளார். ஆனால், சபரிமலை  அடிவாரமான  பம்பையில் தொடர்ந்து பாரதிய ஜனதா, சிவசேனா கட்சியினர் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

'சிவசேனா தரப்பில் கூட்டாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம்' என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.