Published:Updated:

டூவீலரில் கொட்டை எழுத்தில் `விவசாயி' ! - தயங்குறவங்க மத்தியில் கலக்கும் தஞ்சாவூர் வாலிபர்

கு. ராமகிருஷ்ணன்
டூவீலரில் கொட்டை எழுத்தில் `விவசாயி' ! - தயங்குறவங்க மத்தியில் கலக்கும் தஞ்சாவூர் வாலிபர்
டூவீலரில் கொட்டை எழுத்தில் `விவசாயி' ! - தயங்குறவங்க மத்தியில் கலக்கும் தஞ்சாவூர் வாலிபர்

தஞ்சை மாவட்டம், முன்னையம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் ஃபேஷன் ப்ரோ பைக் இப்பகுதி மக்களிடையே ஏக பிரபலம். வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் இவரது டூவீலர் சென்றாலும், அனைவரின் பார்வையும் இவரது பைக்கையே உற்று நோக்கும்.

 வழக்கறிஞர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள்தான் தங்கள் வாகனத்தில் தம் தொழிலைப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் காட்டுவார்கள். இவர்களது துறை சார்ந்த லோகோ அல்லது பெயர் இருக்கும். இதே பாணியில், தஞ்சை மாவட்டம் முன்னையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஆனந்தராஜ், தன்னுடைய புத்தம்புது வாகனத்தில் விவசாயி என கொட்டை எழுத்தில் எழுதியுள்ளார். இதனால், இவரது பைக் இப்பகுதிகளில் ஏக பிரபலமாக உள்ளது.

‘’என்னோட பைக்ல ஆறு மாசத்துக்கு முன்னாடியே விவசாயினு எழுதிட்டேன். இப்ப வெளியான `கடைக்குட்டி சிங்கம்' படத்துல கதாநாயகன் கார்த்திக் வண்டியில விவசாயினு எழுதியிருக்காங்க. நான் விவசாயினு சொல்லிக்கிறதுல ரொம்பவே பெருமைப்படுறேன். ஆனால், எங்க பகுதி விவசாயிகள் மனசுல ஒரு தாழ்வுமனப்பான்மை இருக்கு. தங்களை விவசாயினு சொல்லிக்கத் தயங்குறாங்க. அவங்க மனசை மாத்துறதுக்காகத்தான், நான் முன்மாதிரியாக இருக்கணும்னு முடிவெடுத்து, என்னோட டூவீலரில் இப்படி எழுதியிருக்கேன். எல்லாரும் என்னைப் பாராட்டுறாங்க. எங்க பகுதி மக்களுக்கு என்னோட உண்மையான பெயர் என்னன்னு தெரியாது. எல்லாரும் என்னை விவசாயினுதான் பேர் சொல்லி அழைக்குறாங்க” என மகிழ்ச்சிபொங்கத் தெரிவித்தார்.