Published:Updated:

தரம், மணம், சுவை... "ஃபில்டர் காபி" எனும் அற்புதம்! sponsored Content

தரம், மணம், சுவை... "ஃபில்டர் காபி" எனும் அற்புதம்!  sponsored Content
தரம், மணம், சுவை... "ஃபில்டர் காபி" எனும் அற்புதம்! sponsored Content

ஃபில்டர் காஃபி, தென்னிந்தியாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று. வாசம் வீசும் தூய்மையான காஃபித் தூளின் நற்குணங்களை சுடுநீர் கிரகித்துச் சொட்டி வரும் டிகாக்ஷனை, கறந்த பாலில் கலந்து அரைச் சர்க்கரையுடன் இனிப்பும் கசப்புமாய் சுடச்சுட அருந்தும் அந்த இன்பத்திற்கு ஈடு இணை ஏது! காஃபி குடிப்பது மட்டுமல்ல ஃபில்டர் காஃபி டிகாக்ஷனைத் தயாரிப்பதும்கூட தனி அனுபவம்தான்! டபரா செட் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தங்கநிறக் காஃபியைப் பற்றிச் சொல்ல நாள் போதாது!

தரம், மணம், சுவை... "ஃபில்டர் காபி" எனும் அற்புதம்!  sponsored Content

இன்று கேப்பசீனோ, மோக்கா, அமெரிக்கானோ போன்ற பலவகையான காஃபிக்களை இளந்தலைமுறையினர் விரும்பி அருந்துவதைக் காணமுடிகிறது. ஆனாலும், ஃபில்டர் காஃபிக்கான இடத்தை இவை கொஞ்சம் கூட அசைக்கமுடியவில்லை. அனைத்து வயதினரிடமும் இதை அருந்தும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தவிர குறைந்தபாடில்லை, காரணம், ஃபில்டர் காஃபியின் தனித்துவமான நறுமணம், சுவை மற்றும் தரம்.  மணமான, தரமான காஃபி கொடுக்கும் இந்த அனுபவத்தை நமக்கு வழங்குவதற்காக, சில நிறுவனங்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கின்றன... அதில் முக்கியமான காஃபித் தூள் தயாரிக்கும் நிறுவனமாக இருப்பது "கோத்தாஸ் காஃபி", காஃபி விரும்பிகளுக்கு இந்தப் பெயர் நிச்சயம் பரிட்சயமானதாகவே இருக்கும். 

கோத்தாஸ் காஃபியின் பாரம்பரியம்...

ஸ்ரீ கோத்தா கிருஷ்ணையா செட்டி அவர்களால் 1948ஆம் வருடம், வீடுகளுக்கும் ஓட்டல்களுக்கு காஃபிப் பொடி விற்பனை செய்ய சிறியதாக  துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இந்தியா முழுக்க ஃபில்டர் காஃபி குடிக்கும் மக்களிடையே ஒரு குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்டது. தற்போது CK ஸ்ரீநாதன் மற்றும் அவரின் மகன் CS நித்தின் தலைமையில் இயங்கிவரும் கோத்தாஸ் காஃபி நவீன தொழில்நுட்பம் மூலம் வியாபாரத்தை இந்திய அளவில் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அசத்திவருகிறது.

தரம், மணம், சுவை... "ஃபில்டர் காபி" எனும் அற்புதம்!  sponsored Content

காஃபிச் செடி விளைவிப்பதற்கு மிதமான குளிர் சீதோஷண நிலை தேவைபப்டுகிறது. இதற்கு உகந்த, கர்நாடக மாநிலத்தில் இயற்கை எழில் பொங்கும் சிக்மகளூர் மற்றும் குடகு மலைப் பிரதேசங்களில் விளையும் உயர்தர காஃபிக் கொட்டைகளையே கோத்தாஸ் நிறுவனம் தங்களின் தயாரிப்புகளுக்கு பயன்படுத்துகிறது.  ரொபஸ்டா மற்றும் அராபிக்கா ஆகிய இருவகை காஃபிக் கொட்டைகளின்  தரத்தைப் பலகட்ட சோதனைகளுக்குப் பின் கொள்முதல் செய்கிறது  கோத்தாஸ். ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 70 வருடங்களாய் இந்திய காஃபித் தூள் வணிகத்தில் கோத்தாஸ் நிறுவனம் மிகமுக்கிய இடம்பிடிக்க இவர்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கும் தரமே முக்கிய காரணம்.

ஃபில்டர் காஃபி தயாரிக்க முக்கியமாகத் தேவைப்படும் சாதனம் ஃபில்டர் (அ) வடிகட்டி. இந்த சாதனத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பதில் தெளிவான முடிவு இல்லை என்றாலும் இதன் மகத்துவத்தை நிச்சயம் மறுக்கமுடியாது. உலகத்தின் பல மூலைகளில், எஸ்ப்ரெஸ்ஸோ, மோக்கா, ஏரோபிரெஸ் போன்ற பல காபி தயாரிக்கும் முறைகள் இருப்பது போல, நாம் அளித்த முறை இந்திய காஃபி விரும்பிகளின் தாகத்தை தீர்ப்பதற்காகவே 4000 டன் அளவுக்கு காஃபிக் கொட்டைகளை வறுத்து அரைத்துத்தள்ளுகிறது கோத்தாஸ். நோவா தெர்ம் பியூர் காஃபி, ஸ்பெஷாலிட்டி பிளெண்ட், பிரீமியம் பிளெண்ட், கோத்தா பிளெண்ட், ஹோம் பிளெண்ட் என பலதரப்பட்ட கலவைகளில் கிடைக்கும் கோத்தாஸ் காஃபி அனைத்துவிதமான வாடிக்கையாளர்களையும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப திருப்திப்படுத்துகிறது. என்பது நிச்சயம் பெருமைதான்! கோத்தாஸ் நிறுவனம் பலதரப்பட்ட காஃபி தயாரிக்கும் நவீன சாதனங்களையும் விற்பனை செய்துவருகிறது...

தரம், மணம், சுவை... "ஃபில்டர் காபி" எனும் அற்புதம்!  sponsored Content

இந்திய காஃபி விரும்பிகளின் தாகத்தை தீர்ப்பதற்காகவே 4000 டன் அளவுக்கு காஃபிக் கொட்டைகளை வறுத்து அரைத்துத்தள்ளுகிறது கோத்தாஸ். நோவா தெர்ம் பியூர் காஃபி, ஸ்பெஷாலிட்டி பிளெண்ட், பிரீமியம் பிளெண்ட், கோத்தா பிளெண்ட், ஹோம் பிளெண்ட் என பலதரப்பட்ட கலவைகளில் கிடைக்கும் கோத்தாஸ் காஃபி அனைத்துவிதமான வாடிக்கையாளர்களையும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப திருப்திப்படுத்துகிறது. கோத்தாஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை www.cothas.com எனும் அவர்களின் இணையதளத்தில் சென்று வாங்கலாம்! சுவையான ஃபில்டர் காஃபி தயாரிப்பது குறித்த பல பயனுள்ள வீடியோக்களையும் இத்தளத்தில் பார்க்கலாம்!