டிபன் வகைகளில் எவர்கிரீன் என்றால் அது இட்லிதான். காலை உணவாகச் சாப்பிட மிகவும் ஏற்றதும் எளிதில் ஜீரணமாகக்கூடியதும் அதுதான். வித்தியாசமாகச் சாப்பிட வேண்டும் என்று எண்ணி ஹோட்டலுக்குச் சென்றாலும், நம்மில் பலரும் முதலில் `இரண்டு இட்லி’ என்றுதான் ஆட்டோமேட்டிக்காக ஆர்டர் செய்வோம். அந்த அளவுக்கு நம் உணவுப்பழக்கத்தில் இரண்டறக் கலந்துவிட்ட இட்லியை மென்மையாக, அருமையாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

அதுமட்டுமல்ல... தினமும் இட்லி சாப்பிட்டால் சற்று சலித்துவிடும் என்பதால், இட்லியை அடிப்படையாக வைத்துச் செய்யக்கூடிய தக்காளி இட்லி, ஆந்திரா ஸ்பைஸி லெமன் இட்லி, ஸ்டஃப்டு மசாலா இட்லி, இட்லி 65, இட்லி சாண்ட்விச், இட்லி பர்கர் என ஒரு `இட்லி மேளா’வே உங்களுக்காகக் காத்திருக்கிறது.

மல்லிகைப்பூ இட்லி (பேஸிக் இட்லி)

தேவையானவை:

இட்லிப் புழுங்கல் அரிசி - 4 கப் (ஐஆர் 20)
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
உப்பு - 4 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை இரண்டு முறை களைந்து கழுநீரை வடித்துவிட்டு, தேவையான அளவு தண்ணீர்விட்டு குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பைக் குறைந்தது இரண்டு முறை களைந்து கழுநீரை வடித்துவிட்டு, வெந்தயம் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில் ஊறவைத்த தண்ணீரை வடித்துவிட்டு உளுந்து மற்றும் வெந்தயத்தை கிரைண்டரில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர்விட்டு விழுது போல அரைத்துக்கொள்ளவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மையாகப் பொங்கிவரும் வரை அரைக்கவும். உளுந்து மாவு வெள்ளையாகப் பந்து போல் அரைப்பட்டதும் மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ஊறவைத்த தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு சற்று கொரகொரப்பான விழுதாக (ரவையைவிட சற்று மையாக) அரைக்கவும். உளுந்து மாவு வைத்திருக்கும் அதே பாத்திரத்தில் அரிசி மாவைச் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு கிரைண்டரில் ஒட்டியிருக்கும் மாவைக் கழுவி அரைத்த மாவுடன் சேர்க்கவும். பிறகு உப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து வலதுகையால் அடி முதல் மேல் வரை ஏழெட்டுத் தடவை மாவை நன்கு அடித்துக் கலந்துகொள்ளவும். தூக்கி ஊற்றினால், ஊற்றும்பதத்தில் மாவு இருப்பது சரியான பதம். வேண்டிய பாத்திரத்துக்கு மாற்றி மூடி ஆறில் இருந்து எட்டு மணி நேரம் வரை புளிக்கவைக்கவும். புளித்த பிறகு மாவு நன்றாகப் பொங்கிவிடுமாதலால் மாவு வைக்கும் பாத்திரத்தில் பாதி அளவுதான் புளிப்பதற்கு மாவை ஊற்றிவைக்கவும். மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிய பிறகு கிளறிவிடக் கூடாது. அப்படியே மூடிவைத்து புளிக்கவைக்க வேண்டும்.

இட்லி வார்க்கும் விதங்கள்...

துணி பயன்படுத்தி வார்க்கும் விதம்

துணி பயன்படுத்தி இட்லி வார்ப்பதற்கு இட்லித் தட்டில் சிறு சிறு துளைகள் இருக்க வேண்டும்.

இட்லிப் பானையில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இட்லித் தட்டின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து போட்டு இட்லிப் பானையில் வைக்கவும். புளித்த மாவை அதிகம் கிளறாமல் ஒரு பக்கமாகவே மாவை எடுத்து, இட்லித் தட்டில் ஊற்றி மூடிவைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும். மூடியைத் திறந்து, ஒரு குச்சியால் வெந்த இட்லியை அடி வரை குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம்.

கொஞ்சம் தண்ணீரைச் சுற்றிலும் தெளித்து, துணியோடு இட்லித் தட்டை எடுத்து மற்றொரு தட்டில் கவிழ்த்துவிடவும். இட்லித் தட்டை எடுத்துவிட்டு, கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துத் துணியின் மேலே தெளிக்கவும். பிறகு துணியை மெள்ள எடுக்கவும். இட்லியின் மேல் நல்லெண்ணெய் அல்லது நெய் தடவி, சுடச்சுட பரிமாறவும்.

குக்கர் இட்லி (அல்லது) துளைகள் இல்லாத தட்டில் இட்லி வார்ப்பதற்கு...

இட்லிப் பானையில் அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி எட்டில் இருந்து பத்து நிமிடங்கள் வரை வேகவைக்கவும். வெந்ததும் தட்டை எடுத்து வெளியில் வைத்து ஓரிரு நிமிடங்கள் கழித்து ஒரு சிறு அன்னக் கரண்டியால் இட்லிகளை எடுத்துச் சுடச்சுடப் பரிமாறவும்.

தொட்டுக்கொள்ள...

இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னி, கொத்சு, கடப்பா, வடகறி, கத்திரிக்காய் திரக்கல், குருமா வைக்கவும். எல்லாவற்றையும்விட, சூடான இட்லிக்கு சூப்பர் காம்பினேஷன் இட்லி மிளகாய்ப் பொடி - நல்லெண்ணெயுடன்.

உங்கள் கவனத்துக்கு...

இட்லி மாவு கெட்டியாக இருந்தால், இட்லி சற்று கனமாக வரும். இட்லி மாவுடன் உப்பு சேர்த்துக் கரைக்கும்போது கொஞ்சம் மாவைக் கையில் எடுத்க்ச் சற்று உயரத்தில் இருந்து விட்டால் மாவு ஒரே சீராக பாத்திரத்தில் விழ வேண்டும். விட்டு விட்டு அல்லது ரொம்பவும் வேகமாக விழக் கூடாது. மாவு இந்த பக்குவத்தில் இருந்தால் இட்லி மிகவும் மிருதுவாக வரும்.

அரிசி அரைக்கும்போது கால் கப் அவல் அல்லது அன்றைக்குச் செய்த சாதம் இருந்தால் சேர்த்து அரைக்கலாம்.

நல்ல ரக உளுந்தைப் பயன்படுத்த வேண்டும். உளுந்து பழசாகிவிட்டால், மாவு அரைக்கும்போது பொங்கி வராது. அப்படி இருந்தால் அரை கப் உளுந்து கூட சேர்க்கவும்.

வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு `ஐஆர் 20’ அல்லது இட்லிப் புழுங்கல் அரிசி கிடைக்கவில்லை என்றால், புழுங்கலரிசி பயன்படுத்தியும் செய்யலாம். அதற்கு அளவு சற்று மாறுபடும்...

புழுங்கல் அரிசி - 3 கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - 4 டீஸ்பூன்

மாவை கிரைண்டரில் அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும். கிரைண்டர் இல்லாதவர்கள் மிக்ஸி அல்லது ஃபுட் புராசஸர் (Processor) பயன்படுத்தலாம்.

மிக்ஸியில் அரைப்பதானால்...

இட்லி அரிசி - 3 கப்
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்

இட்லி ரவை பயன்படுத்தினால்...

இட்லி ரவை - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்

அரை உளுந்து பயன்படுத்தினால்...

புழுங்கல் அரிசி - 3 கப்
அரை உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - 4 டீஸ்பூன்

சிறப்பு இட்லி ரெசிப்பி

இட்லி மஞ்சூரியன்

தேவையானவை:

இட்லி - 6 (சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
குடமிளகாய் - ஒன்று (சதுரத் துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயத்தாள் - கால் கப் (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு (மிகவும் பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 5 (மிகவும் பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோளமாவு) - கால் கப்
மைதா - அரை கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பாத்திரத்தில் மைதா, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லித் துண்டுகளை மாவில் நன்றாகத் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பூண்டு சற்று சிவந்ததும் குடமிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று நிறம் மாறியதும் சில்லி சாஸ், சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், உப்பு, சிட்டிகை சர்க்கரை, சேர்த்துக் கலந்துகொள்ளவும். அரை கப் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் கலந்து காய்கறிக் கலவையில் ஊற்றிக் கொதிக்கவிடவும். சிறிது கெட்டியானதும் பொரித்த இட்லி சேர்த்து, வெங்காயத்தாளைத் தூவி, புரட்டி இறக்கவும். சுடச்சுடப் பரிமாறவும்.

ஸ்டஃப்டு மசாலா இட்லி

தேவையானவை:

இட்லி மாவு - 2 கப்
கொத்தமல்லித்தழை - கால் கப் (பொடியாக நறுக்கவும்)
கெட்டியான உருளைக்கிழங்கு மசாலா - அரை கப்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு மசாலா மற்றும் கொத்தமல்லித்தழையைக் கலந்துகொள்ளவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லித் தட்டில் அரை கரண்டி மாவைக் குழியில் ஊற்றவும். இரண்டு நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். பிறகு ஒரு ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் சூடாக சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

இன்னும் பல சிறப்பு இட்லி வகைகள் அடுத்த இதழில்...

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலா