Published:Updated:

குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!

குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

Published:Updated:
குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!

நாக்பூரில் வசிக்கும் இல்லத்தரசிகள் ஜோதிகபூரும் பர்வீன் துலியும் இணைந்து ஓர் ஆக்கபூர்வமான முயற்சியை முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக் கிறார்கள். குழந்தைகளுக்கும் குடும்ப மகிழ்ச்சிக்குமான ஒரு விஷயமாகப் பாரம்பர்ய விளையாட்டுச் சாதனங்களைத் தயாரித்து, சாதனை புரிந்துவருபவர்களிடம் பேசினோம்.  

குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!

‘`எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் தன்னம்பிக்கை, எம்பவர் மென்ட் மற்றும் குடும்பநல ஆலோசனை வொர்க்‌ஷாப்களைப் பத்து வருடங்களுக்கும் மேலாக நடத்தினோம். எங்கள் பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டவர்களில் பலரும் உற்சாகத்தைத் தொலைத்து இயந்திரத்தனமாக வாழ்வதை உணர்ந்தோம். பெற்றோர்கள் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டிலும், குழந்தைகள் வீடியோ மற்றும் மொபைல் கேம்களிலும் பல மணி நேரம் செலவிடுவதால் குடும்ப உறவில் விரிசல்கள் ஏற்படுவதையும் அவற்றுக்குத் தீர்வு தேடி அவர்கள் கவுன்சலிங் சென்டர்களுக்குப் படையெடுப்பதையும் அறிந்தோம். நவீன தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி மனரீதியாகப் பாதிக்கப்பட்டு, சகிப்புத்தன்மையின்மை, ஏமாற்றம், எளிதில் கோபப்படுதல், சகஜமாகப் பழகுவதில் தயக்கம் என்றிருந்தனர்.

`என்ன செய்யலாம்?’ என்று யோசித்த போது, பெற்றோர் - குழந்தைகள் என இந்த இரண்டு தரப்பையும் இணைக்கும் ஓர் ஆரோக்கியப் பாலம் தேவையென உணர்ந்தோம். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடும்வண்ணம் பாரம்பர்ய விளையாட்டுகளை மீளுருவாக்கம் செய்து அவர்களிடம் சேர்ப்பித்தோம். அவர்களுக்கு இடையே இந்த விளையாட்டுகள் குவாலிட்டி டைமையும் மகிழ்ச்சியையும் உருவாக்கிக் கொடுத்தன. மேலும், நேர்மையான வழியில் வெற்றி, திட்டங்களில் தெளிவு, சிக்கலான தருணங்களை எதிர்கொள்ளப் பயிற்சி, பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிவு, தன்னம்பிக்கை, எண்ணங்களை நாகரிகமாகப் பகிர்ந்துகொள்ளுதல், தைரியம் இவற்றுடன் முழுமையான சந்தோஷத்தையும் பெறும் வகையில் விளையாட்டுகளை உருவாக்கினோம். வளர் இளம் பருவக் குழந்தைகளின் மொழி அறிவை வளர்க்கும் வகையில் நாங்கள் உருவாக்கிய வார்த்தை விளையாட்டு மற்றும் மரப்பலகை விளையாட்டுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. கணவன் மனைவி, குழந்தைகள் உறவில் நெருக்கம் கூடி உற்சாகம் ஊற்றெடுப்பதாகப் பலரும் நன்றி தெரிவித்தனர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி!

ஒருகட்டத்தில் விளையாட்டுச் சாதனங் களைத் தயாரிப்பதை முழுநேரத் தொழிலாகச் செய்ய முடிவெடுத்தோம். Infinite Space நிறுவனத்தையும் www.infinitespace.in இணையதளத்தையும் 2015-ல் தொடங்கி னோம். குடும்பநல - குழந்தைநல - மனநல ஆலோசகர்கள், கல்வியாளர்கள், சைக்கோ தெரபிஸ்ட் ஆகியோரைக்கொண்ட ஆராய்ச்சிக் குழுவை அமைத்து விளையாட்டுகளைத் திட்டமிட்டோம். எங்கள் சாதனங்களைப் பயன்படுத்திய கல்வி நிறுவனங்கள் அவர்களுக்கென பிரத்யேகமான விளையாட்டு சாதனங்களை உருவாக்கித்தர எங்களை அணுகினர். கோவாவில் உள்ள பிரபல ரிசார்ட்ஸ் நிறுவனம் எங்கள் தயாரிப்புகளைத் தங்கள் வளாகத்தில் நிறுவிய பின்னர், இந்தியா முழுவதும் பிரபல ஷாப்பிங் மால்கள், மனமகிழ் மன்றங்கள், ஸ்நாப்டீல், அமேசான் போன்ற வணிக இணையதளங்கள் எங்கள் சாதனங்களை வாங்கி விற்க ஆரம்பித்தனர்.

நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி எல்லா வயதினரையும் கவரும் வகையில் விளையாட்டுகளை டிசைன் செய்தோம். பயணங்களின்போது பயன்படுத்தவும், எங்கும் எளிதில் எடுத்துச் செல்ல வசதியாகக் கைக்கு அடக்கமான அளவுகளிலும் விளையாட்டுகளை அறிமுகப் படுத்தினோம். இப்போது கார்ப்பரேட் மற்றும் கல்வி நிறுவனங்கள் இண்டோர் கேமிங் சென்டர்களை அமைக்க எங்களை அணுகுகிறார்கள். பாரம்பர்யம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இவை இரண்டையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கிறோம்.

இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் அலுவலகங்களில் இண்டோர் கேமிங் சென்டர்களை உருவாக்கி, குடும்ப உறவுகளில் மலர்ச்சியை ஏற்படுத்துவதே எங்கள் லட்சியம்” - தோழிகளின் வார்த்தைகளில் பளிச்சிடுகிறது வெற்றி தந்த எனர்ஜி.

பாரம்பர்யம் பரவட்டும்!