ருகாலத்தில் நாம் குதிரைகளில் பயணம் செய்தோம். பிறகு குதிரை வண்டி, மாட்டுவண்டிகளில் பயணம்

பணம் பழகலாம்! - 6

செய்தோம். சைக்கிள், சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, டூ வீலர் என வளர்ந்து, இன்று பெரும்பாலானோரின் கனவு, ஒரு கார் வாங்க வேண்டும் என்பதாக வளர்ந்திருக்கிறது.

30 வருடங்களுக்கு முன்பு வரை அம்பாசிடர் மற்றும் ப்ரீமியர் பத்மினி என்கிற இரு கார்களை விட்டால் வேறு இல்லை என்ற காலத்திலிருந்து, இன்று எண்ண முடியாத அளவுக்கு இந்தியாவில் கார்கள் தயாராகும் காலத்தில் வாழ்கிறோம். இந்தப் புரட்சிக்கான தொடக்கம் `மாருதி 800’ல் தொடங்கியது என்று சொல்லலாம். இன்றைய தினத்தில் இந்தியாவில் பல லட்சம் கார்கள் விற்கப்படுகின்றன. `பலரும் கார் வாங்குகிறார்களே, நானும் வாங்க வேண்டுமா!’ என்பதைப் பற்றி  அலசும் முன், மக்கள் ஏன் கார் வாங்குகிறார்கள் என்பதைப் பற்றி அலசிவிடுவோம்.

ஒரு கார் வாங்க வேண்டும் என்பது மிடில் க்ளாஸ் குடும்பத்தின் ஆசை. காரணம், நினைத்தபோது குடும்பத்துடன் ஜாலியாக வெளியே செல்லலாம், தூசி இல்லாமல் பயணம் செய்யலாம், வயதான பெற்றோரை/குழந்தைகளை அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும் என, கார் வாங்குவதற்குப் பலவகையான காரணங்கள் உண்டு.

இருக்கட்டும், கார் வாங்குவதால் என்னென்ன அசௌகரியங்கள் இருக்கின்றன?

பராமரிப்பு, இன்ஷூரன்ஸ், பெட்ரோல் எனப் பணச் செலவு கூடுதலாகும். பல நகரங்களில் இன்று பார்க்கிங் பிரச்னை இருக்கிறது. கார் இருக்கிறதே என எடுத்து ஓட்ட வேண்டும் – தேவையில்லையென்றாலும்கூட!
சரி, யாரெல்லாம் கார் வாங்கலாம்?

அன்றாடச் செலவுகள் + எதிர்காலத் தேவைகளுக்கான முதலீடு போக மீதிப்பணம் உள்ளவர்கள், கார் நிறுத்துவதற்குரிய இடம் உள்ளவர்கள், அடிக்கடி கார் உபயோகிப்பவர்கள் மற்றும் நிரந்தர வருமானம் உள்ளவர்கள்.

கார் வாங்குவதை யாரெல்லாம் தவிர்க்கலாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் பழகலாம்! - 6

அரிதாக உபயோகிப்பவர்கள், போதிய உபரி வருமானம் இல்லாதவர்கள், டைட் பட்ஜெட்டில் குடும்பத்தை நடத்துபவர்கள், பந்தாவுக்காக வாங்க விரும்புபவர்கள் மற்றும் பார்க்கிங் வசதி இல்லாதவர்கள்.
கார் வாங்குவதற்கு மாற்று என்ன?

ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை கார் வாங்குவது கட்டாயமாக இருந்தது, சிலருக்கு! ஏனென்றால், அதற்கு மாற்றாக இருந்த டிராவல்ஸ் கார் போன்றவை வெகு காஸ்ட்லியாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஓலா, ஊபர் போன்ற கம்பெனிகளின் வருகையால் வாடகைக் கார்களின் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. இன்று புதிய டிரெண்டு என்னவென்றால், பலர் கார் வாங்குவதையே பாரமாக நினைத்து `வேண்டாம்’ என விட்டுவிடுகிறார்கள். நீங்கள் வருடத்துக்கே சில ஆயிரம் கிலோமீட்டர்தான் ஓட்டுவீர்கள் என்றால், கார் வாங்குவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்!

கார் வாங்குவது என முடிவாகிவிட்டது. எங்கு லோன் வாங்கலாம், எந்த மாதிரியான கார்களை வாங்கலாம்?

நீங்கள் முதல்முறையாக கார் வாங்குபவர் என்பதால், முதல் கார் சிறிய காராகவே இருக்கட்டும். சுமார் 3 – 5 லட்சத்துக்குள் வாங்கிக்கொள்ளுங்கள். பலவிதமான சிறிய கார்கள் இன்று சந்தையில் மிகவும் கச்சிதமான விலையில் கிடைக்கின்றன. தேவைப்பட்டால், ஒப்பிடுவதற்கு இணையதளங்களின் உதவியை நாடுங்கள்.

காரின் மொத்த விலையில் நீங்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் டவுன் பேமென்ட்டாகப் போடுங்கள். மீதியை முன்னணி வங்கிகளில் சுமார் ஐந்து வருடக் கடனாக வாங்கிக் கொள்ளுங்கள். ஆண்டுக்கு 8.5 முதல் 10 சதவிகிதம் வரையிலான வட்டி அளவில் கடன், இன்றைய தினத்தில் தாராளமாகக் கிடைக்கும். உங்களின் சிபில் ஸ்கோர் சரியில்லை என்றால், முன்னணி வங்கிகளில் கடன் கிடைப்பது சற்று கடினம். அதுபோன்ற நிலையில், நீங்கள் வங்கிசாரா நிதி நிறுவனங்களை (பைனான்ஸ் கம்பெனிகள்) நாடலாம். வங்கிகளைவிட இந்த நிறுவனங்களில் வட்டிவிகிதம் அதிகமாக இருக்கும். மேலும், நீங்கள் செகண்ட் ஹேண்டு காரை வாங்கும்போது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அதிக வட்டியில்தான் கடன் கொடுப்பார்கள் என்பதை நினைவில் கொள்க!

உங்கள் தேவை மற்றும் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, கார் வாங்க வேண்டுமா,  வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்!

-வரவு வைப்போம்...