நிறைய கொடு

நிறைவாய் இரு

Stop being afraid of what could go wrong, and start being excited about what could go right.

- Tony Robbins

ஆசிரியராக வேண்டும் என்பதுதான் கே.பி.ராமசாமியின் லட்சியம். ஆனால், அது நிறைவேற வில்லை. இன்றைக்குப் பஞ்சாலைத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார். இருப்பினும், அவர் படிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கே.பி.ராமசாமியின் மில்லில் பணியாற்றிய, பணியாற்றிக்கொண்டி ருக்கும் பெண்களில் 20,000-க்கும் மேற்பட்டோரை, பத்தாவது முதல் முதுகலைப் படிப்பு வரை படிக்க வைத்திருக்கிறார்.

கே.பி.ஆரின் சொந்த ஊர் ஈரோடு, விஜயமங்கலம் அருகேயுள்ள கள்ளியம்புதூர். விவசாயக் குடும்பம். சிறுவயதிலிருந்தே ஆசிரியர் பணி மீதுதான் ஆர்வம். பள்ளிப்படிப்பு முடித்து, சிவகாசிக் கல்லூரி ஒன்றில் பி.ஏ சேர்ந்தார். படிப்பில் நாட்ட மில்லை. மூன்றே மாதங்களில் திரும்பி வந்துவிட்டார்.

``தோட்டத்துல ஒரு பகுதியை எடுத்துக்கிட்டு விவசாயம் பண்ணு” என்று அப்பா சொன்னதால் ஆர்வத்தோடு புகையிலை சாகுபடி செய்தார். ஒரு வருடம் கழித்துக் கணக்கு பார்த்தார். மொத்தச் செலவு 250 ரூபாய். புகையிலை விற்றது 240 ரூபாய். `இதுக்கா வருஷம் முழுசும் பாடுபடுறோம்!' எனத் தோன்றவே, விசைத்தறி ஆரம்பிக்கும் எண்ணம் உதித்தது.

ஆனால், இவர் களமிறங்க நினைத்த காலகட்டத்தில்தான் விசைத்தறித் தொழில் வீழ்ச்சியைச் சந்தித்துவந்தது. `இவனுக்கு இப்ப எதுக்கு இந்த வேலை?’ என்று பலரும் கேட்டனர்.

1971-ம் வருடம். தாய்மாமா ஒருவரிடம் 8,000 ரூபாய் கடன் கேட்டார். 8,000 ரூபாய்க்கு வருடத்துக்கு 50 பைசா வட்டி! மூன்றே வருடங்களில் மொத்தமாக அடைத்துவிட வேண்டும் என்பது திட்டம்.
ஒரு வீட்டை எடுத்து, அதில் நான்கு விசைத்தறிகளுடன் விசைத்தறித் தொழிலைத் தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் பெரிய லாபமெல்லாம் இல்லை. இருப்பினும் அர்ப்பணிப்போடு இரவு-பகலாக வேலை செய்தார். உழைப்பு பலன் தந்தது. சரியாக, மூன்றாவது வருடம் கடனை அடைத்தார்.

தம்பிகள் சிகாமணியும் நடராஜும் கைகோக்க, விசைத்தறித் தொழில் முன்னேற்றம் கண்டது. நான்கு விசைத்தறிகள், நான்காவது வருடத்தில் நாற்பதாக வளர்ந்தன.

பத்து வருடங்களில, அடுத்தகட்டத்துக்குப் போக ஆசைப்பட்டார். துணி ஏற்றுமதியில் கால் பதித்தார். அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு 1989-ம் ஆண்டு திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்தார். இப்படி படிப்படியாகத் தொழிலை விரிவாக்கம் செய்தபோதெல்லாம் ராமசாமி எதிர்கொண்டதெல்லாம் எதிர்ப்புக் குரல்களையே.

`இப்ப கரெக்டா போயிட்டிருக்கு. ஏன் அகலக்கால் வைக்கணும்?' என்றோ, `இப்ப இந்தத் தொழில் அழிஞ்சுட்டு வருது... எதுக்கு ரிஸ்க்?' என்றோதான் சொல்லக் கேட்டிருக்கிறார். தொடக்கத்திலிருந்தே தொடரும் அதே குரல்!

``எந்தத் தொழிலும் அழிவதில்லை. உருமாற்றமே அடைகிறது. ஒரு தொழில் எந்த மாதிரி உருமாறப்போகிறது என்பதைக் கணித்து அதன்படி திட்டமிட்டால் மாறுகிற தொழிலில் நாம் முன்னோடியாக இருப்போம்'' - இதுதான் ராமசாமியின் அனுபவப் பாடம்.

ஆறு பஞ்சாலைகள், மூன்று ஆயத்த ஆடை நிறுவனங்கள் என விரிந்திருக்கும் கே.பி.ஆர் நிறுவனங்களின் இன்றைய டர்ன் ஓவர் 3000 கோடி ரூபாய்க்கும் மேல். காரணம், ராமசாமி புதிய முயற்சிகள் மேற்கொள்ளும்போதெல்லாம் வந்த நெகட்டிவ் விமர்சனங்களை மீறித் துணிந்து எடுத்த ரிஸ்க்குகள்தான்.

அரசு சொல்லும் சட்டதிட்டங்களைவிட, ஆர்டர்கள் கொடுக்கும் வெளிநாட்டு வர்த்தகர்கள் விதிக்கும் நிபந்தனைகள் ஏராளம். அவர்களின் `Code of Conduct' எனப்படும் விதிமுறைகள், தொழிற்சாலைக்கான அடிப்படைக் கட்டமைப்பை வலியுறுத்துபவை. அதை உணர்ந்துகொண்ட கே.பி.ஆர். தொழிலாளிகளின் நலன், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தினார்.

2006-ம் வருடத்தில் ஒருநாள் இவரிடம் பணிபுரியும் பெண், படிக்க முடியாததால்தான் வேலைக்கே வந்ததாகச் சொன்னது, கே.பி.ஆரை யோசிக்கவைத்தது. அந்தப் பெண்ணைப் படிக்கவைப்பதற்கான ஏற்பாடுகளை, நிறுவனத்தின் மனிதவளத் துறையிடம் செய்யச் சொன்னார். அதுதான் மகத்தான தொடக்கம். கே.பி.ஆர் குரூப்ஸின் அனைத்து நிறுவனங்களிலும் படிக்க நினைக்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்தார். வகுப்பறைகள் கட்டினார். வேலைக்கு எப்படி ஆட்கள் எடுக்கிறார்களோ, அதைப்போலவே பயிற்றுவிக்க திறமையும் அர்ப்பணிப்பும் உள்ள ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தினார். சம்பளத்தோடு, நிறுவனத்தின் செலவில் படிக்கவும் முடிகிறது என்பதால், தொழிலாளர்கள் கிடைக்கச் சிரமப்படும் சூழலில்கூட இவர் நிறுவனத்தில் சேர க்யூ நின்றது. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1,150-க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய், 1,100-க்குமேல் மதிப்பெண் எடுத்தால் 50,000 எனத் தொடங்கி, பல பரிசுத் திட்டங்களை அறிவித்தார். 10, +2, பி.காம், பி.பி.ஏ, பி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., கணினி அறிவியல், நர்ஸிங், டீச்சர் டிரெய்னிங், யோகா எனப் பணியாளர்கள் விரும்பும் பிரிவுகளில் படிக்கவைத்தார்.

படித்து முடித்தவர்கள் பணியிலிருந்து விலகி, படிப்புக்கேற்ற வேறுவேலைகளுக்குச் செல்வதை வரவேற்றார். உள்ளேயே பணிபுரிய விரும்புபவர்களை, படிப்புக்கேற்பப் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்தார். மேலும், ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக இலவசப் பயிற்சி மையத்தையும் கோவையில் ஆரம்பித்தார்.

ஒன்றிரண்டு மரங்களில் ஆரம்பித்து, இன்று 1.25 லட்சம் மரங்கள் வரை இந்த நிறுவனம் சார்பில் நடப்பட்டிருக்கின்றன. இதனால் பஞ்சாலை, ஆயத்த ஆடை நிறுவனங்களில் அரசும், வெளிநாட்டு வர்த்தகர்களும் வலியுறுத்தும் `ஜீரோ டிஸ்சார்ஜ்’ முறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்தார். விடுதியில் தங்கும் பணியாளர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இயற்கை விவசாயத்தை ஒவ்வொரு நிறுவனத்தைச் சுற்றிலும் செய்யவைத்தார்.

நிறுவனப்பணியாளர் களுக்கான விடுதிக்கு, இன்றும் இவர்களே வளர்க்கும் 450 மாடுகளின் சுத்தமான பால்தான் பயன்படுத்தப் படுகிறது.

இன்றைக்கும் தினமும் தொழிலாளர்களுக்கு, சிறிய உடற்பயிற்சியுடன்தான் ஒவ்வொரு நாளும் தொடங்கு கிறது. ஒவ்வொரு மில்லிலும் தொழிலாளர் களுக்காக நீச்சல்குளம் உண்டு.

``அரசோ, வெளிநாட்டு வர்த்தகர்களோ நம்மை என்ன கேட்பார்கள் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. நம்மால் இந்த நாட்டுக்கு எதுவும் பெரிதாகச் செய்ய முடியா விட்டாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்ன செய்யலாம் என்றுதான் யோசித்தேன். போகப்போக, சட்டதிட்டங்கள் சொல்வதைக் காட்டிலும் சிறப்பாகவே என்னால் செய்ய முடிந்தது” என்கிறார் கே.பி.ஆர்.

`ஊழியர்களை நன்றாக வைத்துக்கொண்டால், அவர்கள் நம்மை நன்றாக வைத்துக்கொள்வார்கள்' - கே.பி.ஆர் உறுதியாக நம்புவது இதைத்தான். அந்த நம்பிக்கை தான் கே.பி.ஆர் நிறுவனத்தின் நன்மதிப்பை உலகெங்கும் எடுத்துச் சென்றிருக்கிறது.

கே.பி.ராமசாமியின் பிசினஸ் மொழிகள்

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், இயற்கையோடு இணைந்து இயங்குங்கள். இயற்கையை என்றும் கைவிடாதீர்கள்.

முதலாளிகள், பணியாளர்களை நேசித்தால், பணியாளர்கள் நிறுவனத்தை நேசிப்பார்கள்.

வாடிக்கையாளர்களுக்குப் பெருமகிழ்ச்சியைப் பரிசாகக் கொடுங்கள். உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைக்கொடுப்பது மகிழ்ச்சி. ஒரு பங்கு அதிகம் கொடுப்பது பெருமகிழ்ச்சி.

ஒருதொழிலில் புதியனவற்றைப் புகுத்திக்கொண்டே இருந்தால், அந்தத் தொழில் நிச்சயம் உங்களை ஏமாற்றாது.