Published:Updated:

``வதந்தி இல்ல... சீக்கிரமே அரசியலுக்கு வருவேன்!'' - திவ்யா சத்யராஜ் அதிரடி

``வதந்தி இல்ல... சீக்கிரமே அரசியலுக்கு வருவேன்!'' - திவ்யா சத்யராஜ் அதிரடி
``வதந்தி இல்ல... சீக்கிரமே அரசியலுக்கு வருவேன்!'' - திவ்யா சத்யராஜ் அதிரடி

``வதந்தி இல்ல... சீக்கிரமே அரசியலுக்கு வருவேன்!'' - திவ்யா சத்யராஜ் அதிரடி

டிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், சமீப காலமாக அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டிவருகிறார். அவர் ஒரு கட்சியில் இணைந்துவிட்டார் என்றும் தகவல் வெளியானது. அதுபற்றி அவரிடம் பேசினேன்.

``ஆறு வருடங்களாக ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறேன். என் அப்பா மீது எவ்வளவு அன்பு இருக்கோ, அதே அளவான காதல், என் துறையின் மீதும் இருக்கிறது. அதனால்தான் மருத்துவத்தில் நடக்கும் அலட்சியங்கள் குறித்து, பிரதமருக்குத் துணிச்சலாக கடிதம் எழுதினேன். பள்ளிகளில் கொடுக்கப்படும் சத்துணவை, இன்னும் எப்படி ஊட்டச்சத்துடன் கொடுக்கலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து ஆலோசனை வழங்கினேன். இந்தியா முழுக்கப் பசியால் வாடும் 17 லட்சம் குழந்தைகளுக்குத் தினமும் உணவு அளிக்கும், 'அட்சய பாத்திரம்' என்ற அறக்கட்டளையின் தூதுவராகச் செயல்படுகிறேன்.  இவையெல்லாம் மக்களின் ஆரோக்கியத்துக்காகவும் நலனுக்காகவும் மட்டுமே செய்தது.

நான் கட்சியில் சேர்ந்துவிட்டதாக நிறைய பேர் சொல்லிட்டிருக்காங்க. இதை வதந்தினு சொல்கிறதுக்கில்லை. சின்ன வயசிலிருந்தே கம்யூனிஸிய கொள்கைகளைப் படித்து வளர்ந்தவள். நல்லக்கண்ணுவின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டவள். கட்சியில் சேர்வது என்பது என் சொந்த விருப்பம். சீக்கிரமே என்னுடைய அரசியல் முடிவு பற்றி அப்பாவின் ஆலோசனையுடன் வெளியிடுவேன். அரசியலில் தீவிரமாக களம் இறங்கினாலும், அதன்மூலமும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சார்ந்த விஷயங்களில்தான் கவனம் செலுத்துவேன். என் அரசியல் வருகை நிச்சயம் மக்களின் ஆரோக்கியம் சார்ந்ததாகவே இருக்கும்'' எனத் தெளிவான குரலில் சொல்லும் திவ்யா சத்யராஜ் தற்போது இந்தியாவின் தலைசிறந்த ஊட்டச்சத்து நிபுணர் விருது வாங்கியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. 

அடுத்த கட்டுரைக்கு