Published:Updated:

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

Published:Updated:
‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

டவுளைப் பற்றிச் சொல்லும் போது, `அவர் எங்கும் நிறைந்தவர்;  தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்றெல்லாம் சொல்வார்கள்.இதன் அர்த்தம் எல்லோரது மனதிலும்  இறைவன் இருக்கிறார் என்பதுதான்.  

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

மனதுக்குள் கடவுள் நிறைந்திருக்கிறார் என்ற எண்ணத்தோடு, தப்புத்தண்டா ஏதும் செய்யாமல் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை. இதுதான் உண்மையான பக்தி; வழிபாடு என்றே நான் நினைக்கிறேன்.

எனக்குக் கண்கண்ட தெய்வம் யாரென்று கேட்டால்... முதலில் என் அம்மா-அப்பா. அடுத்து குரு - கற்றுத் தந்த வாத்தியார். இவர்களை கும்பிட்டு விட்டுதான், அவர்கள் காட்டித் தந்த கடவுள்களுக்கு வழிபாடு.  அப்போதுதான் நமது வழிபாடு பூர்த்தியாகும் என்பதே எனது கருத்து.

நமக்கு மூத்தவர்கள், நம்பிக்கையின் பேரில் அவர்கள் வணங்கிவந்த தெய்வங்களை கும்பிடும்படி நமக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நாமும் அந்த நம்பிக்கையோடு கும்பிட்டு வருகிறோம். பிற்காலத்தில் நமக்கு மெள்ள மெள்ள விவரம் தெரியவரும்போது, ‘இது நிஜம்தானா? உண்மையிலேயே இப்படி சாமியெல்லாம் இருக்கிறதா?’ என்ற கேள்விகள் எல்லாம் தோன்றும்.

ஏனென்றால், நமது சிறு வயதில் ‘இதுதான் பிள்ளையார், இவர் முருகர்... இவர்களுக்கான கதை இப்படி...’ என்று  சின்னச் சின்னதாக சுவாரஸ்யத்தோடு சொல்லப்பட்ட கதையமைப்பு, வித்தியாசமான உருவங்கள் எல்லாம் நமக்குள் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும். அவற்றை அப்படியே நம் மனதில் இறக்கிக்கொள்வோம்.

முருகன் என்றால், அவரது கல்வி ஞானம்... ‘சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று ஒளவையிடம் கேள்வி கேட்ட தெளிவும், விநாயகர் என்றால், யானை முகம், ஒற்றைத் தந்தம், துதிக்கை என்ற வித்தியாசமான உருவ அமைப்பு நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதேபோல், ஆஞ்சநேயரைப் பற்றிச் சொல்லும்போது அவரது பலம், விசுவாசம், அந்த உருவ அமைப்பு, கதையம்சம் என்று வசீகரிக்கப்பட்டு அப்படியே அவரையும் மனதிலும் ஏற்றிக்கொள்வோம்.

பின்னாளில் நமக்குள் பல்வேறு கேள்விகள் எழும்.  ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் ‘ஏது சாமி?’ என்று கடவுள் குறித்துக் கேள்வி எழுப்பும்போது, நம்ம அறிவு வேலை செய்யும். இத்தனை நாள்களாக அம்மா, அப்பா சொல்லிக்கொண்டிருந்ததைத்தானே கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், இப்ப இவங்க இப்படிக் கேக்கிறாங்களேன்னு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்எனக்கொரு அனுபவம் ஏற்பட்டது. அது எல்லோருக்கும் ஏற்படுமான்னு சொல்லமுடியாது... எனக்கு ஏற்பட்டது. நாம் இயங்குவதில் ஆரம்பித்து, இந்த உலகம், பிரபஞ்சம்னு எல்லா இயக்கத்துக்கும் காரணமா ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தியையே கடவுள் என்கிறார்கள் என்று விளங்கிக்கொண்டேன். அடுத்ததா, நிறைய கடவுள்கள் இருப்பதாக உருவகப் படுத்துகிறார்களே, அது ஏன்... என்ற கேள்வியும் எழும்.

இப்படித்தான் ஒருமுறை, சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்த ஒருவர் கேட்டாராம், ‘‘என்னங்க உங்க ஊர்ல ஒரு சாமின்னு இல்லாம, இப்பிடி நிறைய சாமிங்க இருப்பதாகச் சொல்கிறார்களே?’’ என்று.

அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக ஒரு வெள்ளைத் துணியைக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார் விவேகானந்தர். அவர் கொண்டுவந்து  கொடுக்க, அந்தத் துணியை எடுத்துக்கொண்டு  ஓர் அறைக்குள் சென்றார் விவேகானந்தர். கொஞ்சநேரத்தில் அந்தத் துணியை தலைப்பாகையாகச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவர், தன்னிடம் கேள்விகேட்ட நண்பரை நோக்கி `‘இது என்ன?’’ என்று தலைப்பாகையைச் சுட்டிக்காட்டி கேட்டார்.

அவரும், ‘தலைப்பாகை’ என்று பதில் சொல்ல, சிரித்துக்கொண்டே மறுபடியும் அறைக்குள் சென்ற விவேகானந்தர், அந்தத் தலைப்பாகையை அவிழ்த்து தோளில் போட்டுக்கொண்டு வெளியில் வந்துள்ளார்.

இப்போது, ‘இது என்ன?’ என்று கேட்டார். ‘துண்டு’ என்று பதில் வந்தது. விவேகானந்தர் மீண்டும் அறைக்குள் சென்று திரும்பினார். இப்போது அந்தத் துணியை இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தார்.  இப்போது, ‘வேட்டி’ என்று பதில் சொல்லியிருக்கிறார் நண்பர். 

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

அப்போது விவேகானந்தர், ‘எங்க ஊரில் கடவுளுக்கு உருவங்கள் வெவ்வேறா இருந்தா லும்கூட, கடவுள் என்பது ஒன்றுதான்; ஒரே சக்திதான். அவரவர் நம்பிக்கை சார்ந்து வெவ்வேறு உருவங்களில் கும்பிட்டு வந்தாலும் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறார்கள்’ என்று விளக்கியிருக்கிறார்.

கடவுள் பற்றிய புரிதல் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் - உலகம் அதில் நிறைந்திருக்கும் படைப்புகளுக்குக் காரணமான ஒரு சக்தி உண்டு. அதையே நம்பிக்கையோடு கும்பிட்டு வருகிறோம். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.

சாமி கும்பிடுறதுக்காக மட்டுமே நாம் படைக்கப்படவில்லை. அதற்காகத்தான் படைக்கப்பட்டோம் என்றால், சாமி அந்த ஒரு புத்தியை மட்டும்தானே நமக்குக் கொடுத் திருக்கும்? நாம மனிதனா படைக்கப்பட்ட தற்கான அர்த்தம் என்று ஒன்று உண்டு அல் லவா? இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து நீ என்ன செய்தாய் என்ற கேள்விக்குப் பதில் வேண்டும் அல்லவா?

ஆக, இந்த உலகத்தில் மனுஷனா நாம பிறந்ததற்கு நாம் என்ன செய்யப்போகிறோம், அதை மனசாட்சியுடன் பரிபூரணமாகச் செய்து முடித்தோமோ, நமக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்தோமா... என்றெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், கிடைப்பது எதுவோ அதுதான் மோட்சம் என்று நான் நினைக்கிறேன்.

சிலர், நாள் முழுவதுமே இறை வழிபாடுகளில் மூழ்கி, வீடு-குடும்பம் என்று எல்லா பற்றுகளையும் துறந்து, முழுக்க முழுக்கக் கடவுள் சிந்தனையிலேயே ஆழ்ந்து ஞானத்தைத் தேடுவதாகச் சொல்வார்கள். ஆனால், நாமெல்லாம் சராசரி மனிதனாகப் பிறந்து குடும்பஸ்தனாக வாழ்க்கையை நகர்த்துபவர்கள். இந்தச் சூழ்நிலையில், நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாக செய்து, மனசாட்சியோடு நடந்துகொண்டாலே போதுமானது; அதுவே வைகுண்ட பிராப்தம் கிடைப்பதற்கான வழிதான்!

சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் வேறு எங்கேயோ இருப்பதல்ல. அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காமல், நல்லது செய்து வந்தால் வாழும்போதே சொர்க்கத்தைக் காணலாம்.

இயன்றவரையில் அடுத்தவருக்கு உதவியாக இருப்பதும் மனசாட்சிப்படி வாழ்வதுமே  இறைவழிபாட்டுக்கு சமமானவைதான்!

பூவுலகில் மனிதனாகப் பிறந்ததன் அர்த்தமே... மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு அடுத்தவருக்கு உதவியாக வாழ்ந்து மறைவதுதான். அப்படிப் பட்ட உன்னத வாழ்க்கையை வாழ்பவர் களைத்தான் இவ்வுலகம் உள்ளளவும் நினை வில் வைத்திருக்கும்.

ஞானிகள், தலைவர்கள் எல்லாம் இறந்த பின்னரும் மக்கள் மனதில் வாழும் வகையில் தங்களது வாழ்வை அர்த்தமாக்கிக் கொண்டவர்கள். அதாவது, வாழும்போதே அவர்கள் செய்த நல்ல காரியங்களே, இறந்த பின்னரும் அவர்களைப் பற்றி உலகம் பேசுவதற்குக் காரணமாக அமைகின்றன. அப்படியான மகான்களுக்கு, தலைவர்களுக்கு பிறப்பு உண்டு; இறப்பு என்பது இல்லவே இல்லை. காரணம் அவர்களே மக்கள் மனதில் தெய்வமாக மாறிவிடுகிறார்கள்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றிப் பார்த்தோம். தனக்காக வாழாமல் இந்தத் தேசத்துக்காக, இளைஞர்களுக்காக அவர் வாழ்ந்த அந்தத் தியாக வாழ்க்கைதான் இன்றைக்கும் அவரைப்பற்றி பேசவைக்கிறது.

நாளை என் மகன் இதுபற்றி பேசுவான், அடுத்து அவனது மகன் - என் பேரன்... என்று வழிவழியாக இந்த மகான்களை நினைவு கூர்ந்துகொண்டே இருப்போம். இப்படி அடுத்தவருக்குப் பயன் உள்ள வாழ்க்கையாக வாழ்ந்து முடிப்பதுதான் மனிதராகப் பிறந்ததன் பலன் என்று சொல்வேன். 

தொகுப்பு: த.கதிரவன்

படம்: பா.காளிமுத்து

‘சொர்க்கம் எது தெரியுமா?’ - கே.பாக்யராஜ்

டிகாக்‌ஷன் காபியும் சோமாஸ்கந்தரும்!

‘அ
ப்போதே காபிக் கொட்டையை வறுத்து, அப்போதே அரைத்து, டிகாக்ஷன் இறக்கி, நல்ல கெட்டியான பாலில் அதை விட்டு அளவாக சர்க்கரை போட்டு சாப்பிட்டால்... ஆ! அமிர்தம் என்று புராணத்தில் கேட்கிறோம். இதற்கு ஈடாகுமா? அதை ஆற்றும்போதே அதன் நறுமணம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! தமிழ்நாட்டுக்கு காபி ஓர் உணவு; நாவுக்குச் சுவையானது; மூக்குக்கு மணமானது; வயிற்றுக்கு நிறைவானது; மூளைக்கு சுறுசுறுப்பு ஊட்டுவது.

சிவபெருமானுடைய மூர்த்தங்களில் சோமாஸ்கந்த மூர்த்தம் என்பது ஒன்று. பரமசிவன், பார்வதி, அவர்களிடையில் முருகன் இப்படி எழுந்தருளியிருக்கும் கோலம் அது. பல சிவாலயங்களில் இந்த மூர்த்தியைப் பார்க்கலாம். காபியை சோமாஸ்கந்த மூர்த்தி என்று நான் சொல்வது வழக்கம். பால்தான் பரமசிவன்; டிகாக்ஷன் பார்வதி; சர்க்கரை முருகப் பெருமான்! காலையில் காபி சாப்பிடும்போது இந்த உபமானம் நினைவுக்கு வந்தால் புண்ணியந்தானே! அதனால்தான் இதைச் சொல்லி வைத்தேன்.’

- கி.வா.ஜ.

தொகுப்பு: ஆர்.சி.சம்பத், ஓவியங்கள்: ரமணன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism