சித்திரை மாதம் பிறக்கப் போகிறதென்றால், வேப்ப மரங்கள் எல்லாம் இளம்பச்சை நிறத்தில் பூவாடை கட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். சித்திரைப் பிறந்துவிட்டாலோ தரையெல்லாம் வேப்பம்பூ மணக்கும். இந்தப் பூக்களை, கிளி மூக்கு மாங்காய், ‘வாசத்தில் உன்னைவிட நான் தான் உசத்தி’ என்று வம்பிழுக்கும். துளி கறுப்பில்லாத புத்தம்புது புளிக்கும் இதுதான் சீசன். அதனால்தான், தமிழ் வருடப் பிறப்பன்று செய்கிற பச்சடியில் இந்த மூன்றையும் கட்டாயம் சேர்ப்பார்கள். இந்த மூன்றுடன் புத்தம்புது அவலுக்கும் இதுதான் சீசன். ஜனவரியில், நெல் அறுவடை செய்தவர்கள், விற்பதற்கு, உணவிற்கு, விதைப்பதற்கு என்று பிரித்த எடுத்த பிறகு, மிச்சமிருப்பதைப் புழுங்க வைத்து, புழுங்கியதை வறுத்து, சூடு அடங்குவதற்குள் அவலாக இடித்து வைப்பார்கள். அதனால், சித்திரையை வரவேற்க அவலில் செய்த பலகாரங்களும் வரிசைக் கட்டி நிற்கும். அதில் 10 பலகாரங்களை இங்கே நமக்காகச் செய்து காட்டுகிறார் சமையற்கலை நிபுணர் லஷ்மி சீனிவாசன்.

அவல் புட்டு

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம், வெல்லம் - 75 கிராம், தண்ணீர் - வெல்லம் முங்குகிற அளவைவிட சற்றுக் கூடுதல் அளவு, நெய், முந்திரி, திராட்சை, ஏலப்பொடி - தேவையான அளவு.

செய்முறை: அவலை மிக்ஸியில் ரவை போல பொடித்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த வெல்லம் கரைத்தத் தண்ணீரை அடுப்பில் ஏற்றி, தள தளவென கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது, இந்த வெல்லத் தண்ணீரில் பொடித்து வைத்த அவலைக் கொட்டிக் கிளறி, பாத்திரத்தை மூடி, அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து பாத்திரத்தைத் திறந்தால், அவல் நன்கு வெந்திருக்கும். உங்களுக்குத் தேவையான அளவு நெய்யில் முந்திரி, திராட்சையை இளஞ்சிவப்பாக வறுத்து, தயாராக உள்ள அவல் புட்டில் கொட்டி, ஏலப்பொடியைத் தூவி, மணக்க மணக்க ருசி பாருங்கள். தேவைப்பட்டால் தேங்காய்த்துருவலையும் மேலே தூவிக் கொள்ளுங்கள்.

தேங்காய் அவல்

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம், தேங்காய்த்துருவல் - அரை மூடி, தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை: அவலைத் தண்ணீரில் களைந்து, வடிகட்டிக் கொள்ளுங்கள். அவல் ஊறக்கூடாது. வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, அதில் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள். தேங்காய்த்துருவல் லேசாகச் சிவக்க ஆரம்பிக்கும்போது, வடிகட்டி வைத்துள்ள அவல், தேவையான அளவு உப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கிளறினால் தேங்காய் அவல் தயாராகி விடும். விருப்பப்பட்டவர்கள் தோல் நீக்கிய வேர்க்கடலையைத் தூவி ருசிக்கலாம்.

மாங்காய் அவல்

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம், கிளி மூக்கு மாங்காய் - பாதியளவு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, தனி மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலைக் களைந்து,வடிகட்டி, தனியாக வையுங்கள். மாங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளியுங்கள். இதில் நறுக்கிய மாங்காய்த் துண்டுகள், உப்பு, தனி மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். மாங்காய் நன்கு வதங்கியதும், தயாராக உள்ள அவலை இதனுடன் சேர்த்துக் கிளறுங்கள். இனிப்பும், புளிப்புமான மாங்காய் அவல் நீங்கள் சாப்பிட நான் ரெடி என்று சொல்லும்.

லெமன் அவல்

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம், எலுமிச்சம் பழம் - பாதியளவு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை: அவலைத் தண்ணீரில் களைந்து, வடிகட்டிக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இதில் களைந்து வைத்த அவல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறினால், சூடான லெமன் அவல் தயார்.

வெஜ் அவல்

தேவையானவை:  மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம், தோல் சீவிய உருளைக்கிழங்கு - ஒன்று, தோல் சீவிய கேரட் - ஒன்று, நறுக்கிய கோஸ் - 50 கிராம், மோர் மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, கடுகு - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி - அரை டீஸ்பூன், கொத்துமல்லித் தழை - ஒரு கைப்பிடி, ரீ ஃபைண்ட் ஆயில், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலைத் களைந்து, வடிகட்டித் தனியாக வையுங்கள். காய்கறிகளைப் பொடிசாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, மோர் மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, இதனுடன் காய்கறிகளை உப்புச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் நன்கு வதங்கியதும், அவல், ஆம்சூர் பவுடர் போட்டுக் கிளறி, கொத்துமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணையுங்கள். சுடச்சுட வெஜ் அவல் சாப்பிடுவதற்கு ரெடி.

அவல் பாயசம்

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம் , பால் - அரை லிட்டர், முந்திரி, திராட்சை, ஏலம், நெய் - சிறிதளவு.

செய்முறை: அவலை நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள். பாலை கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சுங்கள். பால் கொதித்துக் கொண்டிருக்கும்போதே அவலைப் போட்டு வேக விடுங்கள். வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைப் போட்டு, ஏலப்பொடித் தூவுங்கள்.

அவல் கேசரி

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம் , வெல்லம் - 150 கிராம், தண்ணீர் - முக்கால் கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 3 டீஸ்பூன், முந்திரி, திராட்சை, ஏலப்பொடி - தேவையான அளவு.

செய்முறை: அவலைக் களைந்து, வடிகட்டிக்கொள்ளுங்கள். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டிக் கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு டீஸ்பூன் நெய் விட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் அவலைச் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, அவல் கேசரியுடன் போட்டுக் கலந்து, மேலே ஏலப்பொடித் தூவி பரிமாறுங்கள்.

புளி அவல்

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம், புதிய புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டீஸ்பூன், பெருங்காயம் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.

மேம்பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், எள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன். அனைத்துப் பொருட்களையும் வாணலியில் எண்ணெய்விடாமல் வறுத்துப் பொடியுங்கள்.

செய்முறை: அவலைக் களைந்து வடிகட்டி தனியாக வையுங்கள். புளியைக் கரைத்து வடிகட்டி தனியாக வையுங்கள். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு தாளியுங்கள். இதனுடன் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து இளஞ்சிவப்பாகும் வரை வறுங்கள். பிறகு உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் விட்டுக் கொதிக்க விடுங்கள். இந்தப் புளிக்காய்ச்சல் கொதித்துக் கொண்டிருக்கும்போதே, பொடித்து வைத்துள்ள மேம்பொடியைத் தூவி, கெட்டியானதும் அடுப்பை அணையுங்கள். இதில் களைந்து, வடிகட்டிய அவலைப் போட்டு கிளறினால் புளி அவல் தயாராகி விடும்.

அவல் வெண் பொங்கல்

தேவையானவை: மெல்லிய வெள்ளை நிற அவல் - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், நெய் - 4 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன், முந்திரி - இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழைய வேக விடுங்கள். இதனுடன் களைந்து, வடிகட்டிய அவலைச் சேர்த்துக் கிளறுங்கள். பொங்கல் இறுக்கமாக இருந்தால் தேவையான அளவு வெந்நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டிக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரியை பொங்கலின் மேலே அலங்கரியுங்கள். கமகமக்கும் அவல் வெண் பொங்கல் சாப்பிட ரெடி.

குறிப்பு: மெல்லிய வெள்ளை நிற அவலில் ரெசிபிகள் செய்தால், அவலை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை. கடினமான சிவப்பு நிற அவலில் ரெசிபிகள் செய்யப் போகிறீர்கள் என்றால், அவலை அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு சமையுங்கள்.

தொகுப்பு : ஆ.சாந்திகணேஷ், படங்கள்; ப. சரவணகுமார்