Published:Updated:

தெளிந்த மனசாட்சியுடன் பணியை தொடர்கிறேன்:தாமஸ்

Vikatan Correspondent

புதுடெல்லி, டிச.02,2010

தனது மனசாட்சித் தெளிவாக இருப்பதாகவும், பணியைத் தொடருவேன் என்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் கூறினார். ##~~##

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு விசாரணையில் உச்ச நீதிமன்ற கண்டனத்தின் எதிரொலியாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் பதவி விலகக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் கருதின.

இந்த நிலையில், "எனது மனசாட்டி தெளிவாக உள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக தொடர்வேன்," என்றார் தாமஸ்.

ராஜினாமா பற்றி கேட்டதற்கு, "ஊகங்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது," என்றார் அவர்.

தாமஸ் தனது பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என பிஜேபி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.