Published:Updated:

பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்

பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்
பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்

பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்

பிகள் (ஸல்) பிறந்த அரபு தேசம் நமது நினைவில் சில அடையாளச் சின்னங்களுடன் பதிந்திருக்கும். பரந்து விரிந்த பாலைவனம். அதில் காலடிச்சுவடுகளை விட்டுச்சென்றபடி நகரும் ஒட்டகங்கள். வானை நோக்கி உயர்ந்து தலைவிரித்தபடி நிற்கும் பேரீச்சை மரங்கள். அதில் பாளையைப் பிளந்துகொண்டு குலை குலையாகத் தொங்கும் பேரீச்சங்காய்கள், பேரீச்சம்பழங்கள்.

பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு துறக்க ஓரிரு பேரீச்சம் பழங்களை உண்பதுண்டு. ஆனால், ஆண்டு முழுவதும் இந்தப் பழங்களை அதிகம் உண்பது நலம் தரும்; பலம் தரும் என்கிறது திருக்குர்ஆனும் நபிமொழிகளும்.
இயேசுவை ஓர் இறைத்தூதர் என்று அழுத்தமாகத் தெரிவிக்கும் திருக்குர்ஆன், அவரின் தாய் மர்யமின் (மேரி) பிரசவ நேரத்தையும் விவரித்துள்ளது. ஊருக்கு வெளியே தன்னந்தனியே தனது பிரசவத்தைத் தானே நிகழ்த்திக்கொள்கிறார் மர்யம். தூய நீர் ஊற்று ஓடும் பேரீச்சைத் தோப்புக்குள் ஈசா (இயேசு) பிறக்கிறார்.

பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்

லி, வேதனையுடன் ரத்தமிழந்து பச்சை உடம்புக்காரராக இருக்கும் மர்யமை நோக்கி, `இந்தப் பேரீச்சை மரத்தின் கிளையை உன் பக்கம் பிடித்து இழுத்துக் குலுக்குவீராக! அது கனிந்த பழங்களை உன்னிடம் உதிர்க்கும். அவற்றைச் சாப்பிட்டு, இந்த ஊற்று நீரையும் குடித்து கண்குளிர்ந்து மகிழ்ந்திருப்பாயாக!’ என்று வானவர் மூலம் சொல்லப்பட்டது. (19:25,26)


இது ஒரு தாய் சேய் நலவுரையாகும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் தவறாமல் உண்டுவர வேண்டிய மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு பேரீச்சம்பழங்கள்தாம். ரத்தம் விருத்தியாகி ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இந்த ஹீமோகுளோபின்தான் ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குப் புரதத்தை ஊட்டி, உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது. இதற்கு அவசியமானது இரும்புச்சத்து. இந்தச் சத்து பேரீச்சம்பழத்தில் பெருமளவில் உள்ளது.

இந்தக் குறிப்புடன் திருக்குரானின் பிற வசனங்களையும் இணைத்துச் சிந்திக்க வேண்டும். பேரீச்சை மரத்தையும் அதன் கனிகளையும் மனித சமூகத்துக்குத் தனது அருள்கொடையாக அல்லா அறிவிக்கும் வசனங்கள் பல உண்டு. இதன்மூலம் ஏக இறைவனின் படைப்பாற்றலைச் சிந்தித்து அவனை மட்டுமே வணங்கி, நன்றி செலுத்துமாறு அவை அறிவுரை கூறுகின்றன (6:141, 13:4, 16:11, 23:19).


பேரீச்சை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. அதன் அடிப்பாகத்தைக் குடைந்து மரப் பீப்பாய்கள் செய்துகொள்வார்கள், அரபுகள். (புகாரீ 1398) அதன் தண்டுகளைத் தூண்களாக நிறுத்தி கூரை வேய்ந்துகொள்வார்கள். (புகாரீ 3585) அதன் மட்டையைக் கைத்தடி ஆக்கிக்கொள்வார்கள். (புகாரீ 125) ஈச்ச ஓலையில் பாய் நெய்வார்கள். அதன் நாரில் தலையணை செய்வார்கள். (புகாரீ 4913) அதை நிரப்பி மெத்தை செய்வார்கள். (முஸ்லிம் 4229) நாரில் கயிறு திரித்து தம் ஒட்டகத்துக்குக் கடிவாளம் போடுவார்கள். (புகாரீ 3355) குருதி கொட்டும் காயங்களுக்கு ஈச்சம் பாயை எரித்து அதன் சாம்பலையே மருந்தாகக் கட்டுப் போடுவார்கள். (புகாரீ 3037) இதில் பசிக்கும், ருசிக்கும் மரம் தரும் பலன்தான் குலை தள்ளித் தொங்கும் பழங்கள்.

பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்

ரபுகள் பேரீச்சங்குருத்தையும் ருசிப்பார்கள். அப்படி நபிகள் ருசித்த ஒரு தருணத்தில் தம் தோழர்களிடம் ஒரு புதிர் கேள்வி போட்டார்கள். `ஒரு மரம் உண்டு. அதன் இலைகள் உதிராது. அது ஒரு முஸ்லிமுக்கு உவமை. அந்த மரம் எது?’ நபித்தோழர்களின் சிந்தனை நாட்டு மரங்களின் பக்கம் போனது. எந்த மரமாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். 

அந்த இடத்தில் அப்துல்லா என்ற தோழரும் இருந்தார். இவர் உமர்  என்பவரின் மகன். சின்ன வயது. ஆனால், சீரிய புத்தி. விடை தெரியும். வாய் திறக்கத் தயங்கினார். ஏனெனில், பெரியவர்கள் முன்பு முந்திக்கொண்டு பதில் சொல்வது சபை மரியாதைக்குச் சங்கடம் என்று நினைத்தார். அமைதி நிலவியது. நபிகளே விடை சொன்னார்: `அதுதான் பேரீச்சை மரம்.’ (புகாரீ 2209)


முஸ்லிம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? புதிர் வழியாக புரிய வைக்கிறார் நபிகள். பேரீச்சை மரம் எப்படிப் பலன் அளிக்கிறதோ அப்படி இருப்பவரே முஸ்லிம்.
அந்த மரம் இலைகளை உதிர்ப்பதில்லை. மொட்டை மரம் நமக்கு நிழல் கூட தராது. முஸ்லிமின் வாழ்வோ அப்படி அல்ல. அவர் எல்லாக் காலத்திலும் பிறருக்கு உதவ வேண்டும். வெயிலுக்கும் மழைக்கும் குடை போல் நிற்கும் பேரீச்சை மரம் போல பிறருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

இலையுதிர் காலத்தில் மரங்கள் அழகை இழந்துவிடும். சோகமயமாகத் தெரியும். முஸ்லிம் எக்காலத்திலும் மனச்சோர்வோ, முகச்சோர்வோ அடையக் கூடாது. கம்பீரமாகக் கிளைத்து இலைகளை விரித்து தழைத்து நிற்கும் பேரீச்சை மரம் போல் எந்த நிலைமையிலும் கம்பீரமாக நிற்க வேண்டும்.


பேரீச்சை மரம் சுவையான கனிகளைக் குலை தள்ளிக் கொடுக்கிறது. முஸ்லிமின் எந்தச் செயலும் நற்செயலாக வெளிப்பட வேண்டும். அதுதான் அவருடைய வாழ்க்கையின் கனி. வாழ்வின் பொருள். தமக்கும் பிறருக்கும் இனிமையாக வாழ்தல். அவரின் வேர்கள் தூய்மையான நீரை உறிஞ்சி, பூக்களை மலர்த்தி, காய்களை வெளியாக்கி, கனிகளாக வெற்றி இலக்கை எட்டுகின்றன. 
முஸ்லிமும் தூய்மையான நம்பிக்கைகளை முதலில் உறிஞ்சிக்கொள்ள வேண்டும்.

ஏக இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது. தமது கொள்கையின் வேர்கள் வழியாக அசுத்தங்களை உள்வாங்கிவிடக் கூடாது. அப்படி உள்வாங்கினால் அவரிடமிருந்து வெளிப்படுபவை எட்டிக்காய்களாக மாறி அவரை மொட்டை மரமாக்கிவிடும். எனவே, ஆரோக்கியமான கனிகளை அள்ளி வழங்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அவர் தமது வேர்களுக்குரிய ஆரோக்கியமான நம்பிக்கைகளையே அரவணைக்க வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும்.

பேரீச்சை... பசியை மட்டுமல்ல பிணியையும் போக்கும் அருமருந்து! வழிகாட்டும் இஸ்லாம்

பேரீச்சை மரத்தின் வேர்கள் முதல் தண்டுகள், கிளைகள், இலைகள், ஓலைகள், நார் உட்பட அனைத்தும் பலன் அளிப்பவை. முஸ்லிமும் தமது ஏக இறைவனுக்குத் தம்மை முழுக்க அர்ப்பணித்துவிட வேண்டும். உச்சி முதல் உள்ளங்கால் வரை தம்முடைய இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்த வேண்டும். தம்மால் முடிந்த எல்லா வழிகளிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். நபிகளின் வழிகாட்டலை வாழ்க்கையாக்கிக்கொள்ள வேண்டும். பேரீச்சை மரம் தனது மரணத்துக்குப் பிறகும் மக்களுக்குப் பலன் தருவது போல் தம்முடைய மரணத்துக்குப் பின்பும் மக்கள் அடையக்கூடிய நல்லறங்களை விட்டுச்செல்ல வேண்டும்.

இவை ஒரு சுருக்கமான விளக்கம் அந்த நபிமொழிக்கு. ஒவ்வொரு வீட்டிலும் பேரீச்சம் பழங்கள் இருக்க வேண்டுமென நபிகள் ஆசைப்பட்டார். அதை `எந்தக் குடும்பத்தாரிடம் பேரீச்சம் பழங்கள் உள்ளனவோ அவர்கள் பசித்திருக்கமாட்டார்கள்' என்ற சொல்லால் வெளிப்படுத்தினார். (முஸ்லிம் 4155)

இரண்டு மாதங்கள் ஆகியும் சமைக்க இயலாத வறுமையின் பிடியில் வாழ்ந்த நபிகளும் அவரின் மனைவியரும் எப்படி உயிர் வாழ்ந்தனர் என்பதற்கான விடை, ஓரிரு பேரீச்சங்கனிகளை உண்டு சிறிதளவு தண்ணீரைப் பருகினார் என்பதை அன்னை ஆயிஷா நாச்சியாரே ஒருமுறை சொல்லியுள்ளார். இந்தக் கனிகள் பசியைப் போக்கும் விருந்து மட்டுமல்ல, பிணியைப் போக்கும் மருந்தாகவும் திகழ்கின்றது
 

அடுத்த கட்டுரைக்கு