Published:Updated:

`வட்டமாதான் இருக்கணுமா... சதுரமா இருந்தா என்ன தப்பு..?!’- பீட்சாவின் கதை

`வட்டமாதான் இருக்கணுமா... சதுரமா இருந்தா என்ன தப்பு..?!’-  பீட்சாவின் கதை
News
`வட்டமாதான் இருக்கணுமா... சதுரமா இருந்தா என்ன தப்பு..?!’- பீட்சாவின் கதை

`வட்டமாதான் இருக்கணுமா... சதுரமா இருந்தா என்ன தப்பு..?!’- பீட்சாவின் கதை

`இந்த இத்தாலியன் ஃபொக்காச்சியா பிரெட் (Focaccia bread) மேல தக்காளி சாஸ் தடவி, அதுமேல மொசரெல்லா சீஸைத் துருவி, கொஞ்சம் தக்காளி, வெங்காயம், குடைமிளகாயைப் பெருசாகவும் இல்லாம சின்னதாகவும் இல்லாம, பொதுவா ஒரு சைஸுல நறுக்கி, அப்படியே மேலாக்கத் தூவி விட்டு, அதை வேக வெச்சு, சுடச்சுட ஆவி பறக்கும் அந்த பிரெட் மேல சில்லி ஃபிளேக்ஸ் தூவி, கூடவே ஒரு டின் `கோக்' வெச்சுச் சாப்பிட்டா..!' - இப்படிப் பலரைக் கனவு காண வைத்த மேற்கத்திய உணவு வகைககளில் மிகவும் முக்கியமான உணவு `பீட்சா'. ஆபீஸ் பார்ட்டி முதல் ஹவுஸ் பார்ட்டி வரை பீட்சாவின் பங்கு இன்று அதிகமாகிவிட்டது. பலரின் விருப்பமான உணவு வகை பீட்சாவுக்காக ஒரு மாதமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆம், அக்டோபர் மாதத்தை `பீட்சா மாதமாக' உலகமெங்கிலும் கொண்டாடப்படுகிறார்கள்.


1984-ம் ஆண்டு, பீட்சாவுக்கென்றே ஸ்பெஷல் இத்தாலி பத்திரிகையான `பீட்சா டுடே'யின் தலைமை ஆசிரியர் Gerry Durnell என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த மாதத்தில், புதுவிதமான பீட்சாக்களை சாப்பிட்டு மகிழ்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். முதல்முதலில் இது எப்படி உருவானது, முழு பீட்சா வட்டமாகவும் வெட்டிய பிறகு முக்கோண வடிவிலும்தான் எப்போதும் இருக்குமா போன்ற கேள்விகளின் பதில்களோடு சில சுவாரஸ்யத் தகவல்கள்..

பிறப்பு:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இத்தாலிதான் பீட்சாவின் பிறப்பிடம் என்று பெரும்பாலானவர்களின் கணிப்பு. ஆனால், அதன் உண்மை பிறப்பிடம் இன்றுவரை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தட்டையான பிரெட்டின் மேல், காய்கறிகளை பரவி வேகவைத்து எடுப்பதுதான் பீட்சா. இந்தச் செய்முறை, கிரீக், எகிப்து, இஸ்ரேல், பாபிலோனா போன்ற பலநாடுகளில் அவரவர்களின் விருப்பத்துக்கேற்ப வெவ்வேறு விதமான டாப்பிங்களோடு பலநூறு வருடங்களாகப் பின்பற்றப்படுகிறது. அதில், இத்தாலியிலுள்ள நேப்பல்ஸ் (Naples) நகர மக்கள் கைவண்ணத்தில் உருவான பிரெட் உணவு வகைதான், உலகளவில் அனைவரையும் கவர்ந்தது. இத்தாலியில், பணிக்குச் செல்லுபவர்கள் பரவலாக உண்ணும் உணவான இந்தப் பழைமையான ரெசிபி மிகவும் எளிமையானதாக இருந்தது. இதனால், தெருவுக்கு ஒரு கடை எனத் தங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தினர். இந்த எளிமையான செய்முறை நாளடைவில் பல புதுமையான டாப்பிங் வகைகளை கொண்டு, `மாடர்ன் டே பீட்சா'வாக மாறியது.


பீட்சா என்றாலே `மார்கரெட்டா பீட்சா'தான். இதற்கும் ஒரு சுவாரஸ்யக் கதை உண்டு. 1889-ம் ஆண்டு, அரசர் அம்பேர்டோ மற்றும் ராணி மார்கெரிட்டாவுக்காக பிரத்தியேகமாகத் தயார்செய்ய, அந்நாட்டின் சிறந்த பீட்சா பேக்கர் ரஃபேல் எஸ்போஸிட்டோ எண்ணினார். அதில், பச்சை, வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டிருக்கும் இத்தாலிய தேசியக் கொடியின் நிறங்களை கொண்டுவர நினைத்தார். அதற்காக, மொசரெல்லா சீஸ், பேசில் மற்றும் தக்காளி ஆகிய டாப்பிங் வகைகளை தேர்ந்தெடுத்தார். இந்தப் புதுமையான படைப்பு, ராணி மார்கெரிட்டாவுக்கு மிகவும் பிடித்தது. ராணியின் நினைவாகவே, நம் அனைவரின் ஃபேவரிட் பீட்சாவுக்கு, `மார்கெரிட்டா' என்ற பெயர் சூட்டப்பட்டது. நேப்பலில் மட்டும் உண்ணப்பட்டிருந்த இந்த பீட்சா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமெங்கிலும் பரவியது. பலரின் ஃபேவரிட் உணவாகவும் மாறியது.

வடிவமைப்பு:

பலர், `பீட்சா ஏன் வட்டமாதான் இருக்கணுமா? சதுரமா இருந்தா என்ன தப்பு?' போன்ற கேள்விகளை கூகுளில் தேடுவதுண்டு. சதுரம், செவ்வகம் (சிசிலியன் வகை) போன்ற வடிவிலும் கிடைக்கும். ஆனால், பெரும்பாலும் வட்டமாக இருக்கக் காரணம், அனைத்துப் பகுதிகளும் சமமாக வேக, வட்ட வடிவம்தான் சிறந்தது என்பதால்தான். சமமான துண்டுகளாய்ப் பிரிப்பதற்கும் இந்த வட்ட வடிவம் பெரிதும் உதவுகிறது. அவ்வளவுதான் பிசினஸ் சீக்ரெட்! தோசை ஏன் சதுரமா இல்லைன்னு என்றாவது யோசித்து இருக்கிறோமா ?


எவ்வளவுதான் புதுவிதமான டாப்பிங்களோடு விதவிதமான பீட்சா வந்தாலும், ஒரிஜினல் பீட்சாவான `நெப்போலிட்டன்' பீட்சா எங்கும் தற்போது கிடைப்பதில்லை. மேற்கத்திய கலாசார உணவாக இருந்தாலும், இந்தியர்களின் விருப்பத்துக்கேற்ப பல மாற்றங்களைச் செய்து, ஏராளமான இந்திய பீட்சா கடைகளும் இங்கு இருக்கின்றன. அதில் உங்களின் ஃபேவரிட் என்ன. பீட்சா மாதமான அக்டோபரை எப்படி நீங்க கொண்டாடப்போறீங்க!