‘இறைவி’ படத்தில் மலராக மனம் கவர்ந்த பூஜா தேவரையா, அடுத்து ‘ஆந்திரா மெஸ்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’ ஆகிய படங்களில் பிஸி. ரோயிங் படகுப் போட்டியில் தேசிய சாம்பியனான இவருக்குக் கடந்த ஆண்டு போட்டியின்போது ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டது. அதிலிருந்து மீண்டவர் சிறு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.

“ஜிம்முக்குப் போகுறது எனக்குப் பிடிக்காது. அதுல என்ன லாஜிக் இருக்குன்னே எனக்குத் தெரியலை. பாடி டெவலப்பிங்குக்கு ஜிம் போகலாம். ஃபிட்னெஸுக்கு ஜிம் வொர்க் அவுட் அவசியமில்லாத ஒண்ணு” என்று தொடங்கினாலும் ஃபிட்னெஸில் பூஜாவுக்கு அத்தனை ஆர்வம். “ஃபிட்னெஸைப் பொறுத்தவரை ‘Functional Training’ முறையை நான் பின்பற்றுவேன். இது, வாக்கிங், ஸ்கிப்பிங், பிஸிக்கல் ட்ரெயினிங்னு சாதாரணமா வீட்ல பண்ணக் கூடிய பயிற்சிகள்தான். இதுதான் எனக்கு ஈஸியா இருக்கு. காலையில ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி போறதை வழக்கமா வெச்சுருக்கேன். சில நாள்களில் Functional Training முறை சலிப்பை ஏற்படுத்தலாம். அப்போ தினமும் காலையில் யோகா மற்றும் தியானம் பண்ணுவேன். விடுமுறை நாள்கள்ல சைக்கிளிங், ட்ரெக்கிங் மாதிரியான விஷயங்கள் பண்றது உடம்புக்கு மட்டுமில்லாம, மனசுக்கும் நல்லது. வேலைப்பளு காரணமா வொர்க் அவுட் பண்ண முடியாதவங்க, தினமும் அரைமணிநேரம் நடைப்பயிற்சி செய்யறது அவசியம்.

பசிச்சா மட்டும்தான் சாப்பிடறது என் வழக்கம். நம்ம உடம்புக்குத் தேவையில்லைனா மூணுவேளை கட்டாயம் சாப்பிடணும்னு எந்த அவசியமும் இல்லை. வீட்ல சமைக்கிற உணவை மட்டும்தான் சாப்பிடுவேன். அரை வேக்காடா வேக வைத்த உணவுகள் ரொம்ப நல்லது. கடையில இப்போ எல்லாத்தையும் ஓவர்-குக் பண்றாங்க. குறிப்பா அசைவ உணவுகள். சிக்கன், மட்டன் ஆகியவற்றை ரெஸ்டாரன்ட்டுல வாங்கிச் சாப்பிட்டா, ரொம்ப மென்மையா இருக்கும். அதே வீட்ல சமைச்சோம்னா சாப்பிடறதுக்குக் கடினமா இருக்கும். ஆனாலும் அதுதான் ஆரோக்கியமானது.

நான் வீகன். அதாவது பால், இறைச்சி, முட்டை மாதிரி விலங்குகளிடம் இருந்து கிடைக்கிற உணவு வகைகளைச் சாப்பிட மாட்டேன். ஒரு நாளைக்கு ஒருதடவை அரிசி சாப்பிட்டா போதும். அரிசியில் எந்த அளவுக்கு கார்போஹைட்ரேட் இருக்கோ, அதே அளவுக்கு கோதுமையிலயும் இருக்கு. ஆனா, அதை யாருமே உணர்றது இல்லை. அதிகமான காய்கறிகள், பழங்கள் சாப்பிடுறதன் மூலமா வைட்டமின்ஸ் கிடைக்கும். அது சருமத்தையும் பளபளப்பாக்கும். ஷூட்டிங் போகும்போது, தக்காளிப் பழத்தை எடுத்துட்டுப் போவேன். பிரேக் கிடைக்கிறபோது அதைவெச்சு மசாஜ் பண்ணி முகம் கழுவுவேன். எனக்கு டிரைவிங் ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி லாங்-ட்ரைவ் போறதுகூட நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்தான்” என்கிறார் இந்த ரோயிங் சாம்பியன்.

- சுஜிதா சென்