Published:Updated:

இட்லி மேளா!

இட்லி மேளா!
பிரீமியம் ஸ்டோரி
இட்லி மேளா!

கிச்சன் பேஸிக்ஸ் விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

இட்லி மேளா!

கிச்சன் பேஸிக்ஸ் விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

Published:Updated:
இட்லி மேளா!
பிரீமியம் ஸ்டோரி
இட்லி மேளா!

டிபன் வகைகளில் எவர்கிரீன் உணவாக இருக்கும் இட்லியை  அனைவரும் ருசித்துச் சாப்பிடும் விதத்தில் அருமையாகச் செய்வது எப்படி என்று சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த இதழில் இன்னும் பல சிறப்பு இட்லி வகைகளை அட்டவணையுடன் பார்த்துச் சமைத்து ருசிப்போம்.  

இட்லி மேளா!

மசாலா இட்லி

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் இரண்டு டேபிள்ஸ்பூன் இட்லிப் பொடி தூவி விடவும். இட்லிகளை அதன்மீது வைத்து இருபுறமும் சற்று மொறுமொறுப்பாகும்வரை சூடுபடுத்தவும். இதை ஒரு தட்டில் எடுத்துவைத்து ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மீண்டும் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், பாதி அளவு கொத்தமல்லி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி சற்று வதங்கியதும் மிளகாய் சட்னி மற்றும் எஞ்சிய இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்துப் பச்சை வாசனை நீங்கும் வரை கிளறவும். கடைசியாக இட்லிகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். மசாலா கலவையுடன் இட்லி சேர்ந்து வரும்வரை சற்று வேக வைக்கவும். கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கி, மசாலா இட்லியைச் சுடச்சுட பரிமாறவும்.

காய்கறி இட்லி உப்புமா


ஒரு வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக்கொண்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பீன்ஸ், கேரட் மற்றும் குடமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்தவுடன் தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறவும். இட்லிகளை உதிர்த்து, காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும். கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கி, சுவையான சூடான காய்கறி இட்லி உப்புமாவைப் பரிமாறவும்.

தயிர் இட்லி

இட்லியை எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துத் தயிரில் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்த பொருள்களைத் தாளித்துத் தயிர்க் கலவையில் கலந்துகொள்ளவும். உப்பு சேர்த்துக் கிளறவும். தட்டில் பொரித்த இட்லியை வைத்து, அதன்மீது தயிர்க் கலவையை ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்த பொருள்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

சில்லி இட்லி

வாணலியில் எண்ணெய் ஊற்றி இட்லித் துண்டுகளைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்துச் சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். அதன்பிறகு குடமிளகாயைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். கடைசியாக, பொரித்து வைத்திருக்கும் இட்லியைப் போட்டு, மசாலா இட்லியில் நன்கு ஓட்டும்படி புரட்டிவிட்டு இறக்கவும். வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இட்லி மேளா!

பரிமாறுவதற்குச் சில நிமிடங்கள் முன்பு இட்லியை மசாலாவில் சேர்த்துக் கிளறவும். உப்பைச் சற்று கவனமாகச் சேர்க்கவும். இட்லி மற்றும் சாஸ் வகையில் உப்பு உள்ளது.  

இட்லி மேளா!

வெஜ் கைமா இட்லி

வாணலியில் எண்ணெய் ஊற்றி இட்லித் துண்டுகளைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து இஞ்சி - பூண்டு விழுது மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வேகவைத்த பச்சைப் பட்டாணி, குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாவைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்து, நன்கு வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இட்லித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

பொடி இட்லி

வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக்கொள்ளவும். இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து ஒருமுறை கிளறிய பிறகு இட்லி சேர்த்து நன்கு கிளறவும். எல்லா இட்லிகளிலும் பொடி ஓட்டும்படி கிளறி இறக்கிப் பரிமாறவும்.

தக்காளி இட்லி

அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துவைத்துள்ள விழுது மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இட்லி, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். 

இட்லி மேளா!

பர்கர் இட்லி

இட்லி இட்லித் துண்டுகளின் இருபுறங்களிலும் வெண்ணெயைத் தடவி சூடான தவாவில் வைத்து  இருபுறங்களையும் நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். ஒரு இட்லி ஸ்லைஸின் மீது தக்காளி சாஸைத் தடவவும். பிறகு அதன் மேல் கட்லெட்டை வைத்து அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து, மேலே சிறிது முட்டைகோஸைத் தூவவும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை வைத்து, அதன் மேலே மறுபாதியை வைத்து இட்லி பர்கரைப் பரிமாறவும்.  

இட்லி மேளா!

சாண்ட்விச் இட்லி

ஒரு பாத்திரத்தில் தக்காளி சாஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இட்லித் துண்டுகளின் இருபுறங்களிலும் வெண்ணெயைத் தடவி, சூடான தவாவில் வைத்து இருபுறமும் நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். ஒரு இட்லி ஸ்லைஸின் மீது தக்காளி சாஸ் கலவையைத் தடவவும். பிறகு அதன்மீது தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், சீஸை வைக்கவும். பிறகு சாட் மசாலாத்தூள் தூவி, மற்றொரு இட்லி ஸ்லைஸின் மீது புதினா சட்னி தடவி மூடவும்.

பெப்பர் இட்லி

முதலில் வெறும் வாணலியில் மிளகை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி இட்லிகளை நன்கு மொறுமொறுப்பாக, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, கடுகு சேர்த்து வெடித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து பொரித்து வைத்திருக்கும் இட்லித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கவும். இந்த பெப்பர் இட்லியைச் சூடாகப் பரிமாறவும்.  

இட்லி மேளா!

தவா இட்லி

தோசைக்கல்லைச் சூடாக்கி வெண்ணெய், வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பொடி சேர்த்து அதன்மீது இட்லியை வைத்து இருபுறமும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் சூடு செய்து எடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

இட்லி மேளா!

இட்லி 65

பாத்திரத்தில் மைதா, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்தில் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடுபடுத்தவும். இட்லித் துண்டுகளை மாவில் நன்றாகத் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், காஷ்மீரி மிளகாய் விழுது மற்றும் ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கலந்துகொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பிறகு தயிர்க் கலவை மற்றும் உப்பு சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். பொரித்து வைத்திருக்கும் இட்லிகளைச் சேர்த்துக் கிளறவும். மசாலா கலவை முழுவதும் இட்லியுடன் நன்கு சேரும் வரை கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

ஹரியாலி இட்லி

கொடுத்துள்ள கீரை வகைகள், முந்திரி, பச்சை மிளகாய், வறுத்த சீரகப் பொடியை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, கீரை விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பிறகு இட்லிகளைச் சேர்த்து மசாலா நன்கு ஓட்டும்படி கிளறவும். ஓரிரு நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால், ஹரியாலி இட்லி ரெடி.

ஆந்திரா ஸ்பைஸி லெமன் இட்லி

முதலில் பச்சை மிளகாய் மற்றும் பூண்டை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்கவும். பச்சை மிளகாய் - பூண்டு கலவையைச் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இட்லி மற்றும் உப்பு சேர்த்து, எலுமிச்சைச் சாறுவிட்டு நன்கு புரட்டவும். ஆந்திரா ஸ்பைஸி லெமன் இட்லியைப் பரிமாறவும்.

ரசம் இட்லி

ஒரு பவுலில் சூடான தக்காளி ரசத்தை ஊற்றவும். அதில் இட்லியைச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை நெய்யில் தாளித்து மேலே சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவிச் சூடாகப் பரிமாறவும். ரசத்தைத் தனியாக தாளிக்க தேவையில்லை. இட்லி மற்றும் ரசத்தில் உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கத் தேவை இல்லை.

இட்லி சாட்

வாணலியில் எண்ணெய் ஊற்றி இட்லித் துண்டுகளைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். ஒரு தட்டில் 10 இட்லி துண்டுகளை வைத்து அதன்மீது ரகடாவை பரவலாக ஊற்றவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி சட்னி மற்றும் இனிப்புச் சட்னி ஊற்றவும். அதற்கு மேல் வெங்காயம், தக்காளி, சாட் மசாலா, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு, கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி தூவி பரிமாறவும். இதேபோல் மீதமிருக்கும் இட்லிகளைச் செய்து பரிமாறவும்.

சாம்பார் இட்லி

முதலில் தாளிக்கக் கொடுத் துள்ளவற்றை நெய்யில் தாளித்து, சாம்பாரில் சேர்க்கவும் (சாம்பாரைச் சற்று நீர்க்க வைக்கவும்). ஒரு பவுலில் சூடான சாம்பாரை ஊற்றவும். இட்லியைச் சேர்க்கவும். கால் டீஸ்பூன் நெய்யை ஊற்றவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறவும்.இட்லி மற்றும் சாம்பாரில் உப்பு இருப்பதால், தனியாக உப்பு சேர்க்கத் தேவை இல்லை.

இட்லி மேளா!

உங்கள் மொபைலில்  இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism