Published:Updated:

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ -  டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்
`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

`ரொம்ப நாளுக்கு அப்பறம் சூப்பரான லவ் சப்ஜெக்ட் படம்' என்று பலரையும் ஃபீல் பண்ண வைத்த காவியம் '96'. தங்களின் பதின்பருவ காதல் நினைவலையில் பலர் மூழ்கிக்கொண்டிருக்க, 'நான் முரட்டு சிங்கிள்டா!', 'இப்படி ஒரு ஜானு நமக்கில்லையே!' என்று சிலர் புராணங்கள் பாடிக்கொண்டிருக்கின்றனர். பல அழகான தருணங்களை இந்தப் படம் நினைவுபடுத்தியிருந்தாலும், டாப் ட்ரெண்டில் இருப்பது என்னவோ அந்த 'எல்லோ (Yellow) குர்த்தி'தான். இந்த ட்ரெண்ட்செட்டிங் காஸ்டியூமை வடிவமைத்த, ஆடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீ கார்த்திக் விஜய்யிடம் பேசினேன்.

`` `96’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?"

`` 'மருதநாட்டு வீரன்', 'கணவனே கண்கண்ட தெய்வம்' போன்ற திரைப்படங்களை இயக்கிய டி.ஆர்.ரகுநாத், என்னோட தாத்தா. என் பாட்டி M.S.சரோஜா. அவங்களும் நடிகைதான். என் அப்பா, இயக்குநர் கார்த்திக் ரகுநாத். அவர், 'சாவி', 'மக்கள் என் பக்கம்' போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கார். இதனால, திரைத்துறைக்கும் எனக்கும் பிணைப்பு அதிகம். திரைப்படங்கள் பற்றி அதிகம் தெரியும். நானும் பிரேமும் சுமார் 20 வருட நண்பர்கள். நான் டிஸைனிங் படிச்சிருக்கேன். அதுனால, இந்தப் படத்துக்கு காஸ்ட்யூம் டிஸைன் பண்ணச்சொல்லி பிரேம் கேட்டார். நண்பரோட திரைப்படமாச்சே மறுக்க முடியுமா?"

``ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடைகளை வடிவமைக்க, என்னென்ன ஆய்வு பண்ணியிருக்கீங்க?"

``இந்தப் படத்துல இருக்குற சின்னச்சின்ன விஷயங்களுக்கும் நிறையவே ஒர்க் பண்ணியிருக்கோம். கிட்டத்தட்ட நான் ஒரு உதவி இயக்குநராதான் இருந்தேனு சொல்லலாம். இந்தப் படத்தோட கதாபாத்திரங்கள் பற்றி பிரேம் சொல்லும்போது, அந்தக் கேரக்டர்ல ஒரு குறையும் இல்லாம இருக்கணும்னு நினைச்சேன். 'ராம்' மாதிரி போட்டோகிராபர்ஸ் எப்போதும் டிராவல் பண்ணிட்டே இருப்பாங்க. அதுனால நெறையா லக்கேஜ் வெச்சிருக்க மாட்டாங்க. எந்த ஊருக்கு போறாங்களோ அந்த ஊருக்கு ஏத்த உடைகளை வாங்கி போட்டுப்பாங்க. அப்படிதான், ராம் கதாபாத்திரத்தோட உடைகள் எல்லாம் இருக்கும். 'கரை வந்த பிறகே' பாடல்ல பார்த்தா நல்லாவே தெரியும். பெங்களூரு, சென்னைல காஸ்ட்யூம்ஸ் வாங்கினோம். அந்தந்த இடத்துக்கு ஏற்ற உடைகளைதான் தேர்ந்தெடுத்தோம்.  


'ஜானு' கேரக்டர் பத்தி சொன்னப்போ, 'உன்ன போல டிரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கணும்'னு பிரேம் சொன்னாரு. அதுனால எனக்கு கொஞ்சம் ஈஸியா இருந்துச்சு. நான் எப்போதும் சிம்பிளா குர்த்தி, ஜீன்ஸ், சின்னதா தோடு, பொட்டு, ஹேர்க்ளிப்ஸ் இப்படிதான் யூஸ் பண்ணுவேன். அதையேதான் ஜானு கேரக்டருக்கு ட்ரை பண்ணினோம். நான் வலது கைலதான் வாட்ச் காட்டுவேன். அதையே ஜானுவுக்கும் ட்ரை பண்ணலாமேனு, ஜானுவை இடக்கை பழக்கமுள்ளவரா மாத்திட்டோம். பொதுவா வெளிநாட்டுல இருந்து இந்தியா வர்ற இந்தியர்கள், சாதாரண Crocs, குர்த்தி, ஜீன்ஸ்னு கம்ஃபொர்டெபிளான உடைகளைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. சிம்பிள் அதே நேரத்துல rich லுக் கொடுக்கணும். அதுனாலதான், காஸ்ட்லியான வாட்ச் 'ஜானு' போட்ருப்பாங்க. இதுபோல நிறைய விஷயங்கள் பார்த்துப்பார்த்து பண்ணியிருக்கோம். இப்படிதான் ஜானுவுக்கு ஆடை வடிவமைச்சோம்"

`` 'மஞ்சள் நிறத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?"

`` 'ஒரேயொரு காஸ்ட்யூம் டிஸைன் பண்ணிட்டு இவ்ளோ ரீச் ஆகிடுச்சு'னு சொல்றாங்க. ஒரு நைட்ல டிராவல் ஆகுற கதைல எத்தனை காஸ்ட்யூம் டிசைன் பண்ண முடியும்? ஆனா, ஒன்னு பண்ணுனாலும் மக்களுக்கு சலிப்பு வரக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். மேக்-அப் எதுவும் இல்லாம த்ரிஷா முகம் நல்லா பிரைட்டா தெரியணும். அதுவும் நைட் ஷாட்ஸ்க்கு அழகா காட்டணும். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை மைண்ட்ல வெச்சுட்டு தேர்ந்தெடுத்த கலர்தான் 'மஞ்சள்'. மஞ்சள்லயும் நிறையா ஷேட்ஸ் இருக்கு, அதுல த்ரிஷாவுக்கு ஏற்றதுபோல ரொம்ப பிரைட்டாவும் இல்லாம டார்க்காவும் இல்லாம இருக்குற 'மஸ்டர்டு' கலரை தேர்ந்தெடுத்தேன். ஆனால், இந்த அளவுக்கு ரீச் கிடைக்கும்னு நினைக்கல"

``பட வாய்ப்புகள் வருகிறதா?"

``வந்துட்டே இருக்கு. பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு. நல்ல வாய்ப்புகள் வந்தா நிச்சயம் நிறைய படங்கள் பண்ணுவேன்" என்றார் சுபஸ்ரீ.

நதியா ஹேர்ஸ்டைல், ஜோதிகா கிளிப் என இதற்குமுன் ஏராளமான ட்ரெண்ட்செட்டிங் காஸ்ட்யூம்கள் வந்திருந்தாலும், இந்த 'எல்லோ சுடிதார்' என்னமோ பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு