Published:Updated:

டிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்!

டிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி

டாடா, எல் அண்டு டி, மஹிந்திரா, அசோக் லேலாண்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வரும் இந்திய ராணுவத் தளவாட உற்பத்தியில் தற்போது எம்.எஸ்.எம்.இ என்கிற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் காலடி எடுத்து வைக்கப்போகின்றன. அதற்கு அடித்தளமாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட `டிஃப்எக்ஸ்போ- 18’ (DEFEXPO - 18) என்ற ராணுவக் கண்காட்சியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஏராளமாகக் கலந்துகொண்டன.

டிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்!

இந்திய அரசின் பத்தாவது ராணுவக் கண்காட்சி சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் சமீபத்தில் நடைபெற்றது. கண்காட்சியை மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இதுவரை நடந்த ராணுவக் கண்காட்சியில் இதுதான் மிகப்பெரியது.  கிட்டத்தட்ட 2,90,000 சதுர அடி பரப்பில், முப்படைகளும் கலந்துகொண்ட மிகப்பெரிய ராணுவக் கண்காட்சி இது. ராணுவத்துக்குத் தேவையான தொப்பி, ஆடை, ஷூ, பாராசூட், பைனாகுலர் தொடங்கி புல்லட்கள், நவீன ரக துப்பாக்கி, நவீன ரக ரேடார்கள், பீரங்கிகள், போர்க் கப்பல், போர் விமானம் வரை தங்களுக்குப் பிடித்தமான நிறுவனங்களிடம் ராணுவம் ஆர்டர் எடுக்கலாம். இதன்மூலம் பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் குறு, சிறு மற்றும்  நடுத்தர நிறுவனங்களும் வளர்ச்சியடையும்.

701 அரங்குகளைக்கொண்ட இந்தக் கண்காட்சியில் மொத்தம்  47 நாடுகளைச் சேர்ந்த 162 ராணுவத் தளவாட நிறுவனங்களும், இந்தியா விலிருந்து 539 ராணுவத் தளவாட நிறுவனங்களும் கலந்துகொண்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்!

இந்தியாவிலிருந்து டாடா, எல் அண்டு டி, கல்யாணி, மஹிந்திரா, எம்.கே.யூ, டி.ஆர்.டி.ஓ, ஹெச்.ஏ.எல், பி.இ.எல், பி.டி.எல், பி.இ.எம்.எல், எம்.டி.எல், ஜி.ஆர்.எஸ்.இ மிதானி போன்ற நிறுவனங்களும், அதுபோல அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின், போயிங், சுவீடனைச் சேர்ந்த சாப், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ், ரஃபீல்,  ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோன்போரோன் எக்ஸ்போர்ட்ஸ், யுனைடெட் ஷிப்பில்டிங், இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஏ.ஈ சிஸ்டம்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த சிபாட், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரோடு அண்டு ஸ்வார்ஸ் போன்ற பல நிறுவனங்களும் கண்காட்சியில் கலந்துகொண்டன.

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஆப்கானிஸ்தான், செக் குடியரசு, பின்லாந்து, மடகாஸ்கர், மியான்மர், நேபாளம், போர்ச்சுக்கல், கொரியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடு களிலிருந்து அமைச்சர்களும், மற்ற நாடுகளிலிருந்து ராணுவ அதிகாரிகளும் `டிஃப்எக்ஸ்போ- 18’ கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர்.

டிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கண்காட்சியில்  சிறப்புரையாற்றினார். அவர், “2001-ம் ஆண்டு வாஜ்பாய் காலத்தில்தான் முதன்முறையாக ராணுவத்தில் தனியார் பங்களிப்புக்கு  அனுமதிக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடு, 26%-லிருந்து 49%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

இலகு ரக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை  சேலத்தில் நிறுவ தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை வைத்துள்ளார். சேலத்தில்  அமைந்தால் ராணுவப் பங்களிப்பில் 25% தமிழகத்திலிருந்து கிடைக்கும்.

ஜெ.அன்பரசன்,

படங்கள்: எஸ்.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism