Published:Updated:

தொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா? - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி!

தொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா? - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி!
தொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா? - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடர், கௌஹாத்தியில் இன்று  தொடங்குகின்றன. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது. இந்நிலையில், 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று கௌஹாத்தியில் தொடங்குகின்றது. இந்த தொடரிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஜேசன் ஹோல்டர் தலைமயிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி டெஸ்ட் தொடரில் அபரிவிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால், ஒருநாள் போட்டியை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும், இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளதால் பேட்டிங்கில் இந்தியா நம்பிக்கையளிக்கும். அதேபோல பந்துவீச்சை பொறுத்தவரை,முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்ளதால் முதல் போட்டியிலே இந்திய அணி வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது.