Published:Updated:

நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி!

நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி!
நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி!

மறைந்த காவலர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று நாடுமுழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.


லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு சீனபடையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காவலர் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தின சிலை அருகில், இந்தியா முழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் மற்றும்  உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் உயிரிழந்த குடுப்பங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  உயிரிழந்த காவலர்களுக்காக கருப்பு பேட்ஜ் இடதுகையில் அணிந்து மலர் வளையம் வைத்து, காவல்துறையினரின் கமண்டோப் படையினரின் அணிவகுப்போடு அஞ்சலி செலுத்தப்பட்டது.