Published:Updated:

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் லீக் சுற்றில், இந்திய அணி ஜப்பானை வீழத்தியது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள் ஓமனில் நடைபெற்றுவருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா மற்றும் ஓமன் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. தற்போது, லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்திய அணி, தனது மூன்றாவது லீக் சுற்றுப்போட்டியில் ஜப்பானை எதிர்க்கொண்டது. போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் கையே ஓங்கி இருந்தது. போட்டி ஆரம்பித்த 4-வது நிமிடத்தில், லலித் கோல் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். ஜப்பான் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய வீரர்கள் அற்புதமாக முறியடித்தனர். முடிவில், இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஓமனையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியிருந்தது. இதன்மூலம், ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியா தரப்பில் லலித், ஹர்மான்பிரீத், மந்தீப் தலா இரண்டு கோல்களை அடித்து அசத்தினர்.