Published:Updated:

சகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு! - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு! - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்
சகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு! - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்

சகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு! - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். `அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியலவில்லை' என மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் விளக்கமளித்துள்ளார்.

மாதவரம் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்,கஜலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 7வயதில் தாக்ஷன்,தீகூஷா என்ற இரண்டை குழந்தைகள் உள்ளன. 7வயதான இரண்டு குழந்தைகளையும் டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக சென்னை எழும்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தநிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விளக்கமளித்த எழும்பூர் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர்,  ``குழந்தைகளுக்கு மூன்றாவது நாளாகக் காய்ச்சல் தொடர்கிறது என்றால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும். தொடர் தலைவலி, உடற்சோர்வு, நீர்ச்சத்து குறைவு போன்றவையெல்லாம் அபாயகரமான அறிகுறிகள். காய்ச்சல் தொடங்கி நான்கு ஐந்து நாள்கள் கழித்து சிகிச்சைக்கு அழைத்துவந்தால், சிகிச்சையை ஏற்கும் நிலை குழந்தைகளுக்கு இருக்காது. எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும். உயிரிழந்த இரண்டு குழந்தைகளையும் அபாய அறிகுறியுடனேதான் மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். அபாய கட்டத்தில் வந்ததால் மருந்துகளைக் குழந்தைகளின் உடல்கள் ஏற்கவில்லை. குழந்தைகள் உயிரிழந்தது  வருத்தமளிக்கிறது. 27 குழந்தைகள் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்கள் நலத்துடன் உள்ளனர்'' என்றார்.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு