Published:Updated:

"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

தா.ரமேஷ், மு.பிரதீப் கிருஷ்ணா, படங்கள்: க.பாலாஜி

"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

தா.ரமேஷ், மு.பிரதீப் கிருஷ்ணா, படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

காமன்வெல்த் தொடரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று திரும்பியிருக்கிறார் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன். தமிழகத்திலிருந்து மேலும் 5 பேர் பதக்கம் வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் சத்யன் ஞானசேகரனுக்கு சீனியர்கள்.

“எப்படி ஆரம்பிச்சது இந்தப் பயணம்?”

``சின்ன வயசுல என் அக்காக்கள் இருவரையும் டேபிள் டென்னிஸ் அகாடமியில் சேர்த்துவிட அம்மா முடிவுபண்ணாங்க. எனக்கு அப்போ அஞ்சு வயசு. என்னை வீட்டுல தனியா விட பயந்துட்டு, அக்காக்களோடு சந்திரசேகரன் சார் அகாடமிக்கு என்னையும் கூட்டிட்டுப் போனாங்க. அவர் என் பெரிய அக்காவைப் பார்த்துட்டு, `அவங்களுக்கு இதுக்கு மேல பிராக்டீஸ் ஸ்டார்ட் பண்றது கஷ்டம்’னு சொன்னார். திடீர்னு என்னைப் பார்த்து `இவனை வேணா சேர்த்துவிடுங்களேன்’னு அம்மாகிட்ட கேட்டார். நான் அப்போ அந்த டேபிள் உயரம்கூட இல்லை. அதனால் அம்மா கொஞ்சம் தயங்கினாங்க. ஆனாலும், கோச் சொன்னதால என்னைச் சேர்த்துவிட்டாங்க. இப்படித்தான் என்னோட டேபிள் டென்னிஸ் பயணம் தொடங்குச்சு.”

"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

``எப்படி இவ்வளவு சீக்கிரம் இந்தியாவின் நம்பர் 1 பிளேயர் ஆனீங்க?”

``முன்னாடியெல்லாம் ரிஸ்க் இல்லாத `சேஃப் கேம்’தான் ஆடுவேன். உலக அரங்குல சாதிக்க அது போதாதுனு, என் கேம் ப்ளானை மாற்றினேன். சர்வீஸ்களை ரிசீவ் செய்றதுல அதிகம் கவனம் செலுத்தினேன். என் ஸ்பீடு அதிகரிக்கிறதுல ரொம்பவே மெனக்கெட்டேன். ஒவ்வொரு டோர்னமென்ட்லயும் எதிர்த்து ஆடுறவங்களுக்கு ஏற்ப ரிஸ்க் எடுக்கத் தொடங்கினேன்.

2016-ம் ஆண்டு நடந்த பெல்ஜியம் ஓப்பன்ல, என்னோட கேம் எல்லோருக்குமே ஷாக்கிங்கா இருந்துச்சு. `பெல்ஜியம் ஓப்பன் பட்டத்தை வென்ற அண்டர்டாக்’ என்று ஊடகங்கள் பாராட்டின. அந்த  வெற்றியின் மூலமா டாப் 150-க்குள் நுழைஞ்சேன். அடுத்து ஸ்பானிஷ் ஓப்பன் ஜெயிச்சேன். ஐரோப்பாவில ஒரு டேபிள் டென்னிஸ் லீக் ஜெயிக்கிறதே பெரிய விஷயம். ஆனா, நான் ரெண்டு லீக் பட்டம் ஜெயிச்சேன். ரெண்டு ப்ரோ தொடர்களை ஜெயிச்ச முதல் இந்தியன் நான்தான். அதுதான் ரேங்கிங்க்ல நான் முன்னேறினதுக்கான காரணம். டிசம்பர் மாதம் தரவரிசைப் பட்டியல் வெளியானப்போ என் ரேங்க் 49.  இந்தியாவின் நம்பர் 1 பிளேயர். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. சீக்கிரம் டாப் -20க்குள்ள நுழையணும்.”

``உங்க சீனியர் அண்டு பார்ட்னர் சரத் கமல் என்ன சொன்னார்?”

``என்னோட ஃபேவரிட் பிளேயர் அவர்.  இன்னிக்கு நாங்கல்லாம் சரியான வசதிகளோடு பயிற்சி செய்றோம். ஆனா, அவர் அதெல்லாம் இல்லாமலேயே சாதிச்சவர். இப்போ அவர்கூட பார்ட்னரா விளையாடுறேன்னா, அது என் அதிர்ஷ்டம். என் பர்ஃபாமன்ஸ் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். மேட்ச் விளையாடும்போது நான் ஒரு ஐடியா கொடுத்தா, மறுக்காம ஏத்துப்பார். ஜெர்மன் லீக்ல நான் ஆடுறதுக்குக்கூட அவர்தான் முக்கியக் காரணம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

``காமன்வெல்த் தொடரில் பதக்கம் வென்ற அனுபவம்...?”

``ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் காமன்வெல்த் தொடர்லேயே மூணு மெடல்கள் ஜெயிச்சிருக்கேன். செம ஃபீலிங். நான் காமன்வெல்த் போகும்போது நிச்சயமா மெடல் வாங்குவேன்னு நினைச்சாங்க. மூணா வாங்கிட்டேன். முதல் கேம்ஸ்லயே நல்லா விளையாடினதுல என் கான்ஃபிடன்ஸ் லெவல் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. என்னோட பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்ல இதுவும் ஒண்ணு.”

``உங்களோட அடுத்த டார்கெட்?”

``அடுத்து ஸ்வீடன்ல உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்கப்போகுது. அதுக்குப் பிறகு ஏஷியன் கேம்ஸ். ரெண்டுமே ரொம்ப சவாலான தொடர்கள்தான். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் பங்கேற்கும். அதனால காமன்வெல்த்தைவிட இந்தத் தொடர்கள் கஷ்டமானதா இருக்கும்னு நினைக்கிறேன். இந்தத் தொடர்கள்ல நல்லா விளையாடி மெடல் ஜெயிக்கணும். ஜெயிப்பேன்கிற நம்பிக்கை இருக்கு. இங்கே மெடல் ஜெயிச்சா, ஒலிம்பிக்லயும் ஜெயிக்க முடியும். அதுக்காக தீவிரமா பிராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன்.”

இன்னும் பல பதக்கங்கள் வெல்ல வாழ்த்துகள் சத்யன்!

"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

பயிற்சியாளர் ராமன்

சத்யனின் பர்சனல் பயிற்சியாளர் எஸ்.ராமன், இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்; காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 1998-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. சேத்துப்பட்டில் உள்ள தன் வீட்டு மாடியிலேயே அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய `ராமன் அதிநவீன டேபிள் டென்னிஸ் சென்டர்’ தொடங்கி, அனைத்து வயதினருக்கும் பயிற்சியளிக்கிறார். உள்ளூர் வீரர்கள் மட்டுமல்லாது ஹைதராபாத்திலிருந்துகூட பல வீரர்கள் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர்.

"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்!”

ஜெர்மன் லீகில்!

ஐரோப்பிய நாடுகளில் ஐ.பி.எல் போல் டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளும் நடக்கும். அதில் ஜெர்மனியின் புண்டஸ்லிகா மிகவும் பிரசித்திபெற்றது. சைனீஸ் சூப்பர் லீக்குக்கு அடுத்து அதுதான் உலகிலேயே மிகப்பெரிய தொடர். அந்தத் தொடரில் விளையாடும் ASV Grunwettersbach அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார் சத்யன். இந்தத் தொடரில் விளையாடுவது அவரது விளையாட்டு வாழ்க்கையின் மிக முக்கிய மைல்கல். இதற்கு முன்னர் அவர் போலந்தின் Bydgoszcz கிளப்புக்காக விளையாடிவந்தார்.