ன்றைய தலைமுறையின் மிகப்பெரிய சவாலே மருத்துவச் செலவுகள்தான். வாழ்க்கையில் பல செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் சமாளிக்க முடியும். ஆனால், மருத்துவச் செலவுகளை அப்படித் துல்லியமாகத் திட்டமிட முடியாது. அதற்கென ஒரு நிதியை ஒதுக்கி வைத்திருந்தாலும், இன்றைய

பணம் பழகலாம்! - 9

மருத்துவச் செலவுகள் நமது திட்டமிடலை எல்லாம் மிஞ்சுகின்றன.

மருத்துவச் செலவுகளை, ஒரு சாமான்யன் சமாளிப்பதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ்தான் ஒரே வழி. நீங்கள் பெரிய தனியார் நிறுவனங்களில் அல்லது அரசாங்க வேலையில் இருந்தால், உங்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்கள் நிறுவனம் அல்லது அரசாங்கம் மூலம் கிடைத்திருக்கும். சிறிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, இ.எஸ்.ஐ மூலம் இந்த ஹெல்த் கவர் உள்ளது. பிராக்டிகலாகப் பார்த்தால் நமக்கு அதிகமாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் தேவைப்படுவது நம் ஓய்வுக்காலத்தில்தான்.

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும்  குறைந்தது ஐந்து லட்சம் ரூபாய்க்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது பாது காப்பானது. பல பொதுத்துறை மற்றும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவ னங்கள், இன்று ஹெல்த்இ ன்ஷூரன்ஸைப் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலையில் வழங்குகின்றன. சிறந்த ஆலோசகரின் உதவியுடன் உங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸை எடுத்துக்கொ ள்ளு ங்கள். ஒருமுறை எடுத்த பிறகு, அந்த பாலிசியை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்வது மிக முக்கியம். வேலையில் இருப்பவர்களும் தங்களது கம்பெனி கொடுத்திருக்கும் பாலிசி தவிர, தங்களது குடும்பத்துக்கு என பிரைவேட்டாக ஒரு பாலிசியை வைத்துக்கொள்வது நல்லது. 

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி கவரேஜுடன் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம் அல்லது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்து ஒரே கவரேஜை எடுத்து க்கொள்ளலாம். இரண்டாவது வகை பாலிசியை `ஃபுளோட்டர் பாலிசி’ என்கிறார்கள். கணவன் - மனைவி இடையே வயது இடைவெளி குறைவாக இருந்தால் ஃபுளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தற்போது பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்  50 லட்சம் ரூபாய் வரை  பாலிசிகளை வழங்குகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் பழகலாம்! - 9

இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை நம் எல்லோருக்கும் இருக்கும் பெரிய பயம், `இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் செய்யும்போது பணம் சரியாகத் தர மாட்டார்கள்’ என்பதுதான்.  இது தேவையற்ற பயம். பொதுவாக, நீங்கள் பாலிசி எடுக்கும்போது சப் லிமிட் இல்லாத பாலிசியாகப் பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். மேலும், வாழ்க்கை முழுவதும் புதுப்பித்துக்கொள்ளும் வசதியுடைய பாலிசியாக எடுங்கள். இது இரண்டும் முக்கியம். அதுபோல் உங்களுக்கு ஏற்கெனவே நோய் ஏதும் இருந்தால், பாலிசி எடுக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம்  உண்மையைச் சொல்லிவிடுங்கள்.

45 வயதுக்குள் இருக்கும் நபர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்தே மருத்துவப் பரிசோதனை ஏதும் இல்லாமல் பாலிசியை வழங்குகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே பாலிசியை வழங்கவேண்டும். உங்களுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருப்பது தெரியவந்தால், உங்களின் ப்ரீமியம் தொகை கூடும். அதேபோல் குறிப்பிட்ட சில நோய் இருப்பவர்களுக்கு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி வழங்கவும் மறுக்கலாம்.

இப்போதெல்லாம் வரையறைக்கு உட்பட்டிருந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி க்ளெய்மை, பொதுவாக மறுப்பதில்லை. ‘கேஷ்லெஸ் க்ளெய்ம்’ வசதிகளையும் பல நிறுவனங்கள் அறிமுகப்ப டுத்தியுள்ளன. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக பாலிசி எடுத்த முதல் ஒரு மாதத்துக்குள் க்ளெய்ம் வந்தால் ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோல் முதல் 3 அல்லது 4 வருடங்களுக்கு உங்களுக்குத்தெரியாமல் உங்கள் உடலுக்குள் இருக்கும் வியாதிகளுக்கு க்ளெய்ம் தருவதில்லை. உதாரணத்துக்கு, நீங்கள் பாலிசி எடுத்த ஆறு மாத காலத்துக்குள் உங்களுக்கு கிட்னி ஸ்டோன் ஆபரேஷன் வருகிறது என்றால், அதற்கு க்ளெய்ம் கிடைக்காது. ஏனென்றால், ஒரு நபருக்கு கிட்னி ஸ்டோன், ஆபரேஷன் லெவலுக்கு வருவதற்கு மூன்று வருடங்கள் ஆகும். பாலிசி எடுப்பதற்கு முன்னரே உருவான நோய் என்பதால், அதற்கு க்ளெய்ம் கிடைக்காது.

36 - 45 வயதுக்குள் இருக்கும் நபர் ஒருவர், தனக்கு, தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து 4 லட்சம் ரூபாய்க்கு ஃபுளோட்டர் பாலிசி எடுத்துக்கொண்டால் அவர் வருடத்துக்கு சுமார் 14,000 ரூபாய் ப்ரீமியம் தொகை செலுத்தவேண்டியிருக்கும்.

அதேபோல் 36 - 45 வயதுக்குள் இருக்கும் தனிநபர் ஒருவர்  4 லட்சம் ரூபாய்க்குமேல் தனக்கு மட்டும் பாலிசி எடுத்துக்கொண்டால், வருடத்துக்கு சுமார் 6,000 ரூபாய் ப்ரீமியம் கட்டவேண்டியிருக்கும். உங்களின் வயது உயர உயர, பாலிசி ப்ரீமியமும் கூடும்.

உணவு, உடை, இருப்பிடம்போல ஹெல்த் இன்ஷூரன்ஸும் இன்றைய தினம் இன்றியமையாதது.

- வரவு வைப்போம்...