Published:Updated:

`மத்திய மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்!' - எச்சரிக்கும் வணிகர் சங்கங்கள்

`மத்திய மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்!' - எச்சரிக்கும் வணிகர் சங்கங்கள்
`மத்திய மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்!' - எச்சரிக்கும் வணிகர் சங்கங்கள்

`மத்திய மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்!' - எச்சரிக்கும் வணிகர் சங்கங்கள்

மத்திய மாநில அரசுகளால் இந்திய வணிகர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக, திண்டுக்கல்லில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.

திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ஏராளமான வணிகர்கள் கலந்துகொண்டனர். பிளாஸ்டிக் இல்லாமல் மனிதர்களால் இயங்கவே முடியாது. எனவே, பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பதாகையுடன் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, " வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடைசெய்ய வேண்டும். அந்நிய நிறுவனங்கள், நமது நாட்டு சில்லறை வணிகத்தில் நுழைவதால் சிறு குறு நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. மத்திய அரசு இதைத் தடுக்க வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் வரி விகிதத்தை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.  ஜிஎஸ்டி  5 சதவிகிதம் முதல் 12 சதவிகிதத்துக்குள் இருக்குமாறு  வரி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
 


 

பிளாஸ்டிக் தடைச் சட்டத்தால் வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள்  கடைகளில் நுழைந்து பிளாஸ்டிக் பைகளைப்  பறிமுதல் செய்கிறார்கள்.  அத்துடன், மற்ற பொருள்களையும் அள்ளிச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும்.  உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் மாதம் 9 முறை சாம்பிள் எடுக்கிறார்கள்.  வணிகர்கள்மீது பொய் வழக்குப் பதிவுசெய்கிறார்கள். இதனால் மளிகைக் கடைகள், மெடிக்கல் ஷாப், ஸ்டேஷனரி மற்றும்  சிறு குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் மூடக்கூடிய நிலையில் இருக்கின்றன. எனவே, அரசு பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை  மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொடர்ந்து, வணிகர்களின் நலனுக்கு எதிராகவும் அவர்களைப் புறக்கணிக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டுவருகின்றன. இதே நிலை நீடித்தால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் வணிகர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு