Published:Updated:

`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..!’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்

`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..!’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்
`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..!’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்

அந்தப் பொண்ணு, அவங்க ஃபேஸ்புக்கில் என்னைப் பத்தி தப்பா போட்டதை எடுத்து, தியாகராஜன் மாட்டிக்கிட்டார்னு செய்தி போடுறது, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.

`மீ டூ’ அலையில் சிக்கியவர்களில் ஒருவர், `மலையூர் மம்பட்டியான்' புகழ் தியாகராஜன். இவர்மீது புகார் கொடுத்தது, புகைப்படக் கலைஞரான பிரித்திகா மேனன்.

நடிகர் தியாகராஜனிடம் பேசினோம். `` `பொன்னர் - சங்கர்' பட ஷூட்டிங் சமயத்தில் அவங்க ரூம் கதவைத் தட்டினதா அந்தப் பொண்ணு சொல்றாங்க. ஏன், என்னை டார்க்கெட் பண்ணி அப்படிச் சொன்னாங்கன்னு தெரியலை. அந்தப் பொண்ணு சொன்னது பொய்யினு என்னால் நிரூபிக்க முடியும். அந்தச் சம்பவம், கோயம்புத்தூரில் நடந்ததா சொல்றாங்க. அதுவே பொய். அவங்க சொல்ற ஷூட்டிங், பெரம்பலூரில் நடந்துச்சு. சம்பவம் நடந்ததா சொல்ற அன்னைக்கு ராத்திரி, சண்டைக் காட்சியை எடுத்துட்டிருக்கோம். 2,000 பேர், போர் வீரர்களாக நடிச்சுட்டிருக்காங்க. இவங்களைத் தவிர, காஸ்ட்யூமர்ஸ், மேக்கப்மேன் என 200 பேருடன் விடிய விடிய ஒரு கோட்டையில் ஷூட்டிங் நடக்குது. அதுக்கான டாக்குமென்ட்ஸ் என்கிட்ட இருக்கு.

இதைவிட முக்கியமான விஷயம், என் மகன் பிரசாந்த், 200 அடி உயரத்தில் டூப் இல்லாமல் தொங்கும் ரிஸ்க்கான சீனை எடுத்துட்டிருக்கோம். அந்த நேரத்தில், ஒரு பொண்ணோட ரூம் கதவை 12 மணிக்கு, 1 மணிக்கு, 2 மணிக்கு, 3 மணிக்குன்னு தட்டுவேனா... அந்த அளவுக்கு மோசமான தகப்பனா நான்? அந்தப் பொண்ணு, அவங்க ஃபேஸ்புக்கில் என்னைப் பத்தி தப்பா போட்டதை எடுத்து, தியாகராஜன் மாட்டிக்கிட்டார்னு செய்தி போடுறது, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. அந்தப் போஸ்ட்டில் வந்த கமென்ட்ஸைப் பார்த்தேங்க. என் மூஞ்சை உடைக்கணும், அடிக்கணும், என்னை சாகடிக்கணும்னு முரட்டுத்தனமா போட்டிருக்காங்க. சினிமா ஃபீல்டில் 40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டார் அந்தப் பொண்ணு. இது நியாயமா?

அந்தப் பொண்ணு மேல புகார் கொடுக்கணும்னாலும் அவங்க அட்ரஸ் எனக்குத் தெரியலைங்க. என் மனைவிக்கும் பிரசாந்துக்கும் என்னைப் பத்தி நல்லா தெரியும். ஆனா, பப்ளிக்கில் என் பேர் கெட்டது கெட்டதுதானே. நான் சொல்றதெல்லாம் உண்மைங்கிறதுக்கு இன்னொரு சாட்சி சொல்லட்டுமா? என் மேலே புகார் கொடுத்த அந்தப் பொண்ணு, தன் ஃபேஸ்புக் பக்கத்தை இப்போ குளோஸ் பண்ணிட்டாங்க. அவங்க பேஜ் ஓப்பன் ஆகலை. இப்படியொரு பொய் நியூஸ் கொடுத்துட்டு ஓடிப்போயிட்டாங்க. தயவுசெய்து மீ டூ விஷயத்தை மிஸ்யூஸ் பண்றவங்களை அடையாளம் காட்ட பயன்படுத்துங்கள். பாப்புலாரிட்டிக்காக செய்யாதீங்க. இதனால, நிஜமாகவே பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பலன் கிடைக்காமல் போய்விடும்'' என வருத்தமாகப் பேசி முடித்தார் தியாகராஜன். 

அடுத்த கட்டுரைக்கு