ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

மோட்டார் நியூஸ்!

மோட்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் நியூஸ்!

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

வந்துவிட்டது டிரையம்ப் ஸ்பீடு மாஸ்டர்!

டிரையம்ப்பின் புதிய போனவில் ஸ்பீடு மாஸ்டர் பைக் தமிழகத்தில் விற்பனைக்கு வந்துவிட்டது.  டிரையம்ப்பின் பாபர் பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது ஸ்பீடு மாஸ்டர். மாடர்ன் கிளாசிக் பைக்கான இதில், 1200 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் இருக்கிறது. இது 76 bhp பவர் மற்றும் 10.8kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. முந்தைய ஸ்பீடு மாஸ்டர் பைக்கைவிட 42 சதவிகிதமும், டிரையம்ப் போனவில் T120 மாடலைவிட 10 சதவிகிதமும் பவர் மற்றும் டார்க் இதில் அதிகம்.

முன் பக்கம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனும், 16 இன்ச் ஸ்போக் வீல்கள், 130/90 மற்றும் 150/80 செக்‌ஷன் ஏவான் டயர்கள் இந்த பைக்கில் உள்ளன.  Road மற்றும் Rain  ஆகிய இரண்டு ரைடிங் மோடுகளோடு வருகிறது ஸ்பீடு மாஸ்டர். டிராக்‌ஷன் கன்ட்ரோல்,  ride-by-wire, ஏபிஎஸ் தொழில்நுட்பங்கள் உள்ளன. க்ரூஸ் கன்ட்ரோல் உள்ள முதல் போனவில் பைக் இதுதான். முன்பக்கம் 310 மிமீ ட்வின் டிஸ்க்கும் பின்பக்கம் 255 மிமீ சிங்கிள் டிஸ்க்கும், 2 பிஸ்டன் பிரெம்போ காலிப்பர் பிரேக்கும் உள்ளன. 

மோட்டார் நியூஸ்!
மோட்டார் நியூஸ்!

ஹைவே, மேவரிக் என இரண்டு கஸ்டம் ஆப்ஷன்களோடும், விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க 130 ஆக்சஸரிகளுடனும் வருகிறது இந்த பைக்.  டிரையம்ப் நிறுவனம் பராமரிப்புக்குப் பெயர்பெற்றது அதற்கேற்ப இந்த பைக்கின் முதல் சர்வீஸே 16,000 கி.மீ-க்குப் பிறகுதான். இதோடு இரண்டு ஆண்டுகள் சர்வீஸ் வாரன்டியும் தருகிறார்கள். சென்னை ஆன்-ரோடு விலை13,12,936 ரூபாய். இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மற்றும் ஹார்லி டேவிட்ஸன் ஸ்போர்ட்ஸ்டர் 1200 கஸ்டம் பைக்குகளுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள ஸ்பீடுமாஸ்டர், டிரையம்ப்புக்கு நல்ல பேர் வாங்கித் தரலாம்.

ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தை ஜெனரேட்டரில் கொண்டுவந்த மஹிந்திரா!

மஹிந்திராவும் பெர்கின்ஸ் நிறுவனமும் சேர்ந்து அதிக பவர் தரக்கூடிய புதிய டீசல் ஜெனரேட்டர்களை உருவாக்கியுள்ளார்கள். கடந்த வாரம் விற்பனைக்கு வந்த இந்த 400/500/625 kVA அளவு கொண்ட இந்த டீசல் ஜெனரேட்டர்கள் பெர்கின்ஸ் நிறுவனத்தின் 12.5 மற்றும் 18 லிட்டர் டீசல் இன்ஜின் மேல் கட்டமைக்கப்பட்டது.  இந்த ஜெனரேட்டர்களில் அதிக எரிபொருள் சேமிப்பையும், குறைந்த பராமரிப்பையும் கொண்டு வருவதற்காக மஹிந்திரா ஆட்டோமொபைல் ஆராய்ச்சி அமைப்பால் DiGi-SENSE தொழில்நுட்பம், டர்போ சார்ஜர், ஏர்-டூ-ஏர் கூலிங் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 5kVa முதல் 625kVA வரை மஹிந்திராவிடம் ஜெனரேட்டர்கள் உள்ளன.

மோட்டார் நியூஸ்!

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் இல்லாதால், இந்த ஜெனரேட்டர்கள் பல சிறு தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். தற்போது சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளில் பெரிய ஜெனரேட்டர்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. ஆப்ரிக்கா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது மஹிந்திரா.

மோட்டார் நியூஸ்!