Published:Updated:

`லாரி டயர்களைக் கழற்றிக் கழற்றி கையெல்லாம் காச்சுப் போயிடுச்சு' - `பஞ்சர் கடை' கண்மணி அக்கா

`லாரி டயர்களைக் கழற்றிக் கழற்றி கையெல்லாம் காச்சுப் போயிடுச்சு' - `பஞ்சர் கடை' கண்மணி அக்கா
News
`லாரி டயர்களைக் கழற்றிக் கழற்றி கையெல்லாம் காச்சுப் போயிடுச்சு' - `பஞ்சர் கடை' கண்மணி அக்கா

`லாரி டயர்களைக் கழற்றிக் கழற்றி கையெல்லாம் காச்சுப் போயிடுச்சு' - `பஞ்சர் கடை' கண்மணி அக்கா

நாமக்கல் என்றதும் முட்டை நினைவுக்கு வரும். முட்டைக்கு அடுத்தபடியாக, பாடிபில்டிங் துறைக்குப் பெயர் பெற்றது நாமக்கல். குறிப்பாக, லாரி கட்டுமானத்தில் இந்திய அளவில் நாமக்கல் சிறந்து விளங்குகிறது. இதற்காக, டெல்லி, மும்பை என வட மாநிலத்தவரும், தென் மாநிலத்தவரும் இங்கு வந்துசெல்கின்றனர். இதனால், பல லாரிகள் நாமக்கலுக்கு வருவதும், கடப்பதுமாக உள்ளன. இவ்வாறு வரும்போது, அவர்களின் லாரி பஞ்சர் ஆகிவிட்டால் அதைச் சரிசெய்யும் பஞ்சர் கடைகளும், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அதிகம். குறிப்பாக, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. ஆண்களே அதிகமான அளவில் செய்யும் இந்தத் தொழிலில், ஒரு பெண் துணிச்சலோடு ஈடுபட்டுவருகிறார். புதன் சந்தை என்ற இடத்தில் இருக்கிறது கண்மணி அக்காவின் பஞ்சர் கடை. அவரைச் சந்தித்தோம்.

``எனக்குச் சொந்த ஊர் இதேதான். 15 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு. ஆரம்பத்தில், என் புருஷன் மட்டும்தான் இதைச் செய்திட்டிருந்தார். அவருக்கு வெளிநாட்டில் (துபாய்) வேலை கிடைச்சது. அங்கே போயிட்டுத் திரும்பியவர், உடம்பு முடியாமல் படுத்த படுக்கையாகிட்டார். எவ்வளவோ மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தும் சரியாகலை. எங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். ஒரு பையன். இவர் படுத்துட்டதால குடும்பத்தை நகர்த்தவே முடியவில்லை. 

ஆரம்ப நாளில் அவர் பஞ்சர் போடும்போது உதவியா இருந்திருக்கிறேன். அவர் வெளிநாடு போனதும் கடையை இழுத்து மூடிட்டோம். அவருக்கு இப்படி ஆனதும் என்ன செய்யலாம்னு யோசிச்சு பஞ்சர் போடறதுன்னு முடிவுப் பண்ணினேன். நம்ம கடைக்குப் பக்கத்திலேயே ஹோட்டல் இருக்கிறதால, நிறைய லாரி, கார்கள் வரும். அதனால், துணிஞ்சு இறங்கினேன். ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. பெரிய பெரிய டயர்களை கழட்டி பஞ்சர் போடவது ஆண்களுக்குச் சரியாக இருக்கலாம். எனக்குப் பெரிய வலியா இருந்துச்சு. இங்கே பாருங்க... கையெல்லாம் எப்படி காப்பு காச்சி கிடக்கு. ஆனாலும், குடும்பத்தைக் காப்பாத்தணும், புருஷனைப் பார்த்துக்கணும்னு எல்லாத்தையும் செய்ய ஆரம்பிச்சேன். இப்போ, என் மூணு குழந்தைகளும் காலேஜ் படிக்கிறாங்க'' என்கிறார் கண்மணி. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்றைக்கு, புதன் சந்தை அக்கா கடை என்றால் வெளிமாநிலத்தவருக்கும் நன்கு தெரிகிறது. தொழில் சுத்தம் என்பதால் ஏராளமானோர் வருகின்றனர். ``முன்னாடி பகலில் மட்டும்தான் கடை வெச்சிருந்தேன். ஆனால், இந்தப் பகுதியில் நிறைய லாரிகள் ராத்திரியில்தான் வரும். அதனால், ராத்திரியிலும் கடையைத் திறக்கலாம் என நினைத்தேன். சிறு தயக்கம் இருந்தாலும், நம்ம ஊர்தானே எனும் தைரியத்தில் ராத்திரியிலும் வேலை செய்யத் தொடங்கினேன். என் நினைப்பு சரிதான் என்பதுபோல எல்லோரும் உதவுகிறார்கள். இந்தச் சின்ன கொட்டகைதான் என் கோயில். இப்போ, சின்ன அளவுல கேஸ் வெல்டிங்கும் செய்துட்டிருக்கேன். இவர் உடல்நிலைதான் அடிக்கடி கவலையைத் தருது. நம்பிக்கையோடு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன்'' என மெல்லிய புன்னகையை வீசுகிறார் கண்மணி. 

வேலை செய்வதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. இதை வெறும் வார்த்தைகளாகப் பார்க்காமல், தன் வாழ்க்கையின் மூலமாக மற்ற பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார் கண்மணி அக்கா. அவரின் நம்பிக்கைப் பயணம் தொய்வின்றி தொடரட்டும்.