Published:Updated:

மதுரை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல் -பறிமுதல் செய்யப்பட்ட டாலர்கள்!

மதுரை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல் -பறிமுதல் செய்யப்பட்ட டாலர்கள்!
மதுரை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல் -பறிமுதல் செய்யப்பட்ட டாலர்கள்!

மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கபூருக்குக் கடத்த முயன்ற  அமெரிக்க டாலர் உள்பட, ரூபாய் 1 கோடியே 20 லட்சம் பணத்தை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தொடர்ச்சியாக தங்க பிஸ்க்கட்டுகள், விலை உயர்ந்த சாமி சிலைகள், அறிய வகைப் பொக்கிஷங்கள் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அவ்வப்போது அதிகாரிகள் கண்ணில் சிக்கி, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், மதுரையில் இருந்து  சிங்கப்பூருக்குச் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடத்தல் நடப்பதாக சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவுக்கு தொலைபேசிமூலம் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, சுங்கத் துறை நுண்ணறிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நீண்ட நேர சோதனையில், மதுரை ஒத்தக்கடை பகுதியைச்  சேர்ந்த ஜமில் என்பவரின் மகன் ரபிக்ராஜா கொண்டுவந்த பார்சல் சந்தேகத்துக்குரிய விதத்தில் பேக் செய்யப்பட்டிருந்தது. அதைப் பிரித்து சோதனை செய்தபோது, அதில் அமெரிக்க டாலர்கள், சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு நோட்டுகள் சுமார் 89 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மேலும், சென்னை அண்ணா சாலை பங்காரு நாயக்கன் தெருவைச் சேர்ந்த செரீஃப் மகன் பிரேம் நசீர், தனது பார்சலில் நூதனமாக  டேப் ஒட்டி மறைத்துவைத்திருந்த இந்திய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், ரூபாய்  30 லட்சத்தையும், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் கைப்பற்றினர். இதுகுறித்து இருவரிடமும் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.