ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

சிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல்! - இரண்டிலும் இருக்கு AMT...

சிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல்! - இரண்டிலும் இருக்கு AMT...
பிரீமியம் ஸ்டோரி
News
சிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல்! - இரண்டிலும் இருக்கு AMT...

ஃபர்ஸ்ட் டிரைவ் / டாடா நெக்ஸான் AMTதொகுப்பு: தமிழ்

டாடாவின் நெக்ஸானுக்கு ஹான்ட்டின் லைக். ஏன்? மாருதி பிரெஸ்ஸாவில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை. ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டில் AT இருக்கிறது. ஆனால், பெட்ரோலில் மட்டும்தான். நெக்ஸானில் அப்படி இல்லை. பெட்ரோல்/டீசல் இரண்டிலுமே AMT ஆப்ஷனைக் கொடுத்திருக்கிறது டாடா. இரண்டிலும் ஒரு லிட்டில் டிரைவ்.

‘எக்கோஸ்போர்ட்டுடன் நெக்ஸானை ஒப்பிட முடியாது’ என்று ஃபோர்டு வாடிக்கையாளர்கள் சண்டைக்கு வரலாம். காரணம், எக்கோஸ்போர்ட்டில் இருப்பது அருமையான, ஸ்மூத்தான டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ். நெக்ஸானில், அதுவும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்ட, ரொம்ப அடிப்படையான AMT.

சிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல்! - இரண்டிலும் இருக்கு AMT...

சாலையில் இனிமேல் கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு கலரில் ஒரு நெக்ஸான் பறக்கிறதென்றால், அது AMT-யாகத்தான் இருக்கும். டாப் வேரியன்ட்டான XZA+ மாடலில் மட்டும்தான் ஆரஞ்சு கலரில் AMT வேரியன்ட் கிடைக்கும். மாற்றம் முழுவதும் கியர்பாக்ஸில்தான் என்பதால், உள்ளே டிசைனில் கை வைக்கவில்லை டாடா. ‘வாவ், நைஸ் லுக்’ என்று வியக்கும்படியான இன்டீரியர், பின் பக்கப் பயணிகளுக்கான வசதியான இடவசதி என்று ரிச் லுக்காகவே இருக்கிறது. சில இடங்களில் அந்த பில்டு குவாலிட்டியை மட்டும் கொஞ்சம் என்னானு பாருங்க டாடா!

மேனுவல் நெக்ஸானைப் போலவே எக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என்று அதே மல்ட்டி டிரைவ் மோடுகள் AMT-யிலும் இருந்தன. க்ரீப் ஃபங்ஷன் இருப்பது நகரத்தின் பம்பர் டு பம்பர் டிராஃபிக்கில் வரம். மலைச் சாலையில்தான் இது கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தும். அட, அதற்கும் வழி செய்துவிட்டது டாடா! ஹில் ஹோல்டு அசிஸ்ட் இருக்கிறதே! மலை இறக்கங்களில் ஹேண்ட் பிரேக்கிலிருந்து கையை எடுத்துவிட்டுத் தைரியமாக ஓட்டலாம்.

முதலில் டீசல். 6-ஸ்பீடு AMT. 110 bhp பவரும், 26.0 kgm டார்க்கும். நல்லவேளை - வழக்கம்போல் டீசலில் 4 சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது. ஆனால், வழக்கம்போல் அதே அதிர்வுகள்! சிக்னலில் இருந்து கிளம்பும்போது ஸ்மூத்தான பவர் டெலிவரி கிடைக்கிறது. லோ டு மிட் ரேஞ்ச் சென்றபோது நான் வியந்துவிட்டேன். காரணம், டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் போல் இதன் செயல்பாடு அத்தனை க்விக்காக இருந்தது. வேகத்தைக் குறைக்கும்போது டவுன் ஷிஃப்ட் குவிக் ஆனது பெரிய விஷயமில்லை; அதே நேரத்தில் ஆக்ஸிலரேஷன் கொடுத்தபோது அப் ஷிஃப்ட்டும் சட் சட் என நடந்தது.

சிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல்! - இரண்டிலும் இருக்கு AMT...
சிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல்! - இரண்டிலும் இருக்கு AMT...

சிட்டி மோடு-ஐவிட எக்கோ மோடில் கியர் ஷிஃப்ட்டிங் இன்னும் ஸ்மூத் ஆக இருந்தது. ‘ஸ்போர்ட்’ வழக்கம்போல் அதிரிபுதிரி பார்ட்டிகளுக்கானது. விர்ரென வேகம் பிடிக்கிறது. ஆனால், மைலேஜ் கவனம். கியர் லீவரை இடதுபுறம் தள்ளினால், மேனுவல். இதை கன்ட்ரோல் செய்ய கியர் லீவர்தான். பேடில் ஷிஃப்ட்டர்கள் இருந்தால், ஜாலியாக இருந்திருக்கும். மேனுவல் கியர் ஷிஃப்ட்டிங் கொஞ்சம் மந்தமாக இருப்பதுபோல் தெரிந்தது. அப்/டவுன் இரண்டிலுமே அப்படித்தான் ஃபீல். ஸ்போர்ட் மோடு, சூப்பர்!

சிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல்! - இரண்டிலும் இருக்கு AMT...

பெட்ரோல் AMT-ஐ எடுத்தேன். பவர் அதே 110 bhp தான். டார்க் 17.0 kgm. டர்போ சார்ஜ்டு இன்ஜின். பவர் டெலிவரி, டீசல் அளவு அத்தனை லீனியராக இல்லை. ஆனால், இன்ஜின் ரிஃபைன்மென்ட் செம ஸ்மூத். இத்தனைக்கும் இது 3 சிலிண்டர் இன்ஜின். ஆன்-ஆஃப் த்ராட்டில் டிரான்சிஷனில் செம ஜெர்க் தெரிந்தது. நகர டிராஃபிக்கில் கியர் ஷிஃப்ட்டிங் ஸ்மூத்தாக இருந்தது. அதிக வேகங்களில் இதன் அப் ஷிஃப்ட்டிங், உங்கள் திராட்டிலிங்கில் வேகம் மட்டும் இருந்தால் போதாது; விவேகமும் வேண்டும். அதாவது ஜென்டிலாக ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டும். டீசலைவிட கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. கொஞ்சம் தயக்கம் இருக்கிறது அப் ஷிஃப்ட்டிங்கில். சிட்டி டிராஃபிக்கில்தான் பெட்ரோல் எடுபடும்போல் தெரிகிறது.

இதை ஓட்டி முடிக்கும் வரை விலையைச் சொல்லவில்லை டாடா. மேனுவலைவிட 60,000 ரூபாய் அதிகமாக இருக்கலாம். அதாவது, பெட்ரோல் AMT-கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாயும், டீசல் AMT - 10.60 லட்ச ரூபாயும் இருக்கலாம். விலைக்கேற்ற தரம் இரண்டு நெக்ஸான் AMT-யிலும் இருக்கிறது.

எதை எடுப்பது என்கிற குழப்பம் உள்ளவர்களுக்கு ஒரு வரித் தீர்ப்பு - சிட்டி டிராஃபிக்குக்கு ஸ்மூத்தான பெட்ரோல்; ஹைவேஸுக்கு தடதடக்கும் டீசல்!