ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ... என்ன எதிர்பார்க்கலாம்?

SPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ...  என்ன எதிர்பார்க்கலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
SPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ... என்ன எதிர்பார்க்கலாம்?

ஸ்பை போட்டோ / சான்ட்ரோராகுல் சிவகுரு, படம்: பத்ரி

யான் மற்றும் கிராண்ட் i10 ஆகிய கார்களுக்கு இடையே பொசிஷன் செய்யும் விதமாக, AH2 என்ற புனைப் பெயரைக் கொண்ட புதிய ஹேட்ச்பேக் ஒன்றை, தீபாவளி நேரத்தில் களமிறக்கும் முடிவில் இருக்கிறது ஹூண்டாய். சென்னை மற்றும் டெல்லியில் தீவிரமாக டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த காரை நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் படம்பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகர் பத்ரி. மாருதி சுஸூகி செலெரியோ, ரெனோ க்விட் 1.0, டாடா டியாகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக வரப்போகும் இந்த காரை,  'Family Design Concept' பாணியில் வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். எனவே, சிறிய ஹேட்ச்பேக்காக இருப்பினும், டால் பாய் தோற்றத்துடன், இது போதுமான சிறப்பம்சங்களுடன் அதிக இடவசதியையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

SPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ...  என்ன எதிர்பார்க்கலாம்?

சான்ட்ரோ என்ற பெயரிலேயே விற்பனைக்கு வருவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால், இந்திய சந்தைக்கு எனப் பிரத்யேகமான மாடலாக இருப்பினும், முதல் தலைமுறை i10 காரின் PA பிளாட்ஃபார்மில் இது தயாரிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு வசதிகளும் இடம்பெறும் என நம்பலாம். எனவே, 2019-ல் வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகளின்படி வடிவமைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், குறைவான அளவில் விற்பனையைக் கொண்டிருக்கும் இயான் காருக்கு மாற்றாகவும் இது வெளிவரலாம். இதில் இயானில் இருக்கும் 1.0 VTVT பெட்ரோல் இன்ஜின் அல்லது சான்ட்ரோவில் இருந்த 1.1 லிட்டர் Epsilon பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் எனத் தகவல்கள் வந்துள்ளன. இரண்டுமே BS-VI விதிகளுக்கு ஏற்ற டியூனிங்கைக் கொண்டிருக்கும்.

ஹூண்டாய் சான்ட்ரோக் காரைப் படம் எடுத்து அனுப்பிய மோ.வி வாசகர் பத்ரி, ஜெர்கின் பரிசாகப் பெறுகிறார்.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com