ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்

விவோ V9

அனைத்து நிறுவனங்களும் 18:9 டிஸ்ப்ளே நோக்கிச் செல்ல, விவோ 19:9 டிஸ்ப்ளேவை கையில் எடுத்திருக்கிறது. ஆனால், டிஸ்ப்ளே அளவில் இது பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. Look & Feel விஷயத்தில் ஐஃபோன் X-ஐ பிரதி எடுத்திருக்கிறது விவோ V9. செல்ஃபி கேமராக்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் விவோ, இந்த மொபைலிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

டிஸ்ப்ளேவுக்கான ஸ்பேஸ் அதிகம் இருப்பதால், 5.5” ஸ்கிரீன் கொண்ட மொபைல் அளவுக்கு இருந்தாலும், இதில் 6.3” ஸ்கிரீன் அளவுக்கான டிஸ்ப்ளேவை வழங்குகிறது விவோ.

கேட்ஜெட்ஸ்

* 6.3” 19:9 2280 -1080 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

 *  3260mAh பேட்டரி

 *  16 மெகாபிக்ஸல் + 5 மெகாபிக்ஸல் ரியர் டூயல் LED FLASH கேமரா

 *  24 மெகாபிக்ஸல் செல்ஃபி ஃபிரன்ட் கேமரா

 *  ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

 *  4 ஜிபி RAM, 64 ஜிபி இன்டர்னல் மெமரி

ப்ளஸ்:

 *  சிறப்பான பர்ஃபாமென்ஸ்

 *  சிறப்பான கேமரா

மைனஸ்:

 *  குறைவான திறன் கொண்ட பேட்டரி

 *  அதிவேக சார்ஜிங் இல்லை

ஒப்போ F7

ஐஃபோன் X மாடலை விவோ V9 பிரதி எடுத்திருக்கிறது என்றால், விவோ V9 மாடலை ஒப்போ F7 பிரதி எடுத்து வைத்திருக்கிறது. டூயல் ரியர் கேமராவைத் தவிர, பத்து பொருத்தமும் இரண்டு மொபைல்களுக்கும் பக்காவாகப் பொருந்தியிருக்கிறது.

செல்ஃபி பிரியர்களின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து பூர்த்தி செய்வது ஒப்போ நிறுவனம். இந்த முறை 25 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமராவுடன் பல்வேறு விதமான ஆப்ஷன்களையும் கொடுத்திருக்கிறது.

கேட்ஜெட்ஸ்

6.23” 19:9  ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

 *  3400 mAh பேட்டரி

 *  மீடியாடெக் P60 ஆக்டோ கோர் 2.0GHz  பிராசஸர்

 *  16 மெகாபிக்ஸல் ரியர்  LED FLASH கேமரா

 *  25 மெகாபிக்ஸல் செல்ஃபி ஃபிரன்ட் கேமரா

 *  ஆண்டிராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

 *  4 ஜிபி RAM , 64 ஜிபி இன்டர்னல் மெமரி

 *  பின்பக்க கிளாஸ் ஃபினிஷ்

ப்ளஸ்:

 *  சிறப்பான பேட்டரி

 *  அட்டகாசமான செல்ஃபி கேமரா

மைனஸ்:

 *  அதிகவேக சார்ஜிங் இல்லை

 *  டூயல் ரியர் கேமரா இல்லை.

விலை: 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி `21,990 I 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி ரூ. 26,990

மற்ற சாய்ஸ்

ரெட்மி நோட் 5 ப்ரோ

18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவில் இந்த இரு மொபைகளுக்கும் ரெட்மி தரப்பில் இருக்கும் போட்டியாளர், ரெட்மி நோட் 5 ப்ரோ. கிட்டத்தட்ட இதே ஸ்பெக்ஸ், அதே சமயம் சிறப்பான பேட்டரி என முன்னிலையில் இருக்கிறது நோட் 5 ப்ரோ. விலையும் (13,999 - 4 ஜிபி ரேம் மாடல்) வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

ஐஃபோன் X

எல்லா மொபைல்களும் 18:9 டிஸ்ப்ளே நோக்கி நகர்வதற்கு முக்கியக் காரணம், ஐஃபோன் X. சில ஆன்லைன் தளங்களில் விலை சற்று குறைக்கப்பட்டு இருந்தாலும், 80,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய முடியுமென்றால், ஐஃபோன் X நல்ல சாய்ஸ்.

கேட்ஜெட்ஸ்

ஹானர் வியூ 10

18:9 டிஸ்ப்ளேவில் ஹானர் தரப்பு ஃபிளாக்ஷிப் இது. 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி என மிரட்டும் வியூ 10-ன் விலை 29,999 ரூபாய்.

சாம்சங் கேலக்ஸி A8+

சிறப்பான சாஃப்ட்வேர், டூயல் ஃபிரன்ட் கேமரா என செல்ஃபியை முன்னிறுத்தி சாம்சங் களம் இறக்கியிருக்கும் மாடல், கேலக்ஸி A8+. விலை 30,990 ரூபாய்.