Published:Updated:

இட்லி மேளா!

இட்லி மேளா!
பிரீமியம் ஸ்டோரி
இட்லி மேளா!

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

இட்லி மேளா!

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

Published:Updated:
இட்லி மேளா!
பிரீமியம் ஸ்டோரி
இட்லி மேளா!

வெல்கம் டு சிறுதானிய இட்லி... குட்பை டு உடல்நலப் பிரச்னைகள்!

`காலை எழுந்தவுடன் இட்லி’ - இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் நம்மில் பலருக்கும் இதுதான் பழக்கம். வழக்கமாகச் சாப்பிடுவதன் காரணமாக இட்லியை பலரும் சாதாரணமான விஷயமாக நினைத்துக் கடந்து செல்கிறோம். ஆனால், எளிதில் ஜீரணமாகக்கூடியது, உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பவை உட்பட இட்லியின் அருமை பெருமைகள் ஏராளம். சென்ற இதழைத் தொடர்ந்து இந்த இதழ் `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி வகைகளில் இட்லி செய்வது பற்றியும் சில இட்லி வகைகளின் செய்முறையையும் தெரிந்துகொள்வோம்; குடும்ப ஆரோக்கியத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்வோம். 

இட்லி மேளா!

நவீன ரக அரிசியைவிட சிறுதானியங்களில் மற்றும் பாரம்பர்ய நெல்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருக்கிறது. இவற்றில் புரதம், நார்ச்சத்து இருப்பதுடன் நியாசின், தயமின் ஆகிய வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இவை மருத்துவக் குணம் கொண்டவையாகவும் பொதுவாக அனைத்துமே எளிதில் ஜீரணமாகக்கூடியவையாகவும் நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை, மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றன. உடல் உஷ்ணத்தைக் குறைக்க, உடலைச் சீராக வைக்க அல்லது எடையைக் குறைக்க உதவுகின்றன. இதயத்தை மற்றும் எலும்பைப் பலப்படுத்த உதவுவதுடன், வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானத்தினால் ஏற்படும் வலி, ஆர்த்தரைடீஸ் மற்றும் ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற நோய்களின் தன்மையைக் குறைக்கவும் உதவுகின்றன. இவற்றில் இருக்கும் மாவுச்சத்து மெதுவாகச் சர்க்கரையாக மாறும் தன்மையுள்ளதால் இவற்றை உண்பதால் நீரிழிவு வருவதைத் தவிர்க்கலாம். நீரிழிவு உள்ளவர்களுக்குச் சர்க்கரை யின் அளவைக் கட்டுபாட்டினுள் வைக்கவும் உதவுகின்றன. மூங்கில் அரிசி நீரிழிவு, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது; கருவுற்ற பெண்களுக்கு ஏற்றது; குழந்தையின்மைப் பிரச்னைக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இட்லி மேளா!

பாரம்பர்ய நெல்லின் விசேஷ பயன்கள்

திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணமகனுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி, திருமணமான தம்பதியின் ஆரோக்கியத்துக்கு கவுனி அரிசி, மகப்பேறு காலத்தில் பூங்கார் அரிசி, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் குடவாளை அரிசி, குழந்தைக்கு உணவு ஊட்ட வாடன் சம்பா அரிசி என நம் பாரம்பர்ய நெல் வகைகளை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.  

இட்லி மேளா!
இட்லி மேளா!

நற்பலன்கள் கொண்ட இட்லி

இட்லிகளை ஆவியில் வேகவைப்பதாலும் எண்ணெய் இல்லாமல் இருப்பதாலும் அவை எளிதில் ஜீரணமாகக்கூடியவை. அதனால், உடல்நிலை சரியில்லாத வேளையிலும் உட்கொள்ள டாக்டர்கள் இட்லிகளைத்தான் பரிந்துரைக்கிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் ஊட்டப்படும் திட உணவுகளில் ஒன்று இட்லி. இத்தகைய நற்பலன்கள் கொண்ட இட்லியைச் சிறுதானியங்களில் மற்றும் பாரம்பர்ய நெல் வகைகளைப் பயன்படுத்தித் தயாரித்தால் இட்லியின் பலன்கள் மேலும் அதிகரிக்கும்.

சிறுதானியம் மற்றும் பாரம்பர்ய அரிசி இட்லி வகைகள் செய்ய...

*அட்டவணையில் மூலப்பொருளில் குறிப்பிட்டுள்ள சிறுதானியம் மற்றும் இட்லி அரிசியை நன்றாகக் கழுவி நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். 

இட்லி மேளா!
இட்லி மேளா!


 *பாரம்பர்ய அரிசி இட்லிகளுக்கு, மூலப்பொருளில் குறிப்பிட்டுள்ள அரிசி மற்றும் இட்லி அரிசியை நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

* வெந்தயம் மற்றும் உளுந்தைத் தனியாக இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

 *அவலை அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.

 *ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து, நன்கு பொங்கி வரும் வரை அரைக்கவும்.

* ஊறவைத்துள்ள சிறுதானியம் அல்லது பாரம்பர்ய அரிசிக் கலவையைச் சற்றுக் கொரகொரப்பாக (ரவையைவிட சற்று மையாக) அரைத்துக்கொள்ளவும்.

* உளுந்து மாவு வைத்திருக்கும் அதே பாத்திரத்தில் அரிசி மாவைச் சேர்க்கவும்.

 *தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மாவை இட்லி மாவு பதத்துக்குக் கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த பிறகு மாவு நன்றாகப் பொங்கி விடுமாதலால் மாவு வைக்கும் பாத்திரத்தில் பாதி அளவுதான் புளிப்பதற்கு மாவை ஊற்றிவைக்க வேண்டும். மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிய பிறகு கிளறிவிடக் கூடாது. அப்படியே மூடிவைத்துப் புளிக்க வைக்க வேண்டும். 

இட்லி மேளா!

 *இட்லிப் பானையில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இட்லித் தட்டின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து போட்டு அல்லது தட்டில் எண்ணெய் தடவி, இட்லிப் பானையில் வைக்கவும்.

 *புளித்த மாவை அதிகம் கிளறாமல் ஒருபக்கமாகவே மாவை எடுத்து, இட்லித் தட்டில் ஊற்றி மூடிவைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும்.

 *மூடியைத் திறந்து, ஒரு குச்சியால் வெந்த இட்லியை அடி வரை குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இட்லிகளை எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

இட்லி மேளா!
இட்லி மேளா!

உங்கள் கவனத்துக்கு...

* இட்லி மாவு கெட்டியாக இருந்தால், இட்லி சற்றுக் கனமாக வரும் மற்றும் வேகவும் நேரம் எடுக்கும். மாவு தளர்த்தியாக இருந்தாலும் வேக நேரம் எடுக்கும், இட்லிகள், தோசை போல எழும்பாமல் இருக்கும்.

* சிறுதானியம் அல்லது பாரம்பர்ய அரிசி கலவையை மிகவும் மையாக அரைத்தால் இட்லிகள் மிருதுவாக இருக்காது; வேக நேரம் எடுக்கும்; சுவையும் குறைந்து போகும். மாவை கிரைண்டரில் அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும். கிரைண்டர் இல்லாதவர்கள் மிக்ஸி அல்லது ஃபுட் புராசஸர் பயன்படுத்தலாம்.

* சிறுதானியங்களில் புழுங்கல் வகைகளையும் பயன்படுத்தி இட்லி வார்க்கலாம். கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தும் அதே அளவு உபயோகிக்கவும். மேற்கூறிய முறையில் இட்லி தயாரிக்கவும். 

இட்லி மேளா!

* இரண்டு மூன்று வகையான சிறுதானியங்களை ஒன்றாகப் பயன்படுத்தியும் இட்லி வார்க்கலாம். சிறுதானியங்களின் கலவை மூன்று பங்கு என்றால் இட்லி அரிசி ஒரு பங்கு, உளுந்து ஒரு பங்கு மற்றும் அவல் அரை பங்கு பயன்படுத்தவும்.


*  இந்த மாவுகள் அனைத்தையும் இரண்டு மூன்று நாள்களுக்குள் உபயோகப்படுத்திவிடவும். இவை சீக்கிரம் புளிக்கும் தன்மை உடையவை. பாசிப்பருப்பு இட்லி மாவு மற்றும் அடை இட்லி மாவு ஆகியவற்றையும்  இரண்டு நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும். 

இட்லி மேளா!
இட்லி மேளா!

கொள்ளு இட்லி

கொள்ளு மற்றும் இட்லி அரிசியை நன்றாகக் கழுவி நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் தனித்தனியாக ஊறவைக்கவும். கொள்ளை உளுந்து ஆட்டுவது போல் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து ஆட்டவும். உளுந்து போலவே கொள்ளும் நன்கு பொங்கி வரும். கொள்ளு ஆட்டி எடுத்ததும் அரிசியைச் சற்றுக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். உப்பு சேர்த்து அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவிடவும். இட்லிப் பானையில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். புளித்த மாவை அதிகம் கிளறாமல் ஒரு பக்கமாகவே மாவை எடுத்து, இட்லித் தட்டில் ஊற்றி மூடிவைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும். மூடியைத் திறந்து, ஒரு குச்சியால் வெந்த இட்லியை அடி வரை குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இட்லிகளை எடுத்துச் சூடாகப் பரிமாறவும். 

இட்லி மேளா!
இட்லி மேளா!

பாசிப்பயறு இட்லி

பாசிப்பயறு மற்றும் இட்லி அரிசியை நன்றாகக் கழுவி நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, இஞ்சியைச் சேர்த்து மற்ற இட்லிகளுக்கு அரைப்பதைப் போல் அரைத்துக்கொள்ளவும். அதிகம் தண்ணீர் சேர்க்காமல், உப்பு சேர்த்துக் கலந்து நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் புளிக்கவிடவும். புளித்த மாவை அதிகம் கிளறாமல் ஒரு பக்கமாகவே மாவை எடுத்து, இட்லித் தட்டில் ஊற்றி மூடிவைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும். இட்லிகளை எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

இட்லி மேளா!
இட்லி மேளா!


அடை இட்லி

பருப்பு வகைகள், அரிசி, காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய் அல்லது முருங்கைக்கீரை சேர்ப்பதாக இருந்தால் ஒரு கப் சேர்த்துக்கொள்ளவும். இட்லிப் பானையில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். ஓர் ஈடு இட்லி வார்ப்பதற்குத் தேவையான அளவு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் கால் டீஸ்பூன் ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேலே ஒரு டீஸ்பூன் தண்ணீர்விட்டுக் கலந்துகொள்ளவும். உடனடியாக இட்லித் தட்டில் ஊற்றி மூடிவைத்து 12-15 நிமிடங்கள் வேகவிடவும். மூடியைத் திறந்து, வெந்த இட்லியை ஒரு குச்சியால் அடி வரை குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இட்லிகளை எடுத்துச் சூடாகப் பரிமாறவும். 

இட்லி மேளா!

கோதுமை இட்லி

இதற்கு முழு சம்பா கோதுமை அல்லது எந்த ரக கோதுமையாக இருந்தாலும் பயன்படுத்தலாம். கோதுமையை அரிசி உடன் சேர்த்து எட்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். உடைத்த கோதுமை அல்லது கோதுமை ரவை பயன்படுத்தியும் இட்லி செய்யலாம். இதை மூன்று மணி நேரம் ஊறவைத்தால் போதுமானது. பொருள்களின் அளவு அதேதான். மாற்றம் கிடையாது. 

இட்லி மேளா!

மேற்கூறிய முறைப்படி இட்லி மாவு அரைத்து, புளிக்க வைத்து இட்லி வார்க்கவும். இட்லிகளை எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism