ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

வெப்பம் தடுப்போம்!

வெப்பம் தடுப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெப்பம் தடுப்போம்!

கார் / சம்மர் டிப்ஸ்ரஞ்சித் ரூஸோ

கோடைக் காலத்தில் நம்மைப் பாதுகாக்க எப்படி பருத்தி ஆடை, இளநீர், தர்பூசணி உள்ளதோ, அதேபோல காருக்கும் வெயிலைச் சமாளிக்க சில வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றினால், தகிக்கும் வெயிலில் மெக்கானிக்கைத் தேடி அலைய வேண்டியது இருக்காது. வெப்பம் தடுப்போம்!

வெப்பம் தடுப்போம்!

பர்ஃபாமென்ஸ்

வெப்பமான இடத்தில் பார்க் செய்யப்பட்டிருந்த காரில் பயணிப்பதற்கு முன்பு, கண்ணாடி ஜன்னல்களை திறந்துவைத்துவிட்டு, ப்ளோயரை அதிகபட்ச வேகத்தில் 2 நிமிடங்கள் ஓடவிட்டால் போதும். காருக்குள் இருக்கும் வெப்பக் காற்று வெளியேறிவிடும். அதன் பின்பு, ஜன்னல்களை மூடிவிட்டு, ஏ.சி-ஐ ஆன் செய்து காரைச் செலுத்துங்கள்.

வெப்பம் தடுப்போம்!

இன்ஜின் ஆயில்

இன்ஜினில் ஆயில் சரியான அளவில் இருந்தால் மட்டும் போதாது; சரியான கிரேடு ஆயில் பயன்படுத்தவேண்டும். சரியான கால இடைவெளியில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். காலம் கடந்த இன்ஜின் ஆயில், மசகுத் தன்மை குறைந்து இன்ஜின் பாகங்கள் விரைவாகத் தேய்ந்துபோகும் வாய்ப்பு உண்டு.

வெப்பம் தடுப்போம்!

ஏ.சி

ஏர் ஃபில்ட்டரையும், கன்டன்ஸரையும் அவ்வப்போது சுத்தப்படுத்தினாலே, ஏ.சி-யில் ஏற்படும் பல பிரச்னைகளைத் தடுத்துவிடலாம்.

வெப்பம் தடுப்போம்!

இன்ஜின் கூலன்ட்

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியின்படி கூலன்ட் மாற்ற வேண்டும்.

வெப்பம் தடுப்போம்!

பேட்டரி

வெயில் காலத்தில் பேட்டரி அதிக வெப்பத்தில் இயங்க வேண்டியிருப்பதால், அதில் இருக்கும் திரவம் விரைவாக ஆவியாகும். அதனால், அடிக்கடி திரவ அளவைச் சோதித்து, டாப் அப் செய்ய வேண்டியது அவசியம்.

வெப்பம் தடுப்போம்!

பேட்டரி டெர்மினல் சுத்தம் செய்யவில்லை என்றால், அதில் படர்ந்திருக்கும் தூசு மின்சாரத்தைக் கடத்த ஆரம்பித்துவிடும். இதனால், சார்ஜ் வீணாகும். எனவே, டெர்மினலைச் சுத்தம் செய்வது அவசியம். அதேபோல், டெர்மினல்களில் துருப்பிடித்திருந்தால், அவை ‘இன்சுலேட்டர்’ ஆக மாறிவிடும். இதனால், மின்சாரம் கடத்தப்படும் திறன் குறைந்துவிடும். ஆகவே, பேட்டரியை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

டயர்கள்

காற்றின் வெப்பமும், சாலையின் வெப்பமும் அதிகமாக இருந்தால் பயணத்தின்போது டயர் வெடிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால், டயர் கடினமாகவும் வெடிப்புகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெப்பம் தடுப்போம்!

டயர்களில் காற்றழுத்தம் மிகச் சரியானதாக இருக்க வேண்டும். குறைந்த காற்றழுத்தம் இருந்தால், டயரில் மிகவும் அதிகமான வெப்பம் உருவாவதோடு மட்டுமல்லாமல், தேய்மானம் அதிகரித்துவிடும். தேவைக்கு அதிகமான காற்றழுத்தம் இருந்தால், டயரின் நடுப்பகுதி மட்டும் சாலையில் உரசும். இதனால், மிக வேகமாக ட்ரெட்டுகள் தேய்ந்து க்ரிப் குறைந்துவிடும்.