`கோடை கொளுத்தினால் என்ன? ஜோராக சூப் சாப்பிடலாம் வாங்க’ என்று அழைக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல் அளிப்பது அத்தனையும் ஜில் ரகம்.

ஆம்... கொதிக்கக் கொதிக்க சூப் சாப்பிட்டுப் பழகிய பலருக்கும் இது புதிய அனுபவம். கோல்டு சூப் வகைகளோடு, வெயில் காலத்தில் சாப்பிட வித்தியாசமான சாலட் வகைகளையும் அழகிய படங்களோடு அளிக்கிறார் அகிலா. இவை அனைத்தும் ஆரோக்கியம் நல்கும் அருமையான தயாரிப்புகள் என்பது கூடுதல் சிறப்பு.

ஜில்லுனு ஒரு சூப்... ஜம்முனு ஒரு சாலட்... சம்மரில் சாப்பிடப் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்க வேறென்ன வேண்டும்?

ஃப்ரெஷ் ஃப்ரூட் சூப்

தேவையானவை:

ஆரஞ்சுச் சாறு - ஒரு லிட்டர்
பட்டைத்தூள் - 2 சிட்டிகை
சர்க்கரை - அரை கப்
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்
வாழைப்பழம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
விதையில்லா பச்சை திராட்சை - கால் கப் (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய செர்ரி பழங்கள் (அ) மாதுளை முத்துகள் - சிறிதளவு

செய்முறை:

சோள மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். ஆரஞ்சுச் சாற்றுடன் பட்டைத்தூள், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதனுடன் சோள மாவுக் கரைசல் சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்யவும். பரிமாறும்போது வாழைப்பழம், திராட்சை, செர்ரி சேர்த்து சூப் பவுல்களில் பரிமாறவும்.

கோல்டு ஆலிவ் சூப் (Cold Olive Soup)

தேவையானவை:

விதை நீக்கி நறுக்கிய ஆலிவ் பழங்கள் - அரை கப்
வெஜ் ஸ்டாக் (அ) சிக்கன் ஸ்டாக் - ஒரு கப்
கெட்டித் தயிர் - ஒரு கப்
வெள்ளரிக்காய் - பாதியளவு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
புதினா இலைகள் - சிறிதளவு

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து நன்கு குளிரவைத்துப் பரிமாறவும்.

ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் சூப்

தேவையானவை:

நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி
பழங்கள் - ஒரு கப்
ஐஷிங் சுகர் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
தயிர் - ஒன்றரை கப்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து மிக்ஸியில் அடித்தெடுத்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

பைனாப்பிள் சால்ஸா

தேவையானவை:

பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 2 கப்
பச்சை மிளகாய் (அ) ஹாலபென்யோ மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் - பாதியளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும். 20 நிமிடங்கள் கழித்து சிப்ஸ் (அ) பப்பட் (அ) சிக்கன் ரோஸ்ட் உடன் சேர்த்துப் பரிமாறலாம்.

கிளாசிக் விஷிஸ்வாஸ்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 300 கிராம் (தோல் சீவி, சிறிய துண்டுகளாக்கவும்)
லீக் தண்டு - 3 (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை - ஒன்று
ரோஸ்மேரி இலைகள் - அரை டீஸ்பூன்
வெஜ் ஸ்டாக் (அ) சிக்கன் ஸ்டாக் - அரை லிட்டர்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
கடைந்த பாலேடு, ரோஸ்மேரி இலைகள் - அலங்கரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம், பிரியாணி இலை, ரோஸ்மேரி, நறுக்கிய லீக் தண்டுகள் சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்குத் துண்டுகள் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வதக்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், வெஜ் (அ) சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி மூடி நான்கு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து பிரியாணி இலையைத் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள பொருள்களை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாகக் குளிரவைக்கவும். பரிமாறும்போது கடைந்த பால் ஏடு, ரோஸ்மேரி இலைகள், சிறிதளவு மிளகுத்தூள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

வாட்டர்மெலன் காஸ்பாசோ

தேவையானவை:

அரைக்க:

விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 2 கப்
தக்காளி - ஒன்று (வேகவைத்து அரைக்கவும்)
மிளகாய்ப்பழம் - ஒன்று
தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு
வெள்ளரிக்காய் - பாதியளவு (பொடியாக நறுக்கி, விதைகளை நீக்கவும்)
ஆலிவ் எண்ணெய் - கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க:

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

கிரீக் சாலட்

தேவையானவை:

வெள்ளரிக்காய் - 2 (அரை வட்ட வடிவமாக நறுக்கி, விதைகளை நீக்கவும்)
வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (சதுரங்களாக நறுக்கவும்)
ஆலிவ் பழங்கள் - 3 (பொடியாக நறுக்கவும்)
ஆலிவ் எண்ணெய் - கால் கப்
ரெட் வைன் வினிகர் (அ) சாதாரண வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
ஆரிகானோ சீஸனிங் - 2 டீஸ்பூன்
சீஸ் ஸ்லைஸ் - 2
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஆலிவ் எண்ணெயுடன் வினிகர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, ஆரிகானோ சீஸனிங் சேர்த்துக் கலக்கவும். இதுவே டிரெஸ்ஸிங். ஒரு பவுலில் வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, ஆலிவ் பழத்துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் டிரெஸ்ஸிங்கை சேர்த்துக் குலுக்கி விடவும். பரிமாறும்போது சீஸ் ஸ்லைஸை கைகளால் உதிர்த்துத் தூவிப் பரிமாறவும்.

ஸ்வீட் பொட்டேட்டோ சாலட் வித் பொமெக்ரானேட் டிரெஸ்ஸிங்

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ (வேகவைத்து, தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்)
மாதுளை முத்துகள் - அரை கப்
பாதாம் - 5 (பொடியாக நறுக்கவும்)

டிரெஸ்ஸிங் செய்ய:

மாதுளைச்சாறு (தண்ணீர் சேர்க்காதது) - அரை கப்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

டிரெஸ்ஸிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு துண்டுகளுடன் மாதுளை முத்துகள் சேர்த்துக் கலக்கவும். அதன்மீது டிரெஸ்ஸிங்கை ஊற்றி நன்கு குலுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய பாதாம் தூவிப் பரிமாறவும்.

மக்ரோனி சாலட்

தேவையானவை:

மக்ரோனி பாஸ்தா - 150 கிராம் (வேகவைத்து வடிகட்டவும்)
செலரி தண்டு - 2 (பொடியாக நறுக்கவும்)
சிவப்புக் குடமிளகாய் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
கறுப்பு ஆலிவ் பழங்கள் - 6 (வட்டமாக நறுக்கவும்)
மயோனைஸ் - அரை கப்
பூண்டு - 3 பல் (நசுக்கவும்)
வினிகர் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மயோனைஸுடன் பூண்டு, வினிகர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பாஸ்தாவுடன் நறுக்கிய செலரித்தண்டு, குடமிளகாய், ஆலிவ் பழத்துண்டுகள், மயோனைஸ் கலவை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

டொமேட்டோ - பனீர் அக்கார்டியன் சாலட்

தேவையானவை:

பெங்களூர் தக்காளி - 4 (ப்ளஸ் போல பிளக்கவும்)
ஆலிவ் எண்ணெய் - கால் கப்
பனீர் - 100 கிராம் (மெல்லியதாக நறுக்கவும்)
ஆரிகானோ சீஸனிங் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
துளசி இலைகள் (அ) பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஆலிவ் எண்ணெயுடன் பனீர் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், ஆரிகானோ சீஸனிங் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையைத் தக்காளியின் உள்ளே வைத்து, மேலே துளசி இலைகள் (அ) கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ஸ்ட்ராபெர்ரி சால்ஸா

தேவையானவை:

நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - ஒரு கப்
வெங்காயம் - கால் பகுதி (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைத் தோல் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நாசோஸ் (அ) சிப்ஸ் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்துடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், எலுமிச்சைச் சாறு, எலுமிச்சை தோல் துருவல், உப்பு சேர்த்துக் கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். நாசோஸ்(அ) சிப்ஸுடன் பரிமாறவும்.

ஈஸி சிக்கன் சீஸர் சாலட்

தேவையானவை:

எலும்பில்லா சிக்கன் துண்டுகள் - 350 கிராம்
நடுத்தர அளவு லெட்யூஸ் - ஒன்று
பிரெட் ஸ்லைஸ் - 4 (நறுக்கவும்)
முட்டை - 3 (வேகவைத்து நான்கு துண்டுகளாக நறுக்கவும்)
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

டிரெஸ்ஸிங் செய்ய:

மயோனைஸ் - அரை கப்
பூண்டு - 4 பல்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை

சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி வைக்கவும். தோசைக்கல்லில் பிரெட் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாக, மொறுமொறுவென டோஸ்ட் செய்து எடுக்கவும். டிரெஸ்ஸிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுக்கவும் (கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும்). வாணலியில் ஆலிவ் ஆயில் விட்டு, அடுப்பை அதிக தீயில் வைத்து, சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வேகும் வரை புரட்டி எடுக்கவும். (மேலே பொன்னிறமாக இருக்க வேண்டும்). அகலமான பாத்திரத்தில் லெட்யூஸ் இலைகள், சிக்கன், பிரெட் துண்டுகள், முட்டை ஆகியவற்றைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். அதன்மீது டிரெஸ்ஸிங்கை ஊற்றி சாலட் பவுல்களில் போட்டு உடனடியாகப் பரிமாறவும்.

ஃப்ரூட் அண்டு குக்கீ பீட்சா

தேவையானவை:

பேஸ் செய்ய:

டைஜஸ்டிவ் பிஸ்கட் - 200 கிராம்
உருக்கிய வெண்ணெய் - 3 டீஸ்பூன்

சீஸ் செய்ய:

க்ரீம் சீஸ் (அ) ஃப்ரெஷ் பனீர் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

டாப்பிங் செய்ய:

ஆரஞ்சுச் சுளைகள் - 7
மாதுளை முத்துகள், பப்பாளித் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள், பச்சை, கறுப்பு திராட்சை - தேவையான அளவு

கிளேஸ் செய்ய:

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - கால் கப்
பொடித்த அகர்அகர், சைனா கிராஸ் - 2 சிட்டிகை

செய்முறை:

பிஸ்கட்டை ஒரு ஜிப் லாக் கவரினுள் போட்டு மூடி சப்பாத்தி கட்டையால் தேய்த்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். ஆறு (அ) ஏழு இன்ச் தட்டினுள் பட்டர் பேப்பரை விரித்து பிஸ்கட் கலவையைச் சமமாகப் பரப்பி அழுத்தவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதுவே பீட்சா பேஸ். க்ரீம் சீஸுடன் வெனிலா எசென்ஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். கிளேஸ் செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

சைனா கிராஸ் கரைந்த பின் இறக்கி ஆறவிடவும் செட் செய்த பீட்சா பேஸை வெளியில் எடுத்து, அதன்மீது சீஸ் கலவையைத் தடவவும். பிறகு பழங்களைப் பதிக்கவும். பழங்களின்மீது கிளேஸ் செய்த கலவையைத் பிரஷ்ஷால் தடவவும். பிறகு ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்ந்த பிறகு பரிமாறலாம்.

குறிப்பு: கிளேஸ் இல்லாமலும் பீட்சா செய்யலாம். கிளேஸ் செய்வதால் பழங்கள் பளபளப்பாகவும், நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.