Published:Updated:

திண்டுக்கலில் புகார் கொடுக்கச் சென்றவரை தாக்கிய போலீஸ்!

திண்டுக்கலில் புகார் கொடுக்கச் சென்றவரை தாக்கிய போலீஸ்!
திண்டுக்கலில் புகார் கொடுக்கச் சென்றவரை தாக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் ஆத்தூர் தே.மு.தி.க ஒன்றியப் பொருளாளராக இருக்கிறார். ஆத்தூர் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளை மற்றும் சமூக விரோதச் செயல்கள் குறித்து கலெக்டர், எஸ்.பி ஆகியோருக்கு வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிப்பது வழக்கம். கடந்த சில நாள்களுக்கு முன்பாக சித்தரேவு பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. சில, நாள்களில், சமூகவிரோதிகள் சிலர், தடுப்பணையை  உடைத்து அதில் இருந்த கல் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்று விட்டனர். இதைப் புகைப்பட ஆதாரத்துடன்  கலெக்டர் வாட்ஸ்அப்  எண்ணுக்கு வெள்ளையப்பன் அனுப்பியுள்ளார்.

திண்டுக்கலில் புகார் கொடுக்கச் சென்றவரை தாக்கிய போலீஸ்!

அதனடிப்படையில் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை விசாரிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தடுப்பணையை உடைத்தது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.  அதனால், பட்டிவீரன்பட்டி போலீஸார், சந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் சென்ற வெள்ளையன், சித்தரேவு பகுதியில் மணல் மற்றும் தடுப்பணையில் கற்களைத் திருடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனப் புகார் மனுவைக் கொடுத்துள்ளார். ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லிய போலீஸார், அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர். ஆனால், வழக்கு பதியாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக வெள்ளையன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, வெள்ளையனுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கலைவாணி, வெள்ளையனைக் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்கிறார்கள். 

திண்டுக்கலில் புகார் கொடுக்கச் சென்றவரை தாக்கிய போலீஸ்!

இது தொடர்பாக பேசிய வெள்ளையன், `` நான் பேசிக்கிட்டு இருக்குறப்ப அங்க வந்த இன்ஸ்பெக்டர், `சந்திரன் மேல கேஸ் போட்டாச்சு. எல்லோரும் வெளிய போங்கடான்'னு மரியாதை இல்லாம திட்டுனாங்க. அப்ப நான், ஏன் மேடம், புகார் கொடுக்க வந்த எங்களை விரட்டுறீங்க. தப்பு செஞ்சவங்களுக்கு சாதகமா இருக்கீங்களேன்னு  கேட்டேன்.  உடனே கோபமானவங்க, `நீ வாய்ல சொன்னா கேக்கமாட்டே'னு சொல்லிகிட்டே கடுமையா அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. உடனே அங்கயிருந்த போலீஸ்காரங்க, ரெண்டு பக்கமும் என் கையைப் பிடிச்சுகிட்டாங்க. அடிச்ச அடியில கை வீங்கிப்போச்சு. உடம்பெல்லாம் ஊமைக்காயம். அரை மணி நேரம் அடிச்சவங்க, நைட் 10 மணி வரைக்கும் உக்கார வெச்சிருந்தாங்க. அப்புறம் வெளிய போன்னு விரட்டி விட்டுட்டாங்க.  நான் பட்டிவீரன்பட்டி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலப் போய்ச் சேர்ந்தேன். அங்க முதலுதவி மட்டும் செஞ்சவங்க, நீங்க திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போங்கன்னு சொல்லிட்டாங்க. அங்கிருந்து திண்டுக்கல் மருத்துவமனை வந்தா, இங்க அட்மிஷன் போட மாட்டேங்குறாங்க" என்றார் வேதனையுடன்.
 

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கலைவாணியிடம் பேசினோம். `` பி.டி.ஓ சார் சொன்னதால சந்திரன் தரப்பு மேல எப் ஐ ஆர் போட்டுட்டோம். இது தெரியாம வெள்ளையன் புகார் கொடுக்க வந்திருக்காரு. ஸ்டேஷன்ல இருந்தவங்க எஃப்.ஐ.ஆர் போட்டுட்டோம் நீங்க போங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, அதை காதுலயே வாங்கிக்கலை. போலீஸ் காசு வாங்கிட்டு ஒன்சைடா நடந்துக்குறீங்கன்னு வாய்க்கு வந்தபடி கேவலமா பேச ஆரம்பிச்சுட்டாரு. ரோட்டுக்கு போய் நின்னுகிட்டு ரொம்ப மோசமான வார்த்தையில போலீஸை திட்டினாரு. அதனால உள்ள கூப்பிட்டு வந்து, அவரு மேல ஒரு கேஸைப் போட்டு, ஜாமீன்ல விட்டுட்டோம்" என்றார்.
 
`அவர் கையில் வீக்கம் இருக்கிறது. உடலில் காயங்கள் இருக்கின்றனவே?" எனக் கேட்டோம். அவர் கீழே விழுந்ததுல அடிபட்டிருக்கலாம். அதுக்கு  நாங்க எப்படி பொறுப்பாக முடியும்" என்றார்.